Published:Updated:

ரஜினியுடன் தனுஷ் நடிக்கிறாரா... உண்மை என்ன? #VikatanExclusive

Dhanush
Dhanush

``ஆப்போனென்ட்டா ஆளே இல்ல சோலோ ஆகிட்டேன்... நான் முன்னப்போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்'' - `அநேகன்' படத்தில் தனுஷ் பாடிய இந்த வரிகள் உண்மையாகவே நடந்துகொண்டிருக்கிறது. `வடசென்னை', `அசுரன்' என 2018-19ல் ஹிட் அடித்தவரின் 2020 லைன்-அப் கண்டு மிரண்டுபோயிருக்கிறது கோலிவுட்.

தனது கரியர் கிராஃபை மிகவும் கவனமாக செதுக்க ஆரம்பித்திருக்கிறார், தனுஷ். 2020-ல் தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இதற்கிடையே, ரஜினியுடன் தனுஷ் இணைந்து நடிக்கிறார் என்கிற செய்திகளும் அலையடிக்கின்றன. இது உண்மையா என்பது இந்தக் கட்டுரையின் இறுதியில்... 2020 லைன்-அப்!

தனுஷ்
தனுஷ்

துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷின் `பட்டாஸ்' திரைப்படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது. கமர்ஷியல் படமான இது, பொங்கல் ரிலீஸாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், ரஜினியின் `தர்பார்' ரிலீஸ் ஆவதால், அதே தேதியில் போட்டிக்கு வரக்கூடாது எனத் தன்னுடைய படத்தை ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்யுமாறு சத்யஜோதி நிறுவனத்தினிடம் கேட்டிருக்கிறார் தனுஷ். அவரின் வேண்டுகோளை ஏற்று, ஒரு வாரம் கழித்து ஜனவரி 16-ல் `பட்டாஸ்' வெளியாகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்பாக, ஜனவரி முதல் வாரத்தில் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. `கர்ணன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கோவில்பட்டி, திருநெல்வேலி பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. மாரி செல்வராஜ் படம் என்பதால், இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ``இந்தப் படத்தில் சமூக அரசியல் அதிகமாக இருக்கும். ஆனால், எதுவும் நேரடியாக இருக்காது. மக்கள் கொண்டாடும் படமாக இருக்கும்'' என்கிறார்கள். இந்தப் படம் ஜூன் அல்லது ஜூலையில் ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆக இருக்கிறது. கேங்க்ஸ்டர் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு, லண்டனில் நடந்துமுடிந்துவிட்டது. 10 சதவிகித படப்பிடிப்பு மட்டும் மதுரையில் நடக்கிறது. இதில், தனுஷுடன் ஐஸ்வர்ய லக்ஷ்மி, கலையரசன், `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் தனுஷுக்கு வேறோரு பரிமாணத்தைத் தரும் என்கிறார்கள்.

தனுஷ்
தனுஷ்
அசுரன்

மாரி செல்வராஜ் படம் முடிந்ததும் `ராட்சசன்' இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் தனுஷ். இதற்கிடையே, தேனாண்டாள் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்த படம் ஆரம்பித்த வேகத்திலேயே தயாரிப்பு பிரச்னைகளால் நின்றுபோனது. இந்தப் படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் கையில் எடுத்திருக்கிறது. இது, தனுஷ் நடிக்கும் 44-வது படம். இதற்கிடையே, தனுஷின் 43 -வது படம் என்ன என சஸ்பென்ஸ் ஓடிக்கொண்டிருந்தது.

தனுஷின் 43-வது படத்தை தாணு தயாரிக்க, ரஜினியும் - தனுஷும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்கிற செய்திகள் பறந்துகொண்டிருந்தன. ஆனால், ரஜினியும் - தனுஷும் இப்போது சேரவில்லை. தனுஷ் மீண்டும் இந்தியில் நடிக்கிறார். இந்தப் படத்தை `ராஞ்சனா' இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். தனுஷுடன் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு அடுத்தபடியாக, தான் நடித்து இயக்கும் படத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ்.

தனுஷ் ஏன் நடிப்பில் 'அசுரன்' தெரியுமா?  |Dhanush Filmography #Dhanush

தற்போது தனுஷின் லைன்-அப்பில் 5 படங்கள் இருக்கின்றன. 5 படங்களுமே வெவ்வேறு ஜானர், வித்தியாச இயக்குநர்கள் என வரிசைகட்டியிருக்கின்றன. 2020-ல் மீண்டும் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடிப்பாரா தனுஷ், பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு