
சுட்டி விகடனின் சுட்டி க்ரியேஷன்ஸ் போட்டி காரைக்குடியில் இரண்டு பள்ளிகளில் சிறப்பாக நடைபெற்றது.
இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற க்ரியேஷன்ஸ் உருவாக்கும் போட்டியில் 400 மாணவர்களும், ஆலங்குடியார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இராம.சு.இராமநாதன் இராமநாதன் செட்டியார் ந. உ.நி. பள்ளியில் கொடுத்த நேரம் முடிவதற்குள் வைகிங் படகை அழகாக உருவாக்கிய ஏ. வாசிஃப் கான், எஸ்.கார்த்திகா, பி.விக்ரம், எஸ்.பிரசன்ன நாயகி, எஸ்.கமல், ஏ.விருக் ஷா ஆகியோர் பரிசும் சான்றிதழும் பெற்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``இது போன்ற பயிற்சிகள் படைப்புத் திறன், குழுப் பயிற்சி எனப் பலவற்றைச் சாத்தியமாக்குகின்றன.’’ என்றார் தலைமையாசிரியர் ஏ.பீட்டர்ராஜா.
ஆலங்குடியார் உ.நி.பள்ளியில் நடைபெற்ற போட்டி முதலில் வைகிங் படகை அழகாகச் செய்து முடித்த எஸ்.சசிகுமார், எம்.கல்யாண சுந்தரம், ஜெ.பிருந்தா ஆகியோர் பரிசும் சான்றிதழும் பெற்றனர். ``இந்த மாதிரிப் போட்டிகள், மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிப்பதாக’’ உற்சாகத்தோடு கூறினார் தமிழாசிரியர் பி.மாலதி.
கலந்துகொண்ட இரண்டு பள்ளிகளுக்கு நினைவுப் பரிசும், கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வாழ்த்துக்கள் சுட்டீஸ்!
- ச பிரபாகரன்
படம்: எஸ்.சாய் தர்மராஜ்