சினிமா
Published:Updated:

எதிரும் புதிருமாக பிரசாந்த் சிம்ரன்!

பிரசாந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரசாந்த்

நீங்க மட்டும்தான் இதைக் கேட்கலை. நேரம்னுதான் சொல்ல வேண்டியிருக்கும். சினிமாதான் உயிர்னு கிடந்திருக்கிறார்.

“பர்சனலா எனக்கு செஞ்ச வேலையையே திரும்பப் பண்றது பிடிக்காது. புதுசு புதுசா ஏதாவது செய்யணுங்கிறதுதான் என் குணம். ‘நோ பெய்ன் நோ கெய்ன்’ங்கிறதுல தெளிவா இருக்கேன். அதுக்காக எந்த உழைப்புக்கும் எப்பவும் தயாரா இருக்கேன்.

இதுக்கு ‘அந்தகன்’ நல்ல உதாரணம். ‘அந்தாதுன்’ இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம். நினைக்க முடியாத திருப்பங்கள், டார்க் காமெடி, சட்னு சிரிக்கிற மாதிரி இடங்கள்னு பரபரப்பாகப் போகும். மூன்று தேசிய விருதுகள் வாங்கி 450 கோடி வசூலிச்சது. இந்தப் படத்தை ரீமேக் செய்ய நிறைய போட்டி. கடைசியில் நான் ரீமேக் ரைட்ஸ் வாங்கிட்டு வந்துட்டேன். கொரோனா காலம் என்பதால் பல தடைகளைத் தாண்டி இப்போது 60 சதவிகிதம் முடிச் சிட்டோம்...” திருப்தியாக இருக்கிறார் இயக்குநர் தியாகராஜன்.

எதிரும் புதிருமாக பிரசாந்த் சிம்ரன்!

“பிரசாந்துக்கு எப்படி ஆர்வம் வந்தது?”

“இதில் வருகிற ஹீரோ பியானோ பிளேயர். பிரசாந்தும் பியானோ இசைப்பதில் தேர்ச்சி பெற்றவர். அதுவும் ஒரு காரணம். படத்தில், ஹீரோ ஒரு கொலையைப் பார்த்துவிடுகிறார். பிறகான அடுத்தடுத்த கொலைகள். அதிலிருந்து தப்பித்துப் போவதற்கான அடுத்தடுத்த சம்பவங்கள்தான் கதை. இந்த அளவுக்கு பிரசாந்த் உழைத்து நான் பார்த்ததில்லை. கலகலப்பும் எனர்ஜியும் ஆக்‌ஷனும், வேகமும் ஒவ்வொரு ஃப்ரேம்லயும் தெறிக்குது. என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகனோட முதல் சந்தோஷம் என்ன தெரியுமா... சவால்ல ஜெயிக்கிறது. ஒரு கேரக்டர்ல அதை அப்படியே 100% எடுத்துகிட்டு வந்திட்டா அதுதான் சந்தோஷத்தின் உச்சம். ஒரு காலத்தில் படத்தில் நடிகர் இருந்தால் போதும்னு இருந்தது. அடுத்து கதை நல்லா இருந்தால் படம் நல்லா இருக்கும்கிற நிலை மாறியது. இப்ப திரைக்கதை சும்மா விறுவிறுன்னு போகணும்னு வந்து நிக்குது. ‘அந்தகன்’ அப்படியான படம். பிரசாந்தின் சினிமாப் பயணத்தைப் பார்த்தால் அழகா இருக்கும். பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, மணிரத்னம், ஷங்கர்னு செய்தது எல்லாமே வேற வேற படங்கள். அப்படி ‘அந்தகன்’, பிரசாந்த் கரியரில் முக்கியமான படம்.”

“ஒரிஜினலில் தபுவின் வேடம் மிரட்டலாக இருந்ததே?”

“ஆமாம். சிம்ரன் அந்த கேரக்டரை கையில் எடுத்திருக்காங்க. எல்லாம் தயார்னு ஒரு ஹீரோ நிற்கும்போது, செலவழிக்க அனுமதிக்கிற நல்ல தயாரிப்பு நிறுவனமும் இருக்கிறபோது, சிம்ரன் பிரமாதமாகக் களமிறங்கியிருக்காங்க. ஏற்கெனவே அவங்க இரண்டு பேரும் புகழ்பெற்ற சினிமா ஜோடி. இதில அவங்க எதிரும் புதிருமாக வரும்போது திரையில் அனல் பறக்கும். ஆக்‌ஷனில் துறுதுறுவெனப் பல இடங்கள் இருப்பதால் பிரசாந்திற்கு செம மாஸான படம். பிரியா ஆனந்த்தான் ஜோடி. ஓட்டமும் நடையுமாக கதை போயிட்டு இருக்கும்போது பிரசாந்துக்கு இணையா, அழகா ஒரு பொண்ணு வேணும். அதற்காக பிரியாவைத் தேர்ந்தெடுத்தேன். ஒரிஜினலில் இருந்த சின்னச் சின்னக் குறைகளை நீக்கியிருக்கேன். ஒரு முக்கியமான இன்ஸ்பெக்டர் வேடத்தில் சமுத்திரக்கனி வருகிறார். யோகிபாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார், செம்மலர்னு நல்ல நடிகர்கள் இருக்காங்க.”

“பாடல்கள் பற்றிச் சொல்லுங்க”

“சந்தோஷ் நாராயணன்தான் இன்னைக்கு முதலிடத்தில் இருக்கிறார். அவரையே தேடிப்போனால் ‘வாங்க’ன்னு சந்தோஷமாக பாடல்கள் போட்டுக் கொடுத்தார். கேமராமேன் ரவி யாதவ். இங்கேயிருந்து மும்பைக்குப் போய் அங்கே இந்திக்காரர்களின் செல்லப் பிள்ளையாகி படங்கள் பண்ணிக்கிட்டிருக்கார். அவரைக் கொண்டுவந்து இங்கே அந்தகனைச் செய்யச் சொல்லி யிருக்கேன். அவர் அசல் படத்திற்கு மேலே கேமரா நுணுக் கத்தில் படத்தை இழைத்திருக்கி றார். இந்த த்ரில்லர் தருகிற த்ரில் உங்களுக்குப் பிடிக்கும்.”

“பிரசாந்துக்கு என்ன குறைச்சல்... ஏன் இவ்வளவு இடைவெளி..?”

“நீங்க மட்டும்தான் இதைக் கேட்கலை. நேரம்னுதான் சொல்ல வேண்டியிருக்கும். சினிமாதான் உயிர்னு கிடந்திருக்கிறார். அதைத் தவிர ஒண்ணுமே தெரியாது. அவருக்குக் கிடைத்த நல்ல இயக்குநர்கள் வேறு யாருக்கும் கிடைச்சதில்லை. உடம்பை இன்னும் குறைச்சு, இன்னும் பொருத்தமா அடுத்தடுத்து களமிறங்குவார். இனி நல்ல லைன்-அப்போடு பிரசாந்தை எதிர்பார்க்க லாம். கேரக்டரை நம்ம லெவலுக்குக் கொண்டு வரணும்னு நினைச்சது போய், கேரக்டருக் குள்ளே எந்த அளவுக்கு இறங்கணும்னு நினைக்க ஆரம்பிச்சிருக்கார். இதுவும் கடந்து போகுங்கிறதுதான் உண்மை. இப்ப வாழ்க்கையை பாசிட்டிவாகப் பார்த்து, தெளிஞ்ச நீரோடையாக இருக்கார். இனி புதுப் பிரசாந்தைப் பார்க்கலாம்.”