Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சிலையின் விலை 1500 கோடி!

தாய்லாந்து நாட்டில் யோக நிலை, நின்ற நிலை, படுத்த நிலை எனப் பார்க்கும் இடமெல்லாம் புத்தர் சிலைகள் இருக்கும். இதில், பாங்காக்கில் உள்ள தங்கப் புத்தர் சிலை மிகவும் பிரசித்தம். இந்தச் சிலை 9 பாகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு சாவி மூலம் 9 பாகங்களையும் பிரித்து இணைக்கலாம். இது சிற்பக் கலையில் உள்ள அதிசயம். இந்தச் சிலையின் எடை, ஐந்தரை டன். சிலையின் இன்றைய மதிப்பு, இந்திய ரூபாயில் 1500 கோடி ரூபாய்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பழைமையான துறைமுகம்

இந்தியாவின் மிகப்பழைமையான துறைமுகம், குஜராத்தில் மாநிலத்தின் அகமதாபாத்தில் கண்டறியப்பட்டுள்ளது. லோத்தல் (Lothal) என்ற 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய, நகரத்தின் கடற்கரையோரம் அமைந்த துறைமுகம் இது. இத்துறைமுகத்திலிருந்து துணிகள், நகைகள், தாது, கனிமப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளன. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா பொருளாதாரத்திலும் தொழில் வளர்ச்சியிலும் முன்னேறியிருந்ததன் அடையாளமாக லோத்தல் துறைமுகம் இருக்கிறது.

- அ.யாழினி பர்வதம்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஆளில்லா காவல் நிலையம்

முற்றிலும் இணைய வழியில் இயங்கும் உலகின் முதலாவது காவல் நிலையம், துபாயில் நிறுவப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன் (Smart Police Station) எனப்படும் இங்கே காவலர்கள் இருக்க மாட்டார்கள். புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவுசெய்தல் உள்ளிட்ட 60 சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். போலீஸ் நிலையத்தின் முகப்பு அறையில் இருக்கும் இயந்திரத்தில் எந்தச் சேவையைப் பெற வந்திருக்கிறோமோ அதற்கான டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம். பின்னர், காத்திருப்பு அறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் காவல் அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசினால், தேவைகள் நிறைவேற்றப்படும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

கூந்தல் பனை!

தென்னாப்பிரிக்கக் காடுகளில் காணப்படும் கூந்தல் பனை (Puya raimondii) 80 முதல் 150 ஆண்டுகள் வரை வாழும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒருமுறைதான் பூக்கும். இன்னோர் அதிசயம் என்ன தெரியுமா? அவ்வாறு பூத்ததும், மரம் அழிந்துவிடும். 40 அடி வரை வளரும் கூந்தல் பனையின் தண்டுப் பகுதியில், ஆயிரக்கணக்கில் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூக்கும். அதில் மில்லியன் கணக்கில் விதைகள் இருக்கும். இந்தப் பூவிலுள்ள தேன், ஹம்மிங் பறவைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

நி.சௌமித்ரா

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஸ்கிப்பிங் ரோபோ!

ஸ்கிப்பிங் விளையாடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஜப்பானில் ஒரு ரோபோ, ஸ்கிப்பிங் விளையாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது 160 நொடிகளில் 160 ஸ்கிப்பிங் செய்து, இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. ‘ஜம்பின்’ எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ, பெங்குவின் தோற்றத்தில் இருக்கும். இந்த ரோபோவின் இருபுறமும் நின்றபடி இரண்டு பேர் ஸ்கிப்பிங் கயிறைச் சுற்ற, அதற்கேற்ப  துல்லியமாக எகிறிக் குதித்து சாதனை படைத்துள்ளது இந்த ரோபோ.

அ.ஜாவித் அஹ்மத்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

தெரியுமா?

* உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் சிரபுஞ்சி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism