
சங்கீதா
ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி.’யைப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.
கடைசித் தேதி: 15.08.2018

இடமிருந்து வலம்
1. தஞ்சையின் அடையாளம் (6)
5. இந்தக் கோளுக்கு வளையம் இருக்கும் (2)
10. வில்லிலிருந்து புறப்படுவது ------ (3)
12. விரலிலிருக்கும் இதை வெட்டினால் பிறை போலிருக்கும் (3)
15. --------- கருத்தால் மழை வரும் (3)
19. அழகு என்பதை இப்படியும் சொல்லலாம் (5)
வலமிருந்து இடம்
4. வில் வித்தையில் சிறந்தவர் (5)
8. நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த ----- (3)
14. வீட்டுச் சுவரில் திரியும்; பூச்சிகளை உண்ணும் (3)
13. கரையும் பறவை (3)
18. நிலவுக்கு இன்னொரு பெயர் (2)
22. மரத்தை வேகமாகக் கொத்தி, பூச்சிகளைப் பிடிக்கும் பறவை (6)

மேலிருந்து கீழ்
1. இடி, மின்னலிலிருந்து மின்சாரத்தைக் கண்டறிந்த விஞ்ஞானியின் முதல் பாதிப் பெயர் (5)
2. மனிதரால் உருவாக்கப்பட்ட உயரமான அமைப்பு (4)
3. டைனோசர்கள் பூமியில் வாழ்ந்த காலம் (4)
4. மனிதர்களுக்கு இது இருக்கக் கூடாது (6)
9. தட்டானுக்கு இன்னொரு பெயர் (3)
11. மதுரை என்றதும் இது நினைவுக்கு வரும் (3)
16. எவரெஸ்ட் உயரமான------ (4)
17. வழித்தோன்றல்கள் (4)
கீழிருந்து மேல்
6. வீடு கட்ட இது அவசியம் (4)
7. மூத்த சகோதரன் (4)
19. திருப்பதியில் காலை வேளையில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் -------தான் ஒலிக்கும் (6)
20. இசைக்கருவிகளில் ஒன்று (4)
21. ------- தேங்காயிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள் (4)
22. கும்பகோணத்தின் புகழ்பெற்ற குளம் (5)
இந்தப் போட்டிக்கான விடை செப்டம்பர் 15, 2018 இதழில் இடம்பெறும்.
அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் புதிர்-6
சுட்டி விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை-600 002