அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

கனா காணும் காலங்கள் - செல்வாவும் செல்வியும்! - செல்வராகவன்

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

செல்வராகவன் வாழ்க்கையிலும் 96 கதை நடந்திருக்கு....

"விஷம் கொண்டு வந்து தர்றேன்... குடிக்கிறியா?" அமைதியாகக் கேட்டேன். ஆத்திரமும் இயலாமையும் கொப்பளிக்க என்னைப் பார்த்தாள் செல்வி."ஆமா செல்வி! அழகு, கலர்... இது மாதிரி ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கே செத்துரலாம்னு முடிவு பண்ணிட்டேல்ல!நாளைக்கு வாழ்க்கையில இன்னும் பெரிய பெரிய சோதனைகள் வருமே செல்வி... அதெல்லாம் நீ எப்படித் தாங்கப் போறே? வேணாம்! ப்ளீஸ்... இப்பவே செத்துடேன்!""செல்வா, ப்ளீஸ் கெட் அவுட்!" - அவள் கண்களில் அழுகை முட்டியது.

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

 "அவனவன் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறது எப்படி? க்ளோனிங் பண்றது எப்படினு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கான். உனக்கு என்ன கவலை பாரு! (சிரித்தேன்) உலகத்துல ஒரு வேளை சாப்பாடு இல்லாம கோடிக்கணக்குல சாகுறாங்க.. இங்க உனக்கு சாப்பாடு, விதவிதமான டிரஸ், கேக்கறதெல்லாம் செய்யறதுக்கு அப்பா, அம்மா, பி.இ., இவ்வளவு இருந்தும் சாகறதுன்னா... உடம்பு முழுக்கத் திமிர்னு அர்த்தம்..!""வெளில போடா நாயே... கெட்-அவுட்!" உடைந்து போய் பெரிதாய் கத்தினாள். நான் பேசாது வெளியே வந்துவிட்டேன். அதற்குப் பிறகு கல்லூரி நாட்களில் செல்வியைப் பார்க்கவோ, பேசவோ சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. நான் மெக்கானிக்கல். அவள் இ.இ.இ.எப்போதாவது தென்பட்டால்கூட முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவாள். ஏறக்குறைய என்னை ஒரு விரோதி போலத்தான் பார்த்தாள்!ஒரு வருடம் முன்பு முன்னாள் மாணவர்கள் எல்லோரும் கல்லூரியில் சந்தித்து நலம் விசாரித்துக் கொள்ளக் கூடினோம். 1997-ம் வருட மாணவர்களில் ஏறக்குறைய அனைவரும் வந்திருந்தார்கள்.ஒரே ஜாலியும் கலாட்டாவுமாக இருந்தது அந்தச் சந்திப்பு. அநேகமாக அனைவருமே அடையாளம் மாறியிருந்தார்கள். அடையாளம் தெரியத் தெரிய... ஒரே ஆனந்தம்தான்! எல்லாரும் ஒரே நேரத்தில் பேசினோம். ஒரே நேரத்தில் பதில் சொன்னோம்! பெரும் பாலானவர்களுக்கு திருமணம் ஆகியிருந்தது. சிலர் மனைவி, குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். நாங்கள் பார்த்து ஏங்கிய சூப்பர் ஃபிகர்களெல்லாம் ஆன்ட்டிகளாகி இருந்தனர். கண்கள் நம்ப மறுத்தன. ‘ச்சீ... இது அவளில்லை’ என நாங்களே ஒரு ஆறுதலுக்கு சொல்லிக்கொண்டோம்!யாரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிற மாதிரி தெரியவில்லை. கஷ்டப்பட்டாலும் வெளியில் சொல்ல மனமில்லை! படிக்கிற காலத்தில் என்னைத் திரும்பிக்கூட பார்க்காத பெண்களெல்லாம் அன்று என்னை வியப்பாகப் பார்த்தபோது மனதில் ஒரு சந்தோஷம்! என் முகம் கொஞ்சம் டி.வி\யிலும் பத்திரிகைகளிலும் வந்து விட்டதால் என்னைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே இருந்தது. என் படங்கள் பற்றி, அதில் வந்த காட்சிகள் பற்றி பட்டிமன்றமே நடந்தது.

