Published:Updated:

அமேசான் ப்ரைமிலும் `சலாம் ராக்கி பாய்' சொல்ல வைத்த கே.ஜி.எஃப்!

கே.ஜி.எஃப்
கே.ஜி.எஃப்

திரையரங்குகளைத் தொடர்ந்து ப்ரைமிலும் கல்லா கட்டியிருக்கிறது யாஷின் 'கே.ஜி.எஃப்.'

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்போதும் இருக்கும் அதே அளவு எதிர்பார்ப்பு தற்போது அதே படம் ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களில் வெளியாகும்போதும் இருக்கிறது. அந்தளவுக்கு மக்கள் அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் முதலிய பல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

Yash
Yash
KGF

இந்நிலையில், இந்த வருடம் இந்திய மக்கள் அமேசான் ப்ரைம் தளத்தில் எந்தத் திரைப்படத்தை அதிக முறை பார்த்துள்ளனர் என தேடினால், `மே ஐ கம் இன்' எனக் கெத்தாக லிஸ்டின் டாப்பில் நிற்கிறார் ராக்கி பாய். ஆம், ஏதோவொரு ஹாலிவுட் படமோ, பாலிவுட் படமோ இந்தப் பட்டியலின் டாப்பில் இருக்கும் என்று நாம் நினைக்கும் வேளையில் அந்த இடத்தில் இருப்பது கன்னட படமான கே.ஜி.எஃப்.

Vikatan

கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக பொருள்செலவில் உருவான இத்திரைப்படம் யாஷ் நடிப்பில் சென்ற வருடம் டிசம்பர் 21-ம் தேதி கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் வெளியாகி வசூல் வேட்டை புரிந்தது. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 5-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான இப்படம் அதிலும் ஹிட் அடித்து தற்போது இந்த லிஸ்டின் டாப்பில் இருக்கிறது. முதல் பாகம் வெளியானதில் இருந்தே பார்ட்-2 எப்போது வரும் என ரசிகர்கள் கேட்க கடந்த மார்ச் மாதம் பார்ட்-2 வின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

Viswasam
Viswasam

இந்த லிஸ்டில் நம்ம ஊரில் என்ன இருக்கிறது எனத் தமிழ் படங்களின் லிஸ்டை பார்த்தால் டாப்பில் இருப்பது விஸ்வாசம், அசுரன். தூக்குதுரை மற்றும் சிவசாமி ஆகியோருக்குப் பின் இந்த லிஸ்டிலும் இருப்பதும் தமிழ் பேசும் அதே ராக்கிபாய்தான்.

பின் செல்ல