Published:Updated:

அதிசயத் தட்டு!

அதிசயத் தட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
அதிசயத் தட்டு!

இன்ஃபோ ஸ்டோரி

ப்பாமீது ரொம்ப கோவமாக இருந்தாள் அஞ்சலி. அப்பாவுக்கு என்னதான் வேலை அதிகமாக இருந்தாலும் வாரத்துக்கு ஒரு கதைகூடவா சொல்ல முடியாது. ஞாயிற்றுக்கிழமைகூட ஆபீஸ் வேலை எனப் பறக்கிறார். இன்று அப்பா கதை சொன்னால்தான் சாப்பிடுவேன் என அடம்பிடித்தபடி அமர்ந்துவிட்டாள் அஞ்சலி.

தட்டில் சாப்பாட்டுடன் அம்மா எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். அஞ்சலியைப் பற்றி சொல்லவே வேண்டாம். பிடித்தால் புளியம்கொம்புதான். அப்பா அன்று தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தார். அப்பாவிடம் அம்மா அஞ்சலி சாப்பிடாமல் அடம்பிடிப்பதற்கான முன் கதைச் சுருக்கத்தைச் சொன்னார். அப்பாவுக்கும் மனசு கேட்கவில்லை. அவரே தட்டில் சாப்பாடு போட்டுக்கொண்டு அஞ்சலியிடம் வந்து அமர்ந்தார்.

அதிசயத் தட்டு!

``இன்னைக்கு உனக்குத் தட்டுக் கதை சொல்லப்போறேன்...’’ என்றபடி தட்டை நீட்டினார்.

‘‘தட்டுக் கதைலாம் வேணாம்... நான் சாப்பிட மாட்டேன்!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அதிசயத் தட்டு!‘‘நான் சொல்லப் போறது சாதாரணத் தட்டு இல்ல... பறக்கும் தட்டு!’’

‘‘ஓ ஏலியன் கதையா?’’ அஞ்சலி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

‘‘ஆமா... நீ சாப்பிட்டுகிட்டே கேட்டாத்தான் சொல்லுவேன்!’’

அஞ்சலி அவசரமாகத் தட்டை இழுத்துத் தன்னருகே வைத்துக்கொண்டு முதல் கவளத்தை வாய்க்குக் கொண்டுபோனாள்.

‘`பறக்கும் தட்டு பத்தி ரொம்ப நாளாவே நிறைய கட்டுக்கதைகளும் உலவிக்கிட்டு இருக்கு... அது என்னன்னு மொதல்ல பார்க்கலாம். விண்கலங்கள் வட்டமாக ஒரு தட்டுபோல இருக்கும்ங்கிற சிந்தனை மனிதர்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கு. ஒரு தட்டைக் காற்றிலே சுழற்றியபடி எறிந்தால் அது விர்ரென பறந்து மறுபடி புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ற ஒரு சுவாரஸ்யம் இதற்குக் காரணமா இருந்திருக்கலாம். ஒரு ராட்சதத் தட்டில் மனிதன் ஏறிப் பறக்க முடிஞ்சா பல மைல்தூரம் பறந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்துடலாம்னு நினைச்சாங்க!’’

‘‘ஓ.. பறக்கும் தட்டுன்னு சொல்ல ஆரம்பிச்சது இதனாலதானா?’’

‘‘ஆமா!’’

அதிசயத் தட்டு!

‘‘மற்றபடி வேறு கிரகங்களிலிருந்து வந்து பூமியைத் தொட்டுவிட்டுச் செல்லும் பறக்கும் தட்டுகள் சில மனிதர்களின் கண்களுக்குத் தென்பட்டதாவும் நிறைய கதைகள் உண்டு. வயல்வெளியில் ஒரு விண்கலம் வந்து இறங்கினதாவும் கிட்ட சென்று பார்க்கிறதுக்குள்ள அது விருட்டென பறந்துட்டதாவும் பல பேரு சொல்லியிருக்காங்க. விண்கலம் வந்து இறங்கிட்டுபோன  இடத்தில சூடா இருந்ததாவும், புல்லெல்லாம் கருகிப் போய் இருந்ததாவும் சொன்னாங்க. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள்ல இந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சதா பலபேர் சொல்ல ஆரம்பிச்சாங்க. விண்கலத்தில இருந்து தலையில ஆன்டெனா வெச்சுக்கிட்டு ஒரு ஜந்து இறங்கி வந்ததாகவும் அதன் கையில் பயங்கரமான ஆயுதங்கள் இருந்ததாகவும் சில பேர் சொன்னாங்க.’’

‘‘ஏன்... அமெரிக்கா, ஐரோப்பாவுல  இருக்கிறவங்க மட்டும் இப்படிச் சொன்னாங்கப்பா?’’

