சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பூனையைப் போல நரி!

ட ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனப் பகுதிகளில் காணப்படும் சிறிய வகை நரி, ஃபென்னெக் (Fennec Fox). தோற்றத்தில் பூனையைப்போலவே இருக்கும் இது, அதிக வெப்பத்தைத் தாங்கும் உடல் அமைப்புகொண்டது. கூட்டமாக வாழும் இவை, ஊர்வன, எலி, பூச்சி, முட்டை போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். தண்ணீர் குடிக்காமலேயே நீண்ட நாள் சமாளிக்கும் திறனுள்ளவை. இதன் இனப்பெருக்க காலம் 50 நாள்கள். ஒரு தடவைக்கு 2 முதல் 5 குட்டிகள் வரை ஈனும். சராசரி ஆயுள் காலம் 10 ஆண்டுகள். கழுகு, ஆந்தை, குள்ளநரி ஆகியவற்றால் இவை வேட்டையாடப்படுவதுண்டு.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

அரிய வகை தும்பி!

பார்க்கவே அழகானவை தட்டான்பூச்சி எனப்படும் தும்பிகள். பல வண்ணங்களில் பல வகைகளில் காணப்படும் இவை, 10,0000 கிலோமீட்டர் தூரம் வரைகூடப் பறக்கக்கூடியவை. இந்தியாவிலேயே முதன்முறையாக, கேரளாவின் தேக்கடி புலிகள் காப்பகத்தில் ஒரு புதிய வகை தும்பி கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு, ‘இந்தியன் எமரால்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பறக்கத் தயாராகும் பார்க்கர்!

சூரியனை இதுவரை இல்லாத அளவு மிக நெருக்கத்தில் ஆய்வுசெய்யும் விண்கலத்தை அடுத்த ஆண்டு ஜூலையில் நாசா அனுப்புகிறது. இதற்கு யூகின் பார்க்கர் (Eugene Newman Parker) என்ற விண்வெளி விஞ்ஞானி பெயரை வைத்துள்ளனர். 60 ஆண்டுகளுக்கு முன்னர், சூரியனின் புறப்பரப்புக்கு வெளியே அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றல் மண்டலம் இருப்பதைக் கண்டறிந்தவர், யூகின் பர்க்கர். இதற்கு, சோலார் விண்டு எனப் பெயரிடப்பட்டது. சூரியனின் புறப்பறப்பைவிட, அதைச் சுற்றியுள்ள ஆற்றல் மண்டலம் சூடாக இருப்பது ஏன் என  இந்த விண்கலம் ஆய்வு செய்யும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பிரமிப்பூட்டும் பூச்சி மியூசியம்!

ந்தியாவிலேயே முதன்முறையாக கோயம்புத்தூரில், ‘பூச்சிகள் அருங்காட்சியகம்’, கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், 22,122 இனங்களைச் சேர்ந்த 84,000 பூச்சிகள், பூச்சிகளின் மாதிரிகள் இடம்பெற்றுள்ளன. 5 கோடி ரூபாய் செலவில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் சென்றால், மறக்காம இங்கே விசிட் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கோழியா முட்டையா?

ண்டனில் வசிக்கும் கெயில் பீன் (Kyle Bean) என்பவரின் பொழுதுபோக்கு, வீணான பொருள்களில் அழகான சிற்பங்களை உருவாக்குவது. சமீபத்தில், பல வண்ணங்களில் உள்ள முட்டைகளின் ஓடுகளைவைத்துச் செய்த கோழி உருவம் செம்ம... இந்தக் கோழியின் கால் முதல் அலகு வரை எல்லாமே முட்டை ஓடுகளே. இதற்காக 3 நாள்கள் தேவைப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தை வாங்கப் பலரும் போட்டியிட்டபோதும், கெயில் பீன்  இதை விற்கவில்லை.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

தெரியுமா?

* உலகின் மிகப் பெரிய தீவு, கிரீன்லாந்து.