Published:Updated:

காரைக்கால்: மலர்க் கண்காட்சி... சினிமாவை விஞ்சிய அலங்காரம்!

சினிமாவை விஞ்சி நடந்த மலர்க் கண்காட்சி
News
சினிமாவை விஞ்சி நடந்த மலர்க் கண்காட்சி

காரைக்கால் மாவட்ட வேளாண்துறை மூலம் அமைக்கப்பட்ட மலர்க் கண்காட்சியானது சினிமா பட சூட்டிங்குக்கு அமைக்கப்படும் செட்டை விஞ்சும் அளவுக்கு மிகவும் பிரம்மாண்ட அளவில் இருந்தது.

காரைக்கால்: மலர்க் கண்காட்சி... சினிமாவை விஞ்சிய அலங்காரம்!

காரைக்கால் மாவட்ட வேளாண்துறை மூலம் அமைக்கப்பட்ட மலர்க் கண்காட்சியானது சினிமா பட சூட்டிங்குக்கு அமைக்கப்படும் செட்டை விஞ்சும் அளவுக்கு மிகவும் பிரம்மாண்ட அளவில் இருந்தது.

Published:Updated:
சினிமாவை விஞ்சி நடந்த மலர்க் கண்காட்சி
News
சினிமாவை விஞ்சி நடந்த மலர்க் கண்காட்சி

தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் இணைந்து கார்னிவல் திருவிழாவை கடந்த 15-ம் தேதி தொடங்கி  18-ம் தேதி வரை நான்கு நாள்கள் நடத்தினார்கள்.

இத்திருவிழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ரேக்ளா ரேஸ், படகுப் போட்டிகள், மேஜிக் ஷோ, நாட்டுப்புற இசை நிகழ்வுகள், மினி மாரத்தான், வாலிபால், கபடி போட்டிகள், நாய்கள் கண்காட்சி ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சினிமாவை விஞ்சி நடந்த மலர்க்கண்காட்சி
சினிமாவை விஞ்சி நடந்த மலர்க்கண்காட்சி

இதில் காரைக்கால் மாவட்ட வேளாண்துறை மூலம் அமைக்கப்பட்ட மலர்க் கண்காட்சியானது சினிமா பட சூட்டிங்குக்கு அமைக்கப்படும் செட்டை விஞ்சும் அளவுக்கு மிகவும் பிரம்மாண்ட அளவில் இருந்தது.

ரூ.36 லட்சம் செலவில் 30,000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மலர்க் கண்காட்சியில் 100  -க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. புதுச்சேரி வேளாண்துறை மூலம் அமைக்கப் படும் இந்த மலர்க்கண்காட்சியில் காரைக்கால் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட வேளாண்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். மலர்க் கண்காட்சியில் இடம் பெற்ற  30,000-க்கும் மேற்பட்ட மலர்கள் மற்றும் செடி வகைகள் காரைக்கால் மாவட்ட வேளாண்துறை மூலம் மாதூரில் உள்ள வேளாண்துறைக்கு சொந்தமான இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டன.  

சினிமாவை விஞ்சி நடந்த மலர்க்கண்காட்சி
சினிமாவை விஞ்சி நடந்த மலர்க்கண்காட்சி

சுமார் 2,500 எண்ணிக்கையில் மட்டுமே வெளி மாவட்ட, மாநிலங்களிலிருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இது தவிர பல வண்ண மின் விளக்குகள், மலர் அருவிகள், பொங்கல் பண்டிகையை குறிக்கும் வகையில் மாடுகள், மண்பானைகள், கரும்புகள் உள்ளிட்டவை மலர்கள் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதைப் பார்வையாளர்கள் அனைவரும் ரசித்தனர்.