Published:Updated:

ஆஸ்கருக்குப் பிறகு 46 டாலரிலிருந்து 341 டாலரான டிக்கெட் விலை; ஷோவில் மனம் திறந்த கிறிஸ் ராக்!

கிறிஸ் ராக்

“நான் சில ஜோக்குகள் சொல்ல இருக்கிறேன். அது நிச்சயமாக நல்லவையாக தான் இருக்கும்” என அந்த ஷோவில் பேசியிருக்கிறார் கிறிஸ் ராக்.

ஆஸ்கருக்குப் பிறகு 46 டாலரிலிருந்து 341 டாலரான டிக்கெட் விலை; ஷோவில் மனம் திறந்த கிறிஸ் ராக்!

“நான் சில ஜோக்குகள் சொல்ல இருக்கிறேன். அது நிச்சயமாக நல்லவையாக தான் இருக்கும்” என அந்த ஷோவில் பேசியிருக்கிறார் கிறிஸ் ராக்.

Published:Updated:
கிறிஸ் ராக்

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் விழா எதற்காக நினைவுகூறப்படுகிறதோ இல்லையோ வில் ஸ்மித், கிறிஸ் ராக்கைத் தாக்கிய சம்பவத்திற்காக இனி காலத்துக்கும் நினைவில் கொள்ளப்படும். இந்த நிகழ்வைத் தொடர்ந்து அகாதமியும் யூனியனும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது, வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டது என இந்த நிகழ்வு பற்றிய செய்திகளும் விவாதங்கள் சமூக வலைத்தளங்கள் எங்கும் நிறைந்த நிலையிலும் கிறிஸ் ராக் அதை பற்றி பெரிதாக பேசவில்லை. அவர் புகார் கொடுக்க போவதில்லை என்பது மட்டும் செய்தியாக வெளியானது. இந்நிலையில் கிறிஸ் ராக் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த காமெடி ஷோவில் கலந்து கொண்டார். 

கிறிஸின் காமெடி நிகழ்ச்சிக்கான ஒரு டிக்கெட் விலை குறைந்தபட்சம் 46 டாலராக முன்பு இருந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு குறைந்தபட்ச விலை 341 டாலர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஒரு மாத காலமாக விற்ற டிக்கெட்களை இந்த வாரம் அதிகமான டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டன என ஆன்லைன் டிக்கெட் விற்பனை தளம் தெரிவிக்கிறது.
கிறிஸ் ராக்
கிறிஸ் ராக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த நிகழ்ச்சியில் கிறிஸ் ஆரம்பிக்கும்போதே, “இந்த வீக் என்ட் உங்களுக்கு எப்படி போனது” எனத் தொடங்குகிறார், அரங்கு முழுக்க சிரிப்பலைகள் எழ, “என்ன நடந்துச்சு என சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை, அதனால் நீங்கள் அந்த நிகழ்வை பற்றி கேட்பதற்கு இங்கு வந்தால், இந்த முழு ஷோவுக்கான ஸ்கிரிப்ட் இந்த வாரக்கடைசிக்கு முன்பே நான் எழுதியது. என்ன நடந்தது என்பதை பற்றி நான் இன்னும் யோசிக்கிறேன். சில சமயங்களில் அந்த நிகழ்வை பற்றி குறிப்பிடுவேன். அது நிச்சயமாக சீரியஸாகவும் சிரிக்கக்கூடியதாகவும் இருக்கும்” என ஷோவில் பேசி இருக்கிறார். “நான் சில ஜோக்குகள் சொல்ல இருக்கிறேன். அது நிச்சயமாக நல்லவையாக தான் இருக்கும்” என்கிறார். அந்த நிகழ்வுக்கு காரணமாக இருந்த ஜோக் தரக்குறைவானதாக இருந்ததால் தான் வில் ஸ்மித் தாக்கினார் என விமர்சிக்கப்படுவதற்கு பதிலளிக்கும் விதமாக கிறிஸ் இப்படி சொல்லி இருக்கிறார் போல. 

முன்னர் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாதமி அமைப்பு, “மிஸ்டர் ராக் எங்களுடைய மேடையில் நீங்கள் எதிர்கொண்ட நிகழ்வுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். அந்த நேரத்தில் நீங்கள் பக்குவமாக கையாண்டதற்காக நன்றி” என அறிவித்திருந்தது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism