Published:Updated:

`` `நான் என்ன கரடியா, புலியா’னு தேத்தினார் ராஜா சார்!’’ - சைந்தவி

சைந்தவி
சைந்தவி

``நான் பாடி வெளிவந்த முதல் பாடல் `அந்நியன்' படத்துல `ரண்டக்க ரண்டக்க'தான். சின்ன போர்ஷன்தான் பாடியிருப்பேன். அப்போ ஸ்கூல் படிச்சிகிட்டிருந்தேன். ஸோ, நைட் டைம்லதான் ரெக்கார்டிங் போக முடிஞ்சது. அப்படிப் போகும்போது வெயிட்டிங் ரூம்லேயே தூங்கிட்டேன்.

`விழிகளில் ஒரு வானவில்’, `பிறை தேடும் இரவிலே’, `என் ஜீவன்’ போன்ற பாடல்கள் சைந்தவியின் டிரேட்மார்க். சமீபத்தில் வெளியான `அசுரன்' படத்தின் `எள்ளு வய பூக்கலையே' பாடலும் இந்த லிஸ்டோடு இணைந்துவிட்டது. ஓர் மதியப்பொழுதில் அவரைச் சந்தித்தேன்.

சைந்தவி
சைந்தவி

``சின்ன வயசுல நான் சினிமாவுல பாடுவேன்னுலாம் நினைச்சதே இல்லை. என்னுடைய 14 வயசுலதான் பாடுறதை சீரியஸா எடுத்துக்க ஆரம்பிச்சேன். அப்படிப் பாட ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிடுச்சு. நினைச்சுக்கூட பார்க்க முடியாத அளவு சந்தோஷத்துல இருக்கேன். இன்னும் நிறைய பாடல்கள் பாடணும். கர்னாட்டிக் மியூஸிக் பாடிட்டு இருந்த பொண்ணு, இப்போ சினிமாவிலும் பாடுறேன். கர்னாட்டிக் இசை, சினிமா பாடல்கள்னு ரெண்டுலேயும் டிராவல் பண்ணுவேன்."

சினிமாவுல முதல் பாடல் பாடிய அனுபவம் எப்படி இருந்தது?

``தேவா சார் இசையமைத்த `உயிரெழுத்து'ங்கிற படத்துக்குத்தான் நான் முதன்முதலா பாடினேன். என்னை டிராக் பாடத்தான் முதல்ல கூப்பிட்டாங்க. வாய்ஸ் பிடிச்சதால அந்தப் படத்துலே மூணு பாட்டு பாட வெச்சாங்க. முதல் படத்துலே மூணு பாட்டு பாடியிருக்கோம்னு செம ஹேப்பி. ஆனா, இப்போ வரைக்கும் அந்தப் படம் ரிலீஸ் ஆகலை. இருந்தாலும், தேவா சாருடைய இசையில அறிமுகமானது மறக்க முடியாத ஒண்ணு. மொதல்ல தேவா சார் இசையில பாடப்போறோம்னு பயந்துகிட்டே போனேன். ஆனா, அவருக்குத் தேவைப்படுறதை பொறுமையா சொல்லிக் கொடுத்து வேலை வாங்கினார்."

சைந்தவி
சைந்தவி

``நான் பாடி வெளிவந்த முதல் பாடல் `அந்நியன்' படத்துல `ரண்டக்க ரண்டக்க'தான். சின்ன போர்ஷன்தான் பாடியிருப்பேன். அப்போ ஸ்கூல் படிச்சிட்டிருந்தேன். ஸோ, நைட் டைம்லதான் ரெக்கார்டிங் போக முடிஞ்சது. அப்படிப் போகும்போது வெயிட்டிங் ரூம்லேயே தூங்கிட்டேன். அப்புறம் எழுப்பி ரெக்கார்டிங் கூட்டிட்டுப் போனாங்க. பாடி முடிச்சதுக்கப்புறம் ஹாரீஸ் சார் பாராட்டினார். அப்போ இந்தப் பாட்டை `அந்நியன்' படத்துக்குத்தான் பாடியிருக்கேன்னுகூட எனக்குத் தெரியாது. `நல்லாதான் பாடினோமா, இல்லை தூக்கத்துல எதுவும் உளறிட்டோமா'னு அடுத்த நாள் முழுக்க சந்தேகத்துலேயே இருந்தேன்."

சைந்தவி
சைந்தவி

படம் வெளிவந்த பிறகு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?

``அந்தப் படத்தின் ரிலீஸ் பத்தி எந்த அப்டேட்டும் இல்லை. ஒருவேளை நம்மதான் சரியா பாடலையோனு நிறைய பயிற்சி எடுத்துக்கணும்னு நினைச்சேன். ஒரு நாள் என் ஃபிரெண்ட் போன் பண்ணி, `உன் பேரு அந்நியன் பட பாட்டு கேசட்ல இருக்கு பாரு'னு சொன்னா. நான் நம்பவே இல்லை. அப்புறம்தான் வாங்கிப் பார்த்தேன். செம ஹேப்பியா இருந்தது. இப்போகூட அந்தக் கேசட்டை வெச்சிருக்கேன். அந்தப் பாட்டுலேயும் என்னுடைய போர்ஷன் நிறைய பேருக்குப் பிடிச்சிருந்தது. அப்போ சப்போர்ட் பண்ண ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி."

இளையராஜாவின் தனித்துவங்கள்ல ஒண்ணு, கோரஸ். அவர் இசையில் நீங்க நிறைய பாடல்களுக்குக் கோரஸ் பண்ணியிருக்கீங்க. அந்த அனுபவம்?

``முதன்முதலா ராஜா சார் இசையில நான் பாடினது `அஜந்தா'ங்கிற படத்துல. சின்ன போர்ஷன்தான். ரெக்கார்டிங் போகும்போது வியர்த்துக்கொட்டி, பயங்கர ஷிவர் ஆகிடுச்சு. `நான் என்ன கரடியா, புலியா... பயப்படாம பாடு'னு சொன்னார். ஆனாலும், அந்தப் போர்ஷன் முழுக்கவே பயத்தோடதான் பாடினேன். அவருடைய காலகட்டத்துல நானும் ஒரு பாடகியா இருக்கிறதுல சந்தோஷம்."

இளையராஜாவுடன்
இளையராஜாவுடன்

இந்தப் பாட்டை நான் பாடலையேன்னு ஃபீல் பண்ணியிருக்கீங்களா?

``பொதுவா ஒரு பாட்டோட மியூஸிக், வரிகள், அதுக்கு ஏத்த சிங்கர்ஸ் மாதிரியான விஷயங்கள்தான் அந்தப் பாட்டுக்கு ஜீவன் சேர்க்கும். அதுவே வேற ஒரு சிங்கர் பாடியிருந்தா ரிசல்ட் வேற மாதிரி போகவும் வாய்ப்பு இருக்கு. அதனால, இன்னொரு சிங்கர் பாடின பாட்டை நாம பாடியிருக்கலாம்னு நான் நினைச்சதே இல்லை."

பொதுவா, ஒரு பாடல்ல நீங்க ரசிக்கிற விஷயம்?

``ஒரு பாட்டுல இசை, வாய்ஸைத் தாண்டி நான் ரசிக்கிற விஷயம் வரிகள். எனக்கு கண்ணதாசன் ஐயாவுடைய வரிகள் ரொம்பப் பிடிக்கும். இப்போ கேட்டீங்கன்னா நா.முத்துக்குமார் சாரைச் சொல்வேன். அவர் இப்போ இல்லைனு வருத்தப்படாத நாளே இல்லை. தமிழ் சினிமாவுக்கு உண்மையிலேயே பெரிய இழப்புதான். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.''

Na Muthukumar
Na Muthukumar

ஜி.வி.பிரகாஷ்..?

கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் சிரிக்கிறார். ``உண்மையைச் சொல்லணும்னா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை பார்க்கக் கூடாதுனு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா, `மதராசப்பட்டினம்' படத்துல விஜய் சார் நான் பாடினா நல்லா இருக்கும்னு விருப்பப்பட்டார். பாட்டும் நல்லா ஹிட்டாச்சு. இப்படியே அடுத்தடுத்து அமைஞ்சிடுச்சு. ஜி.வி படத்துல நான் பாடும்போது ரொம்பவே பயமா இருக்கும். சரியா வரலைன்னா உடனே திட்டிடுவார். பலருக்கு எங்க ரெண்டு பேர் காம்பினேஷன் பிடிச்சிருக்கு, சிலருக்குப் பிடிக்கலை. ஜி.வியைப் பத்தி தெரியாத ஒரு விஷயம் சொல்றேன். அவர் வொர்க் பண்ற எல்லாப் படங்களுக்கும் சீக்கிரமே டியூன் முடிச்சிடுவார். இது அவர்கூட வொர்க் பண்ற எல்லோருக்கும் தெரியும். ஜி.விக்கு நிறைய கேர்ள் ஃபேன்ஸ் இருக்காங்க. அவரை ரொம்பப் பிடிச்சவங்க சிலர் எனக்கே மெசேஜ் அனுப்புவாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தது. அப்புறம் பழகிடுச்சு. மெசேஜ்தானே பரவாயில்லைனு இருந்துடுவேன். இதை அடிக்கடி அவர்கிட்டே சொல்லிக் கிண்டல் பண்ணுவேன்."

 GV Prakash and Saindhavi
GV Prakash and Saindhavi

சைந்தவிக்கு டப்பிங் பேசுற ஐடியா இருக்கா?

``ஜிங்கிள்ஸ் பாடும்போது சில கேரக்டருக்கு சின்னதா டப்பிங் பண்ணியிருக்கேன். இப்போகூட `தெறி' படத்துல சுனைனாவுக்கு டப்பிங் பேசினேன். அட்லி அண்ணா அந்தக் கேடக்டருக்கு டப்பிங் பேச பக்கா மாமி வேணும்னு கேட்டிருந்தார். `எனக்குத் தெரிஞ்ச ஒரே மாமி நீதான்'னு என்னையே பேச வெச்சிட்டாங்க. இப்படி டப்பிங்லேயும் சில வாய்ப்புகள் வந்தது. பாடுறதுகூட ஈஸி. ஆனா, டப்பிங் ஒரு தனி ஆர்ட். அதையும் முயற்சி பண்ணி பார்க்கிற ஆசை இருக்கு. சரியான வாய்ப்பு வந்தா கண்டிப்பா பண்ணுவேன்."

எள்ளு வய பூக்கலையே பாடல் அனுபவம்?

``அந்தப் பாடல் வைக்கம் விஜயலட்சுமிதான் பாட வேண்டியது. நான் டிராக்தான் பாடப் போனேன். ஆனா, என்னுடைய வாய்ஸ் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. ஒரு அம்மாவுடைய வலியை அவ்வளவு அழகாவும் ஆழமாவும் தன்னுடைய வரிகள்ல வெளிக்காட்டியிருப்பார் யுகபாரதி. அதுதான் பாட்டுடைய மேஜர் ப்ளஸ். அதுல என் பங்கும் இருந்ததுல சந்தோஷம்.''

சைந்தவி
சைந்தவி

நிறைய காதல் பாடல்கள் பாடியிருக்கீங்க. ரியல் லைஃப்ல சைந்தவி எப்படி?

``நான் ரொம்ப ரொமான்டிக். ஆனா, ஜி.விக்கு படங்கள்ல மட்டும்தான் ரொமான்ஸ் வரும். ரியல் லைஃப்ல அவர் அப்படியே நேரெதிர். ரொம்ப கஷ்டப்பட்டு பிளான் பண்ணி நான் கிஃப்ட் கொடுப்பேன். ஆனா, அவர் உனக்கு என்ன வேணும்னு என்கிட்டே கேட்டு கிஃப்ட் பண்ணுவார். அதுவும் சில சமயம் பைசா கொடுத்து, நீயே வாங்கிக்கோனு சொல்லிடுவார். நான் பாவம்ல''

ஜி.வியும் நீங்களும் நிறைய சமூக பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்துகிட்டிருக்கீங்களே?

``என்னுடைய அப்பா டாக்டர்ங்கிறதால நிறைய மெடிக்கல் கேம்ப்க்கு கூட்டிகிட்டுப் போவார். அதனால சின்ன வயசுல இருந்தே இது சம்பந்தமான விஷயங்கள்ல பொறுப்பு நிறைய இருந்தது. எதிர்காலத்துல என்.ஜி.ஓ ஆரம்பிக்கிற ஐடியா இருக்கு. அதே மாதிரிதான் ஜி.வியும். இப்போ நீட், காவேரினு மக்களை பாதிக்கிற சமூக பிரச்னைகளுக்கு அவர் குரல் கொடுத்துகிட்டிருக்கார். அவரால முடிஞ்ச உதவிகளையும் செய்றார். அவருடைய மனைவியா இருக்கிறதுல நான் பெருமைப்படுறேன். இதே மாதிரி இன்னும் நிறைய விஷயங்கள் சேர்ந்து செய்வோம்."

``யூ-டியூப் சேனல், ஜெ பயோபிக் அப்டேட், `எள்ளுவய' பாடல் உருவான கதை.." - ஜி.வி.பிரகாஷ் குமார்
அடுத்த கட்டுரைக்கு