சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

இந்த நாள்

இந்த நாள்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

இந்த நாள்

லக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), 1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. உணவுப் பிரச்னை, பசி மற்றும் வறுமைக்கு எதிராகப் போராடுவதே இந்த அமைப்பின் குறிக்கோள். உணவு இருந்தும் அது கிடைக்காமல் பலர் இறப்பதைக் கண்டு, ஐ.நா. சபை வருத்தம் தெரிவித்தது. மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 1980-ம் ஆண்டு  இந்த தினத்தை அறிவித்தது.

இந்த நாள்

லக மக்களில் பாதி பேர், ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில்தான் உயிர் வாழ்கின்றனர். வறுமையின் காரணமாக தினமும் உயிரிழப்பு ஏற்படுவதாக, யுனிசெஃப் (ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்) கூறுகிறது. இந்த வறுமையை ஒழிக்க, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி உலக  வறுமை  ஒழிப்பு  தினமாகக் கொண்டாடப் படுகிறது.

இந்த நாள்

லகில் மீண்டும் ஒரு போர் வரக் கூடாது என்பதற்காக, 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி, ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபைதான் உலக சமாதானத்துக்கான உலகின் மிகப்பெரிய அமைப்பு. இந்தச் சபையில் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன. இந்தியாவும் நிரந்தர உறுப்பு நாடாகச் சேர முயன்றுவருகிறது. ஐ.நா சபை தொடங்கிய தினமே ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள்

சிவகங்கையை ஆண்ட முத்துவடுகநாதரிடம் பணியாற்றிய படை வீரர்கள், மருதுபாண்டியர்கள். ஆங்கிலேயத் தளபதி அக்னியூ தலைமையில் பெரும்படை ஒன்று, மருதுபாண்டியருக்கு எதிராக அமைக்கப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்த்துப்   போரிட்ட   புரட்சியாளர்கள், தோற்கடிக்கப்பட்டனர். மருதுபாண்டியர்கள் கைதுசெய்யப்பட்டு, 1801-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

இந்த நாள்

மக்கெல்லாம் மிகவும் அவசியமான தினம் இது. நமக்கான முதல் செலவே சேமிப்பாகத்தான் இருக்க வேண்டும் எனச் சொல்வார்கள். `சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதை மனதில்கொண்டு பணத்தைச் சேமிக்கப் பழக வேண்டும். பணத்தை நல்ல முறையில் சேமித்துவைக்க வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்ளன. இதுபோன்ற அரசு நிறுவனங்களில் பணத்தைப் பாதுகாப்பாகச் சேமிக்கலாம். சிக்கனமாகச் செலவுசெய்வதை வலியுறுத்தவே, உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள்

தெரியுமா?

மாவீரன் அலெக்ஸாண்டர் மறைந்த இடம் பாபிலோன்.