சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அரசியலைத் தாண்டியும் பேசுது ‘மாநாடு’!

சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்பு

படத்தோட பெரிய ப்ளஸ் சிம்புதான். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துல கெளதம் மேனன் சார் காட்டுன மாதிரி என்னுடைய ஸ்டைல்ல புது சிம்புவைக் காட்டணும்னு ஆசை.

`` `மாநாடு’ ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணியே ரெண்டு வருஷமாச்சு. இப்போதான் சரியான நேரம் வந்திருக்குன்னு நினைக்குறேன். பல தடைகளைத் தாண்டி ஷூட்டிங் முடியுற நிலையில் இருக்கு. சினிமா ரசிகர்களுக்கும் சிம்பு ரசிகர்களுக்கும் நிச்சயமாக இந்தப் படம் பிடிக்கும். எவ்வளவு சீக்கிரம் ஆடியன்ஸ்கிட்ட இந்தப் படத்தைச் சேர்க்க முடியும்கிறதை பிளான் பண்ணி, வேலை பார்த்திட்டிருக்கோம்...” உற்சாகம் கலந்த பரபரப்போடு பேச ஆரம்பித்தார், இயக்குநர் வெங்கட் பிரபு.

``லாக்டெளனுக்கு முன்னாடி ஆரம்பிச்ச படம் ‘மாநாடு.’ எப்படி இத்தனை நாள்களைப் பொறுமையுடன் கடந்தீங்க?’’

‘‘ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் கடந்தோம். சினிமாத் துறையில இருக்குற எல்லாருமே கஷ்டப்பட்டோம். ஏன்னா எங்க யாருக்கும் மாச சம்பளம் கிடையாது. ஒரு படம் முடிச்சாதான் சம்பளம் கைக்கு வரும். ஒரு படம் முடிக்காம இன்னொரு படத்துக்கும் போக முடியாது. டாப் லெவல்ல இருக்குறவங்களும் ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. இதுவும் கடந்து போகும்னு நினைச்சிட்டுதான் போயிட்டிருக்கோம். இந்த லாக்டெளன் நிறைய பொறுமையைக் கற்றுக் கொடுத்திருக்கு.”

`` ‘மாநாடு’ படம் எப்படி ஆரம்பமானது?’’

“சுரேஷ் காமாட்சி சார்தான் பிள்ளையார் சுழி போட்டார். ‘சுப்பு பஞ்சு சார்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, பண்ணலாமா’ன்னு கேட்டார். அப்புறம், சிம்புகூட ஒரு மீட்டிங்ல படத்தோட டைட்டில் சொல்லி சின்னதா ஒரு விஷயம் மட்டும் சொன்னேன். சிம்புக்கு ரொம்பப் பிடிச்சுப் போய், உடனே ஓகே சொல்லிட்டார். இதுக்குப் பிறகுதான் படத்தோட கதையை விவரிக்க ஆரம்பிச்சேன். ரொம்ப எதார்த்தமா தொடங்கி, எதிர்பார்த்ததைவிட படம் பெரிய புரொஜக்ட் ஆகிருச்சு.’’

அரசியலைத் தாண்டியும் பேசுது ‘மாநாடு’!

``பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜான்னு நிறைய பேர் படத்துல நடிச்சிருக்காங்களே?’’

“ஆமா. இவங்க இல்லாமல் ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், டேனியல் ஆனி போப், பிரேம்ஜி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இருக்காங்க. ரொம்ப நல்ல நடிகை. எஸ்.ஜே.சூர்யா சார்கிட்ட கதை சொல்லி முடிச்சவுடனே, சட்டுனு எழுந்து என்னைக் கட்டிப் பிடிச்சிட்டார். அவர்கிட்ட முழுக்கதையும் சொன்னேன். ஏன்னா, அவர் இயக்கிய படங்களைப் பார்த்து ரசிச்ச ரசிகன் நான். அதனால் அவரைக் கதை சொல்லி இம்ப்ரஸ் பண்ணணும்னு நினைச்சேன். ஸ்பாட்ல எனக்குப் பெரிய உதவியா இருந்தார். சொல்லப்போனா, இந்தப் படத்துல என்கூட சிம்பு, எஸ்.ஜே.சூர்யா சார், எஸ்.ஏ.சி சார், சுரேஷ் காமாட்சி சார்னு நாலு டைரக்டர்ஸ் இருக்காங்க. முதல்ல இவங்களை கன்வின்ஸ் பண்ணினால்தான் படத்தோட ஷாட் எடுக்க முடியும். எல்லாருமே என்னையும் படத்தோட ஸ்க்ரிப்ட்டையும் நம்புனாங்க.

படத்தோட பெரிய ப்ளஸ் சிம்புதான். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துல கெளதம் மேனன் சார் காட்டுன மாதிரி என்னுடைய ஸ்டைல்ல புது சிம்புவைக் காட்டணும்னு ஆசை. படமும் நல்லா வந்திருக்கு. படத்தோட ஜானர் நமக்குப் புதுசு. படத்தைப் பார்த்து சிலர், ‘இந்தப் படத்தோட தழுவலா’ன்னு கேட்பாங்க. ஆனா, இது புது ஜானர். இந்தியாவுல பெருசா இதை யாரும் இன்னும் கையாளலை. படத்தோட டீசர் பார்த்தா கொஞ்சம் புரிஞ்சிக்கலாம். ‘மாநாடு’ படம் அரசியல் பேசப் போகுதுன்னு நினைச்சிட்டு இருக்குறவங்களுக்கு, ‘இதெல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருக்கு’ன்னு படத்தோட டீசர் சொல்லும்.”

``யுவனுடைய இஸ்லாமியப் பெயரான அப்துல் காலிக்கை சிம்புவுக்கு வைக்க காரணம் என்ன?’’

``படத்துல சிம்புவுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு ஒரு போட்டி நடத்தினோம். அதுல ஒருத்தர் ‘அப்துல் காலிக்’னு சொன்னப்போதான் `அட, நம்ம யுவன் பெயர்!’னு ஞாபகத்துக்கு வந்துச்சு. அதையே வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அந்தப் பெயரோட அர்த்தமும் கதைக்கு ஏத்த மாதிரி இருந்தது. இந்தப் பெயருக்காக சிம்பு ரசிகருக்குத்தான் நன்றி சொல்லணும்.”

``சிம்பு ‘மாநாடு’க்காக எவ்வளவு மெனக்கெடுறார்?’’

``ரொம்பக் கஷ்டப்படுறார். இந்தப் படம் அவருக்குப் புதுப் பரிமாணத்தைக் கொடுக்கும்னு புரிஞ்சிக்கிட்டார். அதனால, என்ன கேட்டாலும் பண்ணிக் கொடுக்கிறார். எந்த ஷாட்டுக்கும் தயக்கமே இல்லாம உடனே பண்ணிக் கொடுத்திடுவார்.”

`` ‘மாநாடு’ டைட்டில் லுக் போஸ்டர்ல இருந்த சில குறியீடுகளைப் பார்த்தப்போ, நேரத்துக்கு முக்கியத்துவம் இருக்குற மாதிரி இருக்கே?’’

``நிச்சயமா நேரத்துக்கு முக்கியத்துவம் இருக்கணும்னுதான் ஐடியாவே. நேரம் எந்த அளவுக்கு வாழ்க்கையில முக்கிய இடத்துல இருக்குன்னு வித்தியாசமான விதத்துல சொல்லியிருக்கேன்.”

அரசியலைத் தாண்டியும் பேசுது ‘மாநாடு’!

``சிம்புவுடைய வெயிட்லாஸ் எந்த அளவுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்துச்சு?’’

``ரொம்ப சர்ப்ரைஸா, சந்தோஷமா இருந்துச்சு. ஏன்னா, சிம்புவை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். அதாவது, நான் டைரக்டர் ஆகறதுக்கு முன்னாடி, சிம்பு ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடில இருந்தே பழக்கம். அதனால இவரோட திறமை, உழைப்பு, ஸ்மார்ட் எல்லாமே தெரியும். நடுவுல கொஞ்சம் பிரேக் இருந்தப்போ தன்னைச் செதுக்கிக்கிட்டார். ‘சார், உங்க அப்துல் காலிக் இப்போ கரெக்டா இருக்காரா?’ன்னு கேட்டப்போ அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு.”

அரசியலைத் தாண்டியும் பேசுது ‘மாநாடு’!

``சிம்புவுடைய வெயிட்லாஸுக்குப் பிறகு சில போர்ஷனை திரும்பவும் ஷூட் பண்ணுனீங்கன்னு கேள்விப்பட்டோமே?’’

“பண்ணிதானே ஆகணும். இல்லனா படத்துல ஒட்டாது. இதனால, ரீ ஷூட்டிங் போனோம். படத்துல பார்க்குறப்போ எல்லாம் சரியா இருக்கும்.”

அரசியலைத் தாண்டியும் பேசுது ‘மாநாடு’!

``சின்ன இடைவெளிக்குப் பிறகு யுவன்கூட சேர்ந்திருக்கீங்க?’’

“ஓப்பனிங் சாங், குத்துப்பாட்டு, டூயட்னு வழக்கமான சினிமா பேட்டர்னுக்குள்ள நாங்க போகலை. அதாவது, வழக்கமா என் படத்துல இருக்குற பாடல்களைவிட கொஞ்சம் குறைவு. நானே, சினிமாவுக்கு வந்து பல வருஷமாச்சு. இது என்னோட ஒன்பதாவது படம். என்னையே நான் புதுப்பிக்கணும்னு நினைச்சு எல்லாமே புதுசா பண்ணியிருக்கேன்.”

வெங்கட் பிரபு, சிம்பு
வெங்கட் பிரபு, சிம்பு

``உங்க படங்களில் பிரேம்ஜியை வித்தியாசமான கெட்டப்ல காட்டியிருப்பீங்க, இதுல எப்படி எதிர்பார்க்கலாம்?’’

“இதுல கெட்டப்பே இல்லாம இருக்குறதுதான் புதுசா நல்லாருக்கும்னு அப்படியே விட்டுட்டேன். ‘சென்னை 28’ க்கு முன்னாடி பிரேம்ஜியை ‘வல்லவன்’ படத்துல அறிமுகப்படுத்துனதே சிம்புதான். என்னைவிட பிரேம்ஜிக்கு சிம்புதான் நல்ல க்ளோஸ். சிம்புவுக்கும் என்னைவிட பிரேமைத்தான் ரொம்பப் பிடிக்கும். சொந்த அண்ணன் தம்பி மாதிரிதான் பழகுவாங்க. சொல்லப்போனா வயசுல பிரேம்தான் பெரியவன். இருந்தும் தம்பி மாதிரிதான் பிரேமை ட்ரீட் பண்ணுவார் சிம்பு. யுவன், சிம்பு எல்லாருமே எங்க ஃபேமிலிதான். ஃபேமிலியா ஒரு படம் பண்றோம், பார்ப்போம்.”

அரசியலைத் தாண்டியும் பேசுது ‘மாநாடு’!

``ஓடிடிக்காக நீங்கள் இயக்கும் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப்சீரிஸ் பற்றி?’’

“லாக்டெளனுக்கு முன்னாடியே இதோட ஷூட்டிங்கை முடிச்சிட்டோம். லாக்டெளனின்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள்தான் இருந்தது. எண்டர்டெயின்மெண்ட் ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கு. காலத்துக்கு ஏத்த மாதிரி நம்மளை மாத்திக்குறதுதான் புத்திசாலித்தனம். இல்லைன்னா நம்மைப் பின்னாடி தள்ளி விட்டிடுவாங்க. ‘Taxi Driver’ படம் எடுத்த மார்ட்டின் ஸ்கார்சஸியே நெட்ப்ளிக்ஸ் தளத்துக்கு ‘ஐரிஷ்மேன்’ படம் பண்ணியிருக்கார். அதனால, ஒரு க்ரியேட்டர் சொல்ல வந்த விஷயத்தை டி.வி, தியேட்டர், ஓடிடின்னு எதுல வேணும்னாலும் சொல்லலாம். சரியா சொன்னால் போதும்.”

``நடிகர் வெங்கட்பிரபு?’’

``நல்ல கேரக்டர்கள் எப்போதாவது அமையும். அப்படி அமைஞ்சதுதான் ‘லாக்கப்.’ எல்லாப் புகழும் டைரக்டரைத்தான் சேரும். எல்லோரும் என்னை காமெடியான ரோல்லதான் பார்ப்பாங்க. ஆனா, `லாக்கப்’ டைரக்டர் சார்லஸ் என்னை நெகட்டிவ் ரோல்ல பார்த்ததே எனக்கு சந்தோஷம். சில பேர் நடிக்கக் கேட்குறாங்க. மாநாடு முடிச்சிட்டுதான் எதுவா இருந்தாலும்.”

``எஸ்.பி.பியை எவ்வளவு மிஸ் பண்றீங்க?’’

``ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். `பாலு அங்கிள்’னுதான் கூப்பிடுவேன். வேலை விஷயமாகவும் இவர்கூட டிராவல் பண்ணியிருக்கேன். என்னைத் தூக்கி வளர்த்தவர்னு சொல்லணும். எங்க அப்பா அம்மாவுடைய காதல் நேரத்துல இருந்தே கூட இருந்தவர். சொல்லப்போனா என்னுடைய பெரியப்பா மாதிரிதான் பாலு அங்கிளும். எங்க அப்பாவுக்கும் அவர் அண்ணன்தான். அவர் இல்லாதது எல்லாருக்கும் மிகப்பெரிய இழப்பு. இவர் இல்லன்னு இன்னுமே நம்ப முடியல. சரணைப் பார்க்குறப்போதான் திடீர்னு எமோஷனல் ஆகிடுவோம். ரேடியோ, கார், டிவின்னு எல்லாத்துலயும் இவருடைய பாடல்களைத்தான் கேட்டுட்டு இருக்கோம். அதனால, அவர் கூடவே இருக்குற உணர்வு இருக்கு. இருந்தும் நேர்ல பார்க்க முடியலன்னு நினைக்குறப்போ வருத்தமா இருக்கு.”