சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

எக்ஸ் மேன் - டார்க் ஃபீனிக்ஸ்!

மார்வெல் காமிக்ஸின் அடுத்த பிரமாண்டமான படைப்பாகக் களமிறங்க உள்ளது எக்ஸ் மேன் - டார்க் பீனிக்ஸ். விண்வெளிக்குச் செல்லும் பயணம் தவறாகிப் போன பின்பு ஃபீனிக்ஸின் மொத்த சக்தியும் வெளிப்படும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. எக்ஸ் மேன் சீரிஸில் பன்னிரண்டாவது படமாக வெளியாக உள்ள இப்படத்தை ட்வென்டித் செஞ்சுரி ஃபாக்ஸ் தயாரிக்க சைமன் கின்பெர்க் இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி 14-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

டெக் பிட்ஸ்

தி ஃபென்டாஸ்டிக் ப்ளையிங் புக்ஸ் ஆப் மிஸ்டர். மோரிஸ் லெஸ்மோர்!

மோரிஸ் தன் சுயசரிதையை எழுதிக்கொண்டிருக்கும்போது புயலில் சிக்கி, புத்தகங்கள் மட்டுமே நிரம்பிய உலகத்துக்குள் இழுத்துச் செல்லப்படுகிறார். ஒரு பெண், தேவதைபோலத் தோன்றி ஒரு பறக்கும் புத்தகத்தை அவருக்குப் பரிசளிக்க, அதைப் பின்தொடர்ந்து சென்று ஒரு நூலகத்துக்குள் நுழைகிறார். பல்லாண்டு காலம் அங்கேயே தங்கி தன் சுயசரிதையை எழுதி முடித்துவிட்டு வயதான பிறகும் நம் உலகத்துக்குத் தன் இளமைப் பருவத்துக்கே மோரிஸ் திரும்பி வருவதே கதை. கற்பனைகளுடன் பல புதிர்களையும் இணைத்து வில்லியம் ஜாய்ஸ் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

டெக் பிட்ஸ்

அல்டோ’ஸ் அட்வென்சர்!

டைவிடாது பனிமலையில் சறுக்கிச் செல்லும் அல்டோவின் சாகசப் பயணமே இந்த கேம். இயற்பியலின் அடிப்படையை உணர்ந்து அல்டோவைக் கீழே விழாமல் கொண்டுசேர்ப்பதே கேமின் இலக்கு. செல்லும் வழியில் விலங்குகளைக்  காப்பாற்றுவது, கூரைகள் மற்றும் பள்ளங்களைத் தாண்டிச் செல்வது, மலை ஏறுவது உள்ளிட்ட பல சாகசங்களை நிகழ்த்தியபடி செல்கிறான் அல்டோ. ஆல்பைன் மலைக்கு அருகில் உள்ள கிராமங்கள், பழைமையான காடுகள் மற்றும் இடிந்த கட்டங்கள் ஆகியவற்றின் வழியே அல்டோவைப் பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதே நமது இலக்கு.

டெக் பிட்ஸ்

வி.ஆர் ரியல் ஃபீல்!

கீபோர்டிலும் ஜாய் ஸ்டிக்கிலும் வீடியோ கேம்களை விளையாடி அலுத்துப்போன சிறுவர்களுக்குப் புத்துயிர் ஊட்ட வந்திருக்கிறது விர்ச்சுவல் ரியாலிட்டி ரியல் ஃபீல். இது களத்துக்கே சென்று நேரில் விளையாடுவது போன்ற உணர்வைச் சிறுவர்களுக்குத் தருகிறது. கிராபிக்ஸ் நிறைந்த விளையாட்டுகளை 3 D -யில் விளையாடி மகிழ இந்த கேட்ஜெட் உதவுகிறது. இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்டீயரிங் உதவியுடன் உங்கள் வாகனத்தை வேகமாகச் சீறிப்பாய செய்ய முடியும். கார் ரேஸ், பைக் ரேஸ் மற்றும் பேஸ்பால் எனப் பல விளையாட்டுகளை விளையாடி மகிழ இது உதவுகிறது.

டெக் பிட்ஸ்

ஸ்கியூபில்ஸ் மேத்ஸ் பிங்கோ!

ணிதத்தின் அடிப்படைகளை விளையாட்டுகள் மற்றும் புதிர்கள் மூலம் குழந்தைகளிடம் கொண்டுசேர்க்க உதவுகிறது ஸ்கியூபில்ஸ் மேக்ஸ் பிங்கோ. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை எளிமையான கார்டு கேம்களின் வழியே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறது. எளிமை, நடுத்தரம், கடினம் ஆகிய அளவுகளில் கணிதப் பயிற்சி மேற்கொள்ள இந்த ஆப் உதவுகிறது. விளையாட்டில் வெற்றி பெறுவதன்மூலம் குழந்தைகள் ஐஸ்கிரீமைப் பெற முடியும். ஒவ்வொரு விளையாட்டின் முடிவிலும் நம் மதிப்பெண்ணைச் சுட்டிக்காட்டி வழிநடத்துகிறது இந்தச் செயலி!

- ச.முத்துகிருஷ்ணன்

டெக் பிட்ஸ்

தெரியுமா?

*இந்தியாவின் முதல் பெண் முதல் அமைச்சர் சுசேதா கிருபளானி.