Published:Updated:

`இரண்டாவது குட்நியூஸ் உண்டா..?'- ஜாலி கேள்வியும் கரீனா கபூரின் பொறுப்பான பதிலும்!

கரீனா கபூர் நடிப்பில் தயாராகியுள்ள 'குட் நியூஸ்' திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. படம் தொடர்பாக கரீனா கபூரிடம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நேர்காணல் நடத்தியது.

கரீனா கபூர்
கரீனா கபூர்

செயற்கைக் கருத்தரிப்பு முறையை மையக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை, `குட் நியூஸ்'. கரீனா கபூர் நடிப்பில் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ளது.

கரீனா கபூர்
கரீனா கபூர்

படத்தில் அக்ஷய் குமார் - கரீனா கபூர் ஜோடி, க்யாரா அத்வானி - தில்ஜித் தோஷந்த் ஜோடி. செயற்கைக் கருத்தரித்தலுக்கான தயாரிப்பில் இறங்கும் அக்ஷய், தில்ஜித் இருவரின் விந்தணுக்களும் மாறிப்போய்விட, என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை. ராஜ்மெஹ்தா இயக்கத்தில் அக்ஷய்குமார், க்யாரா அத்வானி, தில்ஜித் தோஷந்த் கூட்டணியில் இந்தப் படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

சயிஃப் அலிகான் - கரீனா கபூர் தம்பதிக்கு தைமூர் என்ற மகன் இருக்கிறார். 'குட் நியூஸ்' படம் தொடர்பாக கரீனா கபூரிடம் நேர்காணல் நடத்திய ஆங்கிலப் பத்திரிகை, 'உங்களிடமிருந்து இரண்டாவது குட் நியூஸ் உண்டா?' என ஜாலியாகக் கேட்டது.

கரீனா கபூர்
கரீனா கபூர்

அதற்கு பதிலளித்த கரீனா, "எனக்கும் என் கணவருக்கும் மகன் தைமூர் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறான். இதுவரையிலும் எங்களுக்கு இரண்டாவது குழந்தை பற்றி எந்தத் திட்டமும் இல்லை. அதுவும் போக, சயிஃப் தனது வேலையில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறார்" என்றவர், வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமமாகக் கையாளத் தாங்கள் விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.

`நாம் திருமணம் செய்து கொள்ளலாமா..?'- சைஃப் அலிகானுக்கு கரீனா கபூரின் முதல் ரெஸ்பான்ஸ்