Published:Updated:

`வா வா என் தேவதையே...' - மகளின் 20 வருட டைம்லாப்ஸ் வீடியோவை வெளியிட்ட தந்தை!

மகள் ( @reddit )

தந்தை ஒருவர் தன்னுடைய மகளின் 20 ஆண்டுக்கால புகைப்படங்களை டைம்லாப்ஸ் வீடியோவாக மாற்றியுள்ளார்.

`வா வா என் தேவதையே...' - மகளின் 20 வருட டைம்லாப்ஸ் வீடியோவை வெளியிட்ட தந்தை!

தந்தை ஒருவர் தன்னுடைய மகளின் 20 ஆண்டுக்கால புகைப்படங்களை டைம்லாப்ஸ் வீடியோவாக மாற்றியுள்ளார்.

Published:Updated:
மகள் ( @reddit )

தன்னை ஈன்றெடுத்த தாய்,, தன்னுடன் காலம் முழுக்க வாழும் மனைவி... இவர்களையெல்லாம் தாண்டி, ஆண்களுக்கு என்னவோ தன்னுடைய மகள்களை கொஞ்சம் அதிகம் பிடித்து விடுகிறது. தன் சாயலின் பெண் உருவம்தான் தன் மகள், யாருக்கும் அடங்கா கோபம்கூட மகளின் முகம் காணும் வேளையில் சுக்குநூறாக உடைந்துவிடுகிறதே என மகள்களின் மீது அதீத பிரியம் வைக்கிறார்கள். 

Daughter (Representational Image)
Daughter (Representational Image)
Image by Ratna Fitry from Pixabay

மகள் பிறந்தநாள் முதல், அவளுக்காக நிறையவே அப்பாக்கள் மெனக்கெடுகிறார்கள். தான் அனுபவிக்காத இன்பங்களை தன்னுடைய மகளுக்குத் தருவதில் பூரித்துப் போகிறார்கள்.

`என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல, எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை' என செல்ல மகளின் குறும்புத்தனங்களைப் புகைப்படங்களாகவும், விடீயோக்களாகவும் எடுத்து தங்கள் இதயத்தில் புதைத்துக் கொள்கிறார்கள்.

இதற்கு இன்னும் ஒருபடி மேலே போய், தந்தை ஒருவர் தன்னுடைய மகளின் 20 ஆண்டுக்கால புகைப்படங்களை டைம்லாப்ஸ் வீடியோவாக மாற்றியுள்ளார். அதை ரெட்டிட்டில் (Reddit) இருக்கும் எஸ்பெராட் என்பவர் வெளியிட்டுள்ளார்.

அதில், `ஒரு தந்தை தன் மகள் 20 வயதை அடையும்வரை எடுத்த புகைப்படங்களைப் பயன்படுத்தி ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளார்' என்று குறிப்பிட்டு இருந்தார். இது தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுவருகிறது. 

2 நிமிடம் 18 விநாடிகள் உள்ள அந்த வீடியோவில், அழகான குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. பல் முளைத்து, முடிவளர்ந்து, குறுநகையோடு கொஞ்சம் கொஞ்சமாக தனக்கே உரித்தான தனி இயல்போடு அப்பெண் வளர்ந்து தோற்றமளிக்கிறார்.

வீடியோ யூடியூபரும், டச்சு இயக்குநருமான பிரான்ஸ் ஹாஃப்மீஸ்டரால், இந்த வீடியோவை பதிவுசெய்து, 2019 -ல் வெளியிட்டிருக்கிறார். அதாவது ஒவ்வொரு வாரமும் ஒரே போர்வையின் பின்னணியில், குழந்தையைப் படமெடுத்துள்ளார். லோட்டே என்று அறியப்படும் அந்தப் பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுவருகிறது. 

வா வா என் தேவதையே...!