அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

கனா காணும் காலங்கள் - பொய் அழகு... பொய் அழகு! - செல்வராகவன்

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க அது இதான் போல....

காதலில் உண்மை மட்டுமே போதாது... கொஞ்சம் பொய்யும் வேண்டும்! ஆச்சர்யப்படாதீர்கள்... அவள் சந்தோஷப்படுவாள் என்றால், ஆயிரம் பொய்கள்கூடச் சொல்லலாம்!சின்னச் சின்னச் சந்தோஷங்கள்கூட அவர்களை அப்படியே மலரவைக்கும். ‘உனக்காக... எல்லாம் உனக்காக!’ என்று நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் அவளுக்காகத்தான் என்பதுபோல் காட்டுங்கள்.அவளைப் பார்க்கப் போகும்போது லேட்டாகிவிட்டதா? மலர்க்கொத்தோடு செல்லுங்கள்... அட்லீஸ்ட் ஒரு ரோஜாப் பூ! 'உன்னைவிட அழகா ஒரு பூ வாங்கிடணும்னு பாண்டிபஜார் முழுக்கத் தேடினேன். ப்ச்... அப்படி ஒண்ணு இல்லவே இல்லை தெரியுமா?' - கூசாமல் சொல்லுங்கள். அவள் அதை ரசிப்பாள்.போகும் வழியில் பிளாட்பாரத்தில் ஒரு டெடிபியர் பொம்மை வாங்கினாலும், '‘ரெண்டு நாளு எல்லாக் கடையும் ஏறி இறங்கினேன். உன் பெட்ரூம்ல இருக்கப் போற பொம்மை... உன்னோட படுத்துக்கப் போற பொம்மையாச்சே! அதான், நல்ல பொம்மையா...’’ - என அள்ளிவிடுங்கள். சிரிப்பாள். சிரித்தபடி உதைப்பாள். துரத்துவாள். சிணுங்குவாள். 'ச்சே... நமக்காக சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூட எவ்ளோ அலையறான்!' என்று ரகசியமாகப் பிரமிப்பாள்.

