Published:Updated:

ஒரு மணிநேரத்தில் 249 கப் டீ தயாரித்து கின்னஸ் சாதனை!பின்னணி இதுதான்...

Ingar Valentyn ( Guinness World Records )

வேகமாகச் செயல்பட்ட இங்கார், எப்படியும் தான் 150 என்ற இலக்கை தாண்டி இருப்பதாக யூகித்தாலும், அவர் 250 கப் டீயை தயாரித்த விவரம் இறுதியாகவே அவருக்குத் தெரிந்தது.

பல விநோதமான திறமைகளைத் தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது, கின்னஸ் உலக சாதனை. அந்த வரிசையில் அனைவருக்கும் பிடித்தமான டீயை தயாரித்து அசத்திய பெண்ணின் சாதனையை கின்னஸ் அங்கீகரித்துள்ளது.

ஒரு மணிநேரத்தில் 249 கப் டீ தயாரித்து கின்னஸ் சாதனை!பின்னணி இதுதான்...

`டீ தானே... இதுல என்ன சாதனை இருக்கப்போகுது' என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒரு மணி நேரத்தில், சுமார் 249 கப் டீ தயாரித்து சாதனை படைத்துள்ளார், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் (Ingar Valentyn).

இதற்காக, தென்னாப்பிரிக்காவின் அஸ்பாலதஸ் லினேரிஸ் தாவரத்தில் இருந்து, ரூய்போஸ் (Rooibos tea) எனப்படும் ரெட் ஹெர்பல் டீயைத் தேர்ந்தெடுத்து, வெனிலா, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட 3 வகையான சுவையில் டீயைத் தயாரித்து அசத்தியுள்ளார். முந்தைய சாதனையை முறியடிக்க 150 கப் டீயை மட்டும் தயாரித்தால் போதும் என்ற நிலையில், இவரோ 249 கப் டீ தயாரித்துள்ளார்.

முதலில் டீ குடிக்கும் உள்ளூர்வாசிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு அமர வைத்திருந்தனர் கின்னஸ் குழுவினர். அவர்களுக்கு இங்கார் தயாரிக்கும் டீ கொடுக்கப்பட்டது. டீ பரிமாற சுத்தமான கப்களுக்கு 20 நிமிடங்கள் வரை தட்டுப்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் தாமாக முன்வந்து தாங்கள் பருகிய கப்களை கழுவிக் கொடுத்து அவருக்கு உதவி செய்தனர்.

வேகமாகச் செயல்பட்ட இங்கார், எப்படியும் தான் 150 என்ற இலக்கைத் தாண்டி இருப்பதாக யூகித்தாலும், அவர் 250 கப் டீயை தயாரித்த விவரம் இறுதியாகவே அவருக்குத் தெரிந்தது. அதுவும் ஒரு கப்பில் மட்டும் 142 மில்லி லிட்டர் என்ற அளவில் இருந்து சற்று குறைந்ததால், அது நிராகரிக்கப்பட்டு 249 எனக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்படிப் பார்த்தால் ஒரு நிமிடத்தில் 4 கப் டீயை அவர் தயாரித்திருக்கிறார்.

ஒரு மணிநேரத்தில் 249 கப் டீ தயாரித்து கின்னஸ் சாதனை!பின்னணி இதுதான்...
Guinness World Records

சுற்றுலா மற்றும் ரூய்போஸ் தேயிலையை புரொமோட் செய்யவும், 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீக்கு பின்னர், வுப்பர்தல் (Wupperthal) சமூக மக்கள் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையிலும், இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஏனெனில், இங்காரும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்.

தனக்காக மட்டுமன்றி, தன்னுடைய சமூகத்திற்காகவும் சேர்த்து யோசித்த, நல்ல உள்ளம் கொண்ட இங்காருக்கு வாழ்த்துகள்..!