‘‘இது கேள்வி. அந்த நாடுகள்லதான் மொதல்ல ராக்கெட், சேட்டிலைட்னு ஆராய்ச்சிகளை ஆரம்பிச்சாங்க. ஸோ, அந்த மாதிரி நாடுகள்லதானே மக்களுக்கும் அதில் ஈடுபாடும் கற்பனையும் இருக்கும். இந்த மாதிரி சொன்னவர்கள் ஓரளவுக்கு விஞ்ஞானம் தெரிஞ்சவங்களா இருந்தாங்க.. பறக்கும் தட்டின் வேகம், அது கிளம்பும்போது வெளிவருகிற எரிவாயு, அதிலிருந்து இறங்கிய ஜந்துகளின் உடல் அமைப்புல்லாம் சேர்த்து சொல்லும்போது கேட்கிறவங்களுக்கு ஒரு நம்பகத்தன்மை இருந்துச்சு.’’

‘‘ஏமாத்தறதுக்காக அப்படிச் செஞ்சாங்களா?’’

‘‘சிலபேர் பரபரப்புக்காக அப்படிச் செஞ்சாங்க. சில பேர் அவங்களே அப்படி நம்பிட்டாங்க.. வானத்தில தெரியற விண்கல், எரி நட்சத்திரம் இதையெல்லாம்கூட பறக்கும்தட்டுன்னு நினைச்சுக்கிட்டாங்க. அடையாளம் தெரியாத சில பொருள்கள் ஆகாயத்தில பறக்கிறதா சொல்ல ஆரம்பிச்சாங்க. அதனால் உருவானதுதான் UFO கழகம். Unidentified Flying Objects  என்பது அதன் சுருக்கம். ஆனா அது எல்லாமே ஓரளவுக்கு விஞ்ஞானம் தெரிந்தவர்கள் சொன்ன கட்டுக்கதை... அல்லது கற்பனை என விஞ்ஞானிகள் மறுத்துட்டாங்க. வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இருக்கா... இல்லையானு விஞ்ஞானிகளே மாறுபட்ட கருத்து வெச்சிருக்காங்க.’’

‘‘இல்லாத ஒண்ணுக்கு சங்கம்லாம் வேற வெச்சுட்டாங்களா?’’

அதிசயத் தட்டு!

‘‘பாவம்பா யூ எஃப் ஓ ஆளுங்க.’’

‘‘ஆனா, யூஎஃப் ஓ ஆட்கள் ஒரு கேள்வி கேட்கிறாங்க. அமேசான் காட்டுல சில மைல் தூரத்துக்கு ஒரு நீள பாதை இருக்கு. அது சில ஆயிரம் ஆண்டு பழசு. அந்தப் பாதையை அமைச்சது  யார்...  ஏன் அந்தக் காட்டில் அமைக்கப்பட்டது... அதில் பயணம் செஞ்ச வாகனம் எதுனு கேள்விகளை அடுக்குகிறாங்க. அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வேற்றுகிரக வாசிகள் பயன்படுத்திய ரன்வேனு சொல்றாங்க.  இல்லைனா அத்தனை ஆயிரம் ஆண்டுக்கு முன்னாடி மனுஷன் ஆதிவாசியா இருந்தப்ப எப்படிக் காட்டுக்குள்ள ரன்வே அமைக்க முடியும்னு கேட்கறாங்க.’’

‘‘அமேசான் காட்டுக்குள்ள அப்படி இருக்காப்பா?’’

‘‘நீண்ட பாதை போல ஓர் இடம் இருக்கு. ஆனா அது இயற்கையா எரிமலை வெடிப்பு ஏற்பட்டு பாறைக்குழம்பு ஓடியதால ஏற்பட்ட பாதையா இருக்கலாம்னு விஞ்ஞானிங்க சொல்றாங்க.’’

‘‘ஓ!’’

‘‘பறக்கும் தட்டு ஆசாமிகளின் கை ஓங்கியிருக்கும் இன்னொரு இடம் ‘பெர்முடா ட்ரை ஆங்கிள்’ எனப்படும் கடல் பகுதி.

அதிசயத் தட்டு!

‘‘நிஜமாவாப்பா?’’

``ஆமாம், அங்கு கப்பலும் விமானமும் காணாமல் போவது உண்மைதான். ஆனா, அது கடல் சூறாவளிப் பகுதினு விஞ்ஞானிகள் சொல்றாங்க. அந்தச் சூறாவளியில சிக்கித்தான் விமானங்களும் கப்பலும் கடலுக்குள்ள மூழ்கிட்டதா சொல்றாங்க. அதை விஞ்ஞானிங்க சொன்ன பிறகு ஓரளவுக்கு நிலைமை சீரானது. ஆனாலும் என்ன, பறக்கும் தட்டுப் புரளிகளால் நமக்கு நிறைய காமிக்ஸ் கிடைச்சது. கார்ட்டூன் படங்கள் கிடைச்சது.’’

‘‘அப்போ... அவதார் மாதிரி படங்கள் நம்புற மாதிரி இருக்கே?’’

‘‘அதுவும் மனிதனின் கற்பனைதான். ஆனா மனுஷன் ஒரு நாள் வேற்றுகிரகத்துக்குப் போவதை நிஜமாக்குவான்...’’

அஞ்சலி ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தாள்.

‘‘அப்பா, கதை சொல்றேன்னு சொல்லிட்டு கதைவுடுறவங்களைப் பத்தி சொல்லி சமாளிச்சுட்டீங்க... ஆனாலும் இதுவும் செம.இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. தேங்க்ஸ் பா!’’