சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

இந்த நாள்

இந்த நாள்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

இந்த நாள்

தாவர உணவு வகைகளை அதிகம் உட்கொள்ளவும் தாவரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துப்பொருள்களைப் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் உலக சைவ தினம் கொண்டாடப்படுகிறது. வட அமெரிக்க சைவக் கழகம், 1977-ம் ஆண்டு இந்த தினத்தை அறிவித்தது. இதை, 1978-ம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்துவதை நோக்கி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள்

யர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். இந்திய சுதந்திரத்துக்காகவும் பெண் விடுதலைக்காகவும் போராடிய தலைவர். எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். பிரம்மஞான சபையின் கிளையை, சென்னை அடையாறில் நிறுவினார். இயல்பாகவே புரட்சி குணம் கொண்டிருந்த அன்னி பெசன்ட், இந்தியாவில் ஆங்கில அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார். 1917-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நாள்

பெண் குழந்தைகள், இந்தப் பூவுலகின் வரம். ஆனால், யதார்த்தத்தில் பெண் குழந்தைகள் பாலினப் பாகுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்; சமத்துவமற்ற நிலையில் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்குக் கல்வி, மருத்துவம், சட்ட உரிமை ஆகியவை மறுக்கப்படுகின்றன. குழந்தைத் திருமணம், வன்கொடுமை போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கான சமத்துவம் மற்றும் விழிப்புஉணர்வை ஏற்படுத்த, அக்டோபர் 11-ம் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக ஐ.நா சபை 2011-ம் ஆண்டு அறிவித்தது.

இந்த நாள்

பால், உறவுக்குத் தூது செல்லும் உன்னத சேவை. உலகத் தபால் யூனியன் 1874-ம் ஆண்டு அக்டோபர் 9 -ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிறகுதான் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1969-ம் ஆண்டு உலகத் தபால் யூனியன் மாநாடு டோக்கியோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் 9-ம் தேதியை உலக அஞ்சல் தினமாகக் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த நாள்

கத்துக்கும் முகத்துக்கும் ஆரோக்கியம் கலந்த அழகை அளிக்கவல்லது புன்னகை. ஆனந்த  வாழ்க்கையின் வெளிப்பாடாக விளங்கும் இதை, ஹார்வே பால் (Harvey Ball) என்பவர், 1963-ம் ஆண்டு அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டு முதல் உலகப் புன்னகை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள்

`மக்கள் ஜனாதிபதி’ எனக் கொண்டாடப்பட்ட தலைவர்; மாணவர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர். எளிமையான குடும்பத்தில் பிறந்து (அறிவியலில்) வலிமையான தலைவராக உயர்ந்த தன்னம்பிக்கைக்காரர். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகப் பதவிவகித்தவர். இந்திய ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டால் `இந்திய ஏவுகணை நாயகன்’ எனக் கொண்டாடப்படுகிறார்.

இந்த நாள்

தெரியுமா?

*ஆப்பிரிக்கக் கண்டம் இருண்ட கண்டம் என்று அழைக்கப்படுகிறது.