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

 ஆபத்தில்லாத பொய்கள், அவளை ஆனந்தப்படுத்தும்!அடிக்கடி போன் போடுங்கள்... ‘‘ஒரே நேரத்தில்தான் எல்லாருக்கும் விடியுது... ஆனா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி விடியுமே... நீ எப்போ... எப்படிக் கண்விழிக்கிறேனு பார்க்கணும்னு பயங்கர ஆசையா இருக்குப்பா. ஆமா, நீ எப்படி பார்சல் பண்ண பொக்கே மாதிரி அப்படியே தூங்குவியா? இல்லே...’’‘‘டாய்...!’’ அவள் அலறும்போது, "ச்சும்மா உன் வாய்ஸைக் கேட்கணும்னு ஆசையா இருந்துச்சு... வெச்சுடறேன்!" என்று ஃபீல் காட்டுங்கள்."க்ளாஸ்ல இருக்கியா..? எத்தனாவது லார்ஜு..? அய்யோ, அசிங்கமாத் திட்டாத...’’ என சிரிக்க வையுங்கள்."இல்லடா... ஃபிசிக்கல் கெமிஸ்ட்ரி புட்டுக்கிச்சு! இந்த ஜென்மத்துல நான் டிகிரி வாங்குவேன்னு தோணலை...’’ என ஆறுதல் தேடுவதாக பாவ்லா பண்ணுங்கள்.அடிக்கடி பேசுங்கள். ஆனால், அது தொந்தரவாக மாறிவிடக்கூடாது. அலையவும் வேண்டும். ரொம்ப அலையவும்கூடாது. இறங்கிப்போனால், அவர்களுக்கு ஒரு மிதப்பு வந்துவிடும்.உங்கள் விருப்பங்களில், முடிவுகளில் உறுதியாக இருங்கள். ஆண்மையின் கம்பீரம் பெண்களுக்குப் பிடிக்கும். ஆனால், எதையும் அவர்கள் மேல் திணிக்காதீர்கள்!எதற்கும் கட்டாயப்படுத்தாதீர்கள்... 'இப்படி இரு, அப்படி இரு' என கட்டளை இடாதீர்கள். அதை எந்தத் தேவதைகளும் விரும்புவதில்லை.பெண்களை அவர்கள் போக்கில் போய்த்தான் பிடிக்க வேண்டும். அதன் முதல் தகுதி... பொறுமை!காவ்யாவும் முருகனும் காதலர்கள். காவ்யாவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். அத்தனை பேரும் ஃப்ரீக் அவுட், பீட்டர் பார்ட்டிகள்.அவர்களில் ஒருவன் காவ்யாவிடம் ‘ப்ரப்போஸ்’ செய்து டெபாசிட் இழந்தவன்.திடீரென எங்கிருந்தோ வந்த முருகனை, காவ்யா காதலிப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. முருகனைப் பற்றி அவதூறு அணுகுண்டுகள் வீசி, அவனது கேரக்டரை காலி பண்ணினார்கள்.நொறுங்கிப்போனான் முருகன். அவர்களை எப்படி கட் செய்வது எனத் தெரியாமல் தவித்தான். ஒருநாள் என்னிடம் வந்து புலம்பினான்."என்னால தாங்க முடியல..! செத்துபோலாம்னு இருக்கு செல்வா!""மடையா! கொஞ்சம் பொறுமையா இரு... பதறாத! நீ அவளுக்கு ஆறு மாசமாதாண்டா லவ்வர். அவனுங்க பத்து வருஷமா ஃப்ரெண்ட்ஸ். அவளுக்கு உன்னை மாதிரியே அவனுங்களும் முக்கியம்!""காவ்யாவை மிஸ் பண்ணிடு வேனோனு பயமா இருக்குடா!" 

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

 அதுதான் காதல்! கண்கள் மூடினால் கவலைகள் விழிக்கும். இழந்து விடுவோமோ என்று பயம் அதிகரிக்கும். எதற்கெடுத்தாலும் சந்தேகம் வரும். சடார் சடாரெனக் கோபம் வரும். அவள் இன்னொருவனிடம் இரண்டு வார்த்தைகள் அதிகம் பேசினால் கொந்தளிப்பு ஏறும்.நாளடைவில் அந்தக் காதல் வெறியாகி, அவளுக்கு ஒருநாள் உங்களைப் பிடிக்காமல் போய்விடும். 'நீ ஒரு சைக்கோ!' என்று ஓடிவிடுவாள்.ஆண்கள் படும் வேதனைகள் பெண்களுக்குப் புரியாது!"முருகா, அவ பர்த்டே வருதுனு சொன்னேல்ல... பார்த்துக்கலாம்!" என்றேன் ஆறுதலாக.பிறந்த நாளில் அவள் நண்பர்கள் வந்தார்கள்.‘ஹேப்பி பர்த்டே!’ பாடினார்கள். கேக் வெட்டினார்கள். கிரீட்டிங், கிஃப்ட்கள் கொடுத்தார்கள். எல்லோரும் போன பிறகு, அவள் முன்னே தனியாகப் போய் நின்றான் முருகன்."மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே... ஹேப்பி பர்த்டே காவ்ஸ்!"மலர்க்கொத்தும், பரிசும், கிரீட்டிங் கார்டும் கொடுத்தான்.பளீரென்று சிவப்பு ரோஜாக்கள், தங்க இதயத்தில் ஒரு குட்டி மோதிரம் (உபயம்: செல்வா). 'உன்னிடம் ஐந்து நிமிடம் மனம் விட்டுப் பேச முடியுமா?' என்றது கிரீட்டிங் கார்டு. காவ்யா உருகி நின்றாள்."ஹேய் முருகா... என்னப்பா?""இல்ல காவ்யா... இவ்ளோ நாளா சொல்ல வேணாம்னுதான் நினைச்சேன். நீங்கள்லாம் ரொம்ப நாளா ஃப்ரெண்ட்ஸ். என்னதான் இருந்தாலும் நான் நேத்து வந்தவன்...’’‘‘வாட் நான்சென்ஸ்! நீயும் அவங்களும் ஒண்ணா முருகா! அவங்கல்லாம் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்... நீ என் உயிர்டா!’’ - பதறினாள் காவ்யா. ‘‘தேங்க்ஸ் காவ்யா! நான் இப்போகூட சொல்லியிருக்க மாட்டேன். அவனுங்க என்னைப் பத்திப் பேசினா விட்ருப்பேன். ஆனா, உன்னைப் பத்தி... என்னால தாங்க முடியலைப்பா!"

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

"யாரு?""எல்லாரும்! உன்னைப் பார்த்துட்டுப் போறப்போ, ஸ்ட்ரீட் கார்னர் டீ ஷாப்ல நின்னுக்கிட்டு ரொம்ப தப்பா... அசிங்கமாப் பேசறானுங்க. இப்ப வேற வழியில்லாமதான் நீ என்னை லவ் பண்றியாம்."அவள் முகம் சிவந்தது."அப்படீனு யாரு சொன்னா?""யார் யாரோ சொல்றானுங்க காவ்யா. இதோ பாரு காவ்யா! நான் இதுவரைக்கும் உன்கிட்ட எதையும் மறைச்சது கிடையாது. இதையும் இப்ப சொல்லிட்டேன். எனக்கு இது போதும். நான் வர்றேன் காவ்யா!"எழுந்து வந்துவிட்டான். அவன் சொன்னது பொய்தான். ஆனால் ‘பொய்மையும் வாய்மையிடத்து’ பொய்!கணக்கு சரியாக இருந்தது. காவ்யா நண்பர்களைத் துரத்திவிட்டாள். முருகனின் காதல் சிக்கலின்றி ஜெயித்து விட்டது!சில நேரங்களில் சில மனிதர்களிடம் தாம்தூம் என்று குதித்தால் வேலை ஆகாது. குளிரவைத்துதான் சூடு போட வேண்டும். அது இன்னும் ஆழமாகப் பதியும்!தப்பித் தவறிகூட பெண்களைக் கை நீட்டிவிடாதீர்கள்.ஏதோ ஒரு ஆவேசத்தில் ஒரு முறை அவளை அறைந்தாலும், உங்கள் காதல் பத்து அடி பின்னால் போய் நிற்கும். கை நீட்டும் ஆணை அந்தப் பெண்ணே காறி உமிழ்ந்துவிடுவாள். அதுதான் உண்மை!"என்ன செல்வா! இவ்வளவு செய்ய வேண்டுமா பெண்களுக்கு?""ஆமாம்! பிரியமானவளுக்கு விருப்ப மானவற்றைச் செய்தால் என்ன குறைந்துபோகப் போகிறோம்?எல்லா தீபங்களுக்கும் பிரகாசம் கூட்ட, ஒரு கரம் தூண்டத்தான் வேண்டும்.கொஞ்சம் விட்டுக்கொடுங்கள். கொஞ்சம் பொறுமை காட்டுங்கள். கொஞ்சம் இனிப்பு சேருங்கள். யாராவது ஒரு பெண்ணிடம் முட்டாளாக இருப்பதைவிட உயர்ந்த சுகம் என்று உலகத்தில் ஏதும் கிடையாது. ‘சரி... ஆணுக்குத்தான் உபதேசமா... பெண்ணுக்கில்லையா?’ என்று கேட்பது புரிகிறது.கோபித்துக் கொள்ளாவிட்டால்...

- செல்வராகவன்

(27.03.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)