Published:Updated:

Netflix: 100 நாள்களுக்குள் 2,00,000 சப்ஸ்கிரைபர்களை இழந்ததன் பின்னணி என்ன?

Netflix (Representational Image)

நெட்ஃப்ளிக்ஸ் கடந்த ஜனவரியிலிருந்து மார்ச் வரையில் சுமார் 100 நாள்களுக்குள் 2,00,000 சந்தாதாரர்களை இழந்துள்ளது.

Netflix: 100 நாள்களுக்குள் 2,00,000 சப்ஸ்கிரைபர்களை இழந்ததன் பின்னணி என்ன?

நெட்ஃப்ளிக்ஸ் கடந்த ஜனவரியிலிருந்து மார்ச் வரையில் சுமார் 100 நாள்களுக்குள் 2,00,000 சந்தாதாரர்களை இழந்துள்ளது.

Published:Updated:
Netflix (Representational Image)

உலகின் முன்னணி ஓ.டி.டி தளமான நெட்ஃப்ளிக்ஸ் கடந்த ஜனவரியிலிருந்து மார்ச் வரையில் சுமார் 100 நாள்களுக்குள் 200,000 சந்தாதாரர்களை இழந்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். கோவிட் காலங்களில் அதிகரித்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது என்றும் தாங்கள் நினைத்த அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை என்று நெட்ஃப்ளிக்ஸ் கூறுகிறது.

மேலும் உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதாக நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்திருந்தது. நெட்ஃப்ளிக்ஸின் இந்த முடிவின் விளைவாக பல சந்தாதாரர்களை இழக்க நேரிட்டது என்று கூறப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக நெட்ஃப்ளிக்ஸ் இந்தச் சரிவைச் சந்தித்திருக்கலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நெட்பிளிக்ஸ் Netflix
நெட்பிளிக்ஸ் Netflix
நெட்பிளிக்ஸ் கட்டணம் அதிரடி குறைப்பு

ஏற்கெனவே ஒரே கணக்கைப் பலர் பாஸ்வேர்ட் ஷேர் செய்து பயன்படுத்துவதால் தங்களின் முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக நெட்ஃப்ளிக்ஸ் இயக்குநர் செங்கி லாங் கூறியிருந்தார். இதைத் தவிர்க்க புதிய திட்டங்களைக் கொண்டுவரப் போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தித்துள்ள இந்தச் சரிவை சரிசெய்யவும் சந்தாதார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆலோசனை நடத்திவருவதாக நெட்ஃபிளிக்ஸ் கூறியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism