Published:Updated:

மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

Published:Updated:
மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

டந்த 60 ஆண்டுகளில், ஏறக்குறைய அனைத்து அமெரிக்க அதிபர்களும் இவருடன் சேர்ந்து புகைப்படம்

மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

எடுத்துள்ளார்கள். அந்த விஐபி யார் தெரியுமா? வால்ட் டிஸ்னி உருவாக்கிய, மிக்கி மவுஸ். அந்த  எலியாருக்கு நவம்பர் 18-ம் தேதியுடன் 90 வயது ஆகிறது. உலகம் முழுக்க, மிக்கி மவுஸின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சுறுசுறுப்பாகி இருக்கிறது.

மிக்கி மவுஸ் உருவான கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். யுனிவர்சல் நிறுவனத்தில் பணியாற்றிவந்த வால்ட் டிஸ்னி, அங்கிருந்து வெளியேறி, தன்னுடைய ஆஸ்தான ஓவியர் அப் ஐவர்க்ஸ் மற்றும் வில்ஃரெட் ஜாக்சனுடன் இணைந்து புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். புதிய கதாபாத்திரங்களை உருவாக்க விவாதித்தார். ஐவர்க்ஸ் வரைந்த பாத்திரம்தான், மிக்கி மவுஸ். டிஸ்னி பணிபுரிந்த அலுவலகத்து மேஜையில் ஓர் எலி அடிக்கடி வந்துசெல்லும். அதனுடைய சேட்டைகள்தான் கதை. முதலில், ‘மார்ட்டைமர் மவுஸ்’ என்றே டிஸ்னி பெயரிட்டார். மனைவி பெயரை மாற்றும்படி சொன்னதால், மிக்கி மவுஸ் என்றானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

ஒன்று தெரியுமா? 1928 மே 28-ம் தேதியே மிக்கி மவுஸ் முதலில் உருவான நாள். ஆனால், மிக்கி மவுஸின் முதல் கார்ட்டூன் படமான ‘பிளேன் கிரேஸி’ திரைப்படத்தை யாருமே முன்வந்து வினியோகிக்கவில்லை. அடுத்த படமான, ‘தி கேலப்பிங் கௌச்சோ’வுக்கும் இதே நிலை. மூன்றாவது படமான ‘ஸ்டீம்போட் வில்லி’ வெளியான நாளையே (1928 நவம்பர் 18) அறிமுக தினமாகக் கொண்டாடுகின்றனர்.

கலிஃபோர்னியாவில் இருக்கும் கலிசோட்டா என்ற கற்பனை மாகாணத்தின் மவுஸ் டவுனில் வசிக்கும் மிக்கி மவுஸ், ஆரம்பத்தில் சேட்டைகள் செய்யும் கதாபாத்திரமாக இருந்தாலும், பின்னாளில் சாகசங்களைத் தேடும் துடிப்பான நாயகனாக மாறினார் மிக்கி. 90-வது பிறந்தநாள் என்பதால், பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

மிக்கியுடன் ஒரு டான்ஸ்!

டிஸ்னி இணையதளத்தில் ஒரு சிறப்பு இணைப்பை உருவாக்கியுள்ளார்கள். மிக்கி மவுஸ் ரசிகர்கள், இந்தத் தளத்துக்குச் சென்று, ஒரு பாடலை ஒலிக்கவிட்டு, அதற்கேற்ப நடனம் ஆடி, வீடியோவாக அனுப்பினால், சிறப்புப் பரிசுகள் காத்திருக்கின்றன.

https://bit.ly/2QGwcYA

சிறப்பு கலெக்டர்ஸ் எடிஷன்!

இந்த ஆண்டு ஜனவரி முதலே ஒவ்வொரு மாதத்தின் 18-ம் தேதியில் சிறப்பு நினைவுப் பொருள்களை வெளியிட்டு வருகிறார்கள். காபி கோப்பைகள், கீ செயின்ஸ், பொம்மைகள் எனப் பலவிதமாக அசத்துகிறார்கள்.

https://bit.ly/2DBw9dJ

மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

மிக்கி மவுஸ் உணவகங்கள்!

உலகம் முழுக்க இருக்கும் வால்ட் டிஸ்னி விடுதிகள் மற்றும் உணவகங்களில், நவம்பர் 16 முதல் 18 வரையில் மிக்கி மவுஸ் சார்