
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 8
ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `சிரிக்க சிரிக்க சரித்திரம்’ தொடரைப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.
கடைசித் தேதி: 15.09.2018

இடமிருந்து வலம்:
1. நாரைகளில் ஒன்று, கால்கள் சிவப்பாக இருக்கும் (6)
9. மழைக்காலம் (5)
11. காற்று அடைத்த உணவு (2)
13. காந்தி இறுதியாக உச்சரித்த வார்த்தை ஹே-----(2)
18. துணியை இதில் நெய்வார்கள் (2)
21. கும்பகோணத்துக்கு இன்னொரு பெயர் (4)
23. காவிரியின் வெள்ளப்பெருக்கைக் கொள்ளும் இடம் (5)
24. டென்னிஸில் உலகத்தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் (6)
வலமிருந்து இடம்:
3. விலை உயர்ந்த மரம் (5)
5. சிந்து, கங்கை ஆறுகளுக்கு அடுத்து பெரிய ஆறு (4)
6. தேனை விரும்பி உண்ணும் விலங்கு (3)
7. பேருந்து ஆங்கிலத்தில் (2)
8. மன்மதனின் மனைவி (2)
10. யானையைக் கையாள்பவர் (3)
14. ------------- செய்ய விரும்பு (3)
16. எவரெஸ்ட் இதில் இருக்கிறது (5)
19. தாத்தா பாட்டியிடம் இதைக் கேட்க எல்லோருக்கும் பிடிக்கும் (2)
20. மாலையில் மலரும் பூ (3)
மேலிருந்து கீழ்:
1. மங்கோலியப் பேரரசின் மாபெரும் மன்னன் (6)
2. குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறு (3)
3. உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு (5)
4. தாழ்ந்து தொங்கும் மடல் பூ (4)
14. காலையில் இந்தச் சாறு குடித்தால் நல்லது (6)
16. உதடு (3)
கீழிருந்து மேல் :
9. சுவைகளில் ஒன்று (3)
10. அரை (2)
12. இரு நாடுகளுக்கிடையே நடக்கும் சண்டை (2)
15. வீடு கட்டும் இடம் (2)
17. கொலோசியம் இந்த நகரில் உள்ளது (2)
22. கொல்கத்தா விமான நிலையம் (4)
23. நாமக்கல் மாவட்டத்திலுள்ள மலைவாசஸ்தலம் (5)
25. தட்டையான பாதத்தில் நகரும் உயிரினம் (3)
அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் புதிர்-8
சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002
இந்தப் போட்டிக்கான விடை அக்டோபர் 15, 2018 இதழில் இடம்பெறும்.

- சங்கீதா