Published:Updated:

மியா கலிஃபா விவாகரத்து : ''கணவரைப் பிரிந்ததற்காக வருத்தப்படாதீர்கள்... வாழ்த்து சொல்லுங்கள்!”

மியா கலிஃபா - சாண்ட்பெர்க்
மியா கலிஃபா - சாண்ட்பெர்க்

திருமணம் ஆகி ஓராண்டு முடிந்ததிருந்த நிலையில், சாண்ட்பர்க் உடனான தன்னுடைய மணவாழ்வு முடிவுக்கு வந்திருப்பதாக மியா கலிஃபா அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பாலுறவுப் பட நடிகையான மியா கலிஃபா, தன்னுடைய கணவர் ராபர்ட் சாண்ட்பர்க் உடனான மணமுறிவை அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், ஓராண்டிலேயே இந்தத் திருமணம் முடிவுக்கு வந்திருப்பது அவரது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மியா கலிஃபா - சாண்ட்பெர்க்
மியா கலிஃபா - சாண்ட்பெர்க்

அக்டோபர் 2014-ல் இருந்து பாலுறவுப் படங்களில் நடிக்கத் தொடங்கிய மியா, மிகக் குறுகிய காலத்திலேயே மிக அதிகப் பார்வையாளர்களை ஈர்க்கும் நடிகையாக உருவெடுத்தார். பாலுறவுப் படமொன்றில் ஹிஜாப் அணிந்து இவர் தோன்றியது மத்திய கிழக்கு நாடுகளில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மியா பாலுறவுப் படங்களில் நடிப்பதிலிருந்து விலகிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அதிகப் பார்வையாளர்களை ஈர்க்கும் நடிகைகள் வரிசையில் இரண்டாம் இடத்தில் தொடர்ந்தார். இத்தனைப் புகழ்பெற்ற மியா, 2019-ல் வழங்கிய நேர்காணல் ஒன்றில், இத்துறையில் தான் இதுவரை சம்பளமாகப் பெற்ற தொகை வெறும் 12 ஆயிரம் டாலர்கள் என்ற தகவலை வெளிப்படுத்தியபோது உலகம் அதிர்ந்தது.

“நான் ஒன்றும் பாலுறவுப் பட நடிகையாக இருந்து புகழ்பெற்றதற்காகப் பெருமைகொள்ளவில்லை. பொருளாதார நிலை அப்படியாக்கிவிட்டது. இந்தத் துறையில் பெண்களைச் சட்டபூர்வமாக ஒப்பந்தம்செய்து சிக்கவைப்பார்கள். ஒவ்வொருவரின் பொருளாதாரத் தேவையை அறிந்துகொண்டு இப்படிப்பட்ட குறைவான சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள்’’ என்று அந்த நேர்காணலில் மியா கூறியிருந்தார்.

மியா கலிஃபா
மியா கலிஃபா

மூன்று மாதங்கள் பாலுறவுப் பட நடிகையாகப் பணியாற்றிய பிறகு, சமூக வலைத்தள ஆளுமையாக பரிணமித்தார் மியா. யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி நடத்திவரும் மியா, விளையாட்டுப் போட்டி வர்ணனையாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியத் தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மியா ட்வீட் செய்திருந்தது இந்திய இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தகையை பின்னணியைக் கொண்ட மியா கலிஃபா, சக நடிகரும், சமையல் கலைஞருமான ஸ்வீடனைச் சேர்ந்த ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதே மாதம் இருவரும் மிக எளிமையான முறையில் வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டனர்.

மியா கலிஃபா - ராபர்ட் சாண்ட்பர்க்
மியா கலிஃபா - ராபர்ட் சாண்ட்பர்க்

திருமணம் ஆகி ஓராண்டு முடிந்ததிருந்த நிலையில், சாண்ட்பர்க் உடனான தன்னுடைய மணவாழ்வு முடிவுக்கு வந்திருப்பதாக மியா கலிஃபா அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மணமுறிவு குறித்து உருக்கமான குறிப்பு ஒன்றைத் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மியா வெளியிட்டுள்ளார்.

“கடந்த ஓராண்டுக்கும் மேலாக எங்களது திருமண உறவைத் தக்கவைத்துக்கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. அதனால், மணமுறிவு செய்துகொள்ள முடிவெடுத்துள்ளோம். நாங்கள் இருவரும் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும், எங்களது நட்பைப் தொடர முடிவு செய்துள்ளோம்” என்று மியா அந்தக் குறிப்பில் கூறியுள்ளார்.

மேலும், “மணமுறிவு பெறுபவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள்” என்றும் அவர் கூறியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னதாக மியா கலிஃபா, கடந்த 2011-ம் ஆண்டு தனது பள்ளிக் காதலனைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டில் அவரிடமிருந்து மணமுறிவு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு