Published:Updated:

`சிறப்புத் திருமண சட்டம் பற்றி தெரியாதா?’ - நெட்டிசன்கள் கேள்விக்கு குஷ்பு காட்டமான பதில்

குஷ்பு
News
குஷ்பு

நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சியை திருமணம் செய்வதற்காக நடிகை குஷ்பு மதம் மாறினார் என வெளியாகியுள்ள தகவல்களுக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

Published:Updated:

`சிறப்புத் திருமண சட்டம் பற்றி தெரியாதா?’ - நெட்டிசன்கள் கேள்விக்கு குஷ்பு காட்டமான பதில்

நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சியை திருமணம் செய்வதற்காக நடிகை குஷ்பு மதம் மாறினார் என வெளியாகியுள்ள தகவல்களுக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

குஷ்பு
News
குஷ்பு

கடந்த 1980-90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற பல பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சியை கடந்த 2000-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

குஷ்பு - சுந்தர்.சி தம்பதிக்கு திருமணம் நடந்து 20 வருடங்கள் கடந்துவிட்டன. சுந்தர்.சி நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என சினிமாவில் மிகவும் பிஸியாக வலம் வந்துகொண்டிருகிறார். அதேபோல் நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்புவும் நடிப்பு, டி.வி நிகழ்ச்சிகள், அரசியல் என தன் பணிகளில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் குஷ்பு தன் திருமணத்துக்காக மதம் மாறினார் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்களுக்கு குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

அதில், ``என் திருமணத்தை பற்றி கேள்வி கேட்பவர்கள் அல்லது நான் திருமணம் செய்துகொள்ள மதம் மாறிவிட்டேன் என்று கூறுபவர்கள், தயவு செய்து கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் இருக்கும் சிறப்புத் திருமண சட்டம் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை என நினைக்கிறேன். நான் மதம் மாறவும் இல்லை, என்னை மதம் மாறச் சொல்லி யாரும் கேட்கவும் இல்லை. எனது 23 வருட திருமணம், நம்பிக்கை, மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உறுதியானது. இது உங்களுக்குத் தேவையா?” என கடிந்து கொண்டுள்ளார்.

திருமணம்
திருமணம்

குஷ்பு கூறிய சிறப்புத் திருமண சட்டம் என்பது, `வெவ்வேறு மதத்தினர், ஜாதியினர்களுக்கு இடையே நடைபெறும் (கலப்புத் திருமணங்கள்) திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம். இந்தச் சட்டம் 1954-ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் section-4-ல் ("any two persons") எந்த இரண்டு நபர்கள் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உள்ளது. இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், தான் சார்ந்த மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு மாறாமல் இச்சட்டத்தின் கீழ் அதன் வழிமுறைகளுக்கு உட்பட்டு திருமணம் செய்து கொள்ளலாம்.