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

 திடீரென ஒரு பெரிய படகு கார் வந்து நின்றது. பென்ஸ்... உள்ளிருந்து அவள் இறங்கினாள். நாங்கள் கண்ணிமைக்காது பார்த்தோம். ஆ! உடலெங்கும் மினுமினுப்பு. மாநிறம். டாலடிக்கும் வைரம் காதிலும் கையிலும். நடையிலே ஒரு கர்வம். பார்வையில் ஒரு அலட்சியம். உலகம் என் காலடியில்தான் என்பது போல். ஆஹா.. இவளை எங்கோ பார்த்திருக்கிறேனே! சுரீரென உறைத்தது. ஹேய்... இது... இது... ஆம்... அவள், அதே கறுப்பு செல்விதான்!கண்ணிமைக்க முடியவில்லை. மூச்சுவிட முடியவில்லை... அங்கே ஒரு அசாதாரண அமைதி நிலவியது. செல்வி பார்த்து பொறாமைப்பட்ட சிகப்பழகிகளின் முகங்களைப் பார்க்க வேண்டுமே... பொறாமை தாண்டவம்!ஒரு கும்பல் அப்படியே செல்வியைச் சூழ்ந்தது. நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்! எல்லா கேள்விகளுக்கும் ஒரு தலையசைப்பு. மெல்லிய புன்முறுவல். அடிக்கடி மணி பார்த்துக் கொள்ளும் மெல்லிய ஆணவம்... வாழ்க்கையில் வெற்றியடைந்த அடையாளங்கள்.ஏறக்குறைய அனைவரும் கிளம்பிவிட்டனர். செல்வி கடைசியாக என்னிடம் வந்தாள். நான் இமைக்காது பார்த்தேன். அவளும் பார்த்தாள். மௌன விநாடிகள் நகர்ந்தன.'ஹாய் செல்வி..!' என்று மௌனத்தைக் கலைத்தேன். அவள் பேசாது என்னைத் தழுவிக் கொண்டாள். ஒரு இரண்டு நிமிடம். அப்படியே நின்றிருந்தோம். நண்பர்கள் புரியாமல் பார்த்தனர். என் மார்பில் ஈரமானது போல் உணர்ந்து திடுக்கிட்டுப் பார்த்தேன். செல்வி சத்தமில்லாமல் அழுதுகொண்டு இருந்தாள்."ஏய்... என்ன செல்வி இது... ... இதோ பார்..." மற்றவர்களுக்குத் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள். படிப்பை முடித்ததும் தனியாக ஒரு கம்பெனி தொடங்கி விட்டாளாம். வெறித்தனமான உழைப்பு. இன்று இந்தியாவெங்கும் ஐந்து கிளைகள்!"எதைப் பத்தியும் கவலைப்படல செல்வா... ராத்திரி, பகல் எதுவுமே தெரியாது. பகலெல்லாம் என் கம்பெனியில் இருப்பேன். ராத்திரி முழுக்க இன்டர்நெட்ல ரிசர்ச்.... ப்ச்... நேத்துதான் நீ பேசிட்டு போன மாதிரி இருக்கு. என்னிக்காவது உன்னைப் பாத்தா தேங்க்ஸ் சொல்லணும்னு நெனச்சேன்... நல்லவேளை! நீயும் நல்ல நிலைமையில் இருக்கே. இல்லன்னா இவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு நாம இப்படி இருக்கோமேனு உன் மனசு வருத்தப்பட்டிருக்கும்." நிறைய பேசினாள். மீட்டிங் முடிந்து தனியாக காபி ஷாப் வந்திருந்தோம்.

கனா காணும் காலங்கள் - செல்வராகவன்
கனா காணும் காலங்கள் - செல்வராகவன்

 "கல்யாணம் பண்ணலையா செல்வி?""ப்ச்... உன்ன மாதிரி ஒருத்தனை தேடிட்டிருக்கேன் செல்வா..."புருவம் உயர்த்திப் பார்த்தேன். பார்வை புரிந்து, "ஆனா, நீ வேணாம்!" என்றாள். சிரித்துவிட்டேன்."இப்ப நிறைய விஷயங்கள் புரியுதுடா... காலேஜ்ல எப்படில்லாம் இருந்தேன்னு நினைச்சா சிரிப்புதான் வருது. உலகம் ரொம்ப பெரிசுடா! நாமதான் அதைச் சுருக்கிடறோம்.’’எனக்குப் புரிந்தது. நானும் இதை உணர்ந்திருக்கிறேன். இளமையில் நிறைய விஷயங்கள் புரியாது. வயது ஆக ஆக ஒவ்வொன்றாகப் பிடிபடும். அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டால், வாழ்க்கை திசை மாறிப் போய்விடும். ஏறக்குறைய கண்ணீருடன் தான் இருவரும் பிரிந்தோம். இருவரும் செல் நம்பர்கூடப் பகிர்ந்துகொள்ளவில்லை. சில உறவுகளுக்குத் தூரம் அழகு!சோகங்களை மிதித்து, சோதனைகளை பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கி, இரவுகளில் அழுது, நாம் நம்புவது சரிதான் என்று ஆணித்தரமாக மனதினில் பதித்து, வெறித்தனமாக அலைந்து திரிந்தால்தான் வெற்றி சாத்தியமாகிறது.காரில் நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டு இருக்கிறேன்... செல்வி சொன்னது எனக்குள் சுற்றிக்கொண்டே இருந்தது. 'உனக்கென்ன... ஈஸியா டைரக்டராகிட்டே!"அப்போது சிரித்து, அடுத்த சப்ஜெக்ட் தாவிவிட்டாலும் மனசு அதை நினைத்து கொந்தளிப்பில் இருந்தது. சினிமாவில் என்னைக் குத்திக் கிழித்து ரணகளப்படுத்திய நபர்கள்தான் எத்தனை எத்தனை?யுவனும் நானும்!யுவன் எனக்கு முக்கியமான நண்பன். தொழில் ரீதியாகவும், மனதளவிலும் நிறைய பகிர்ந்து கொண்டு இருந்திருக்கிறோம். யுவன் என்றால் எனக்கு அணை போட முடியாத பொங்கிப் பாயும் இளமை துள்ளல்தான் நினைவுக்கு வரும். அவனை கல்யாண மேடையில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. ம்... எங்களுக்கும் வயதாகின்றது!

- செல்வராகவன்

(10.04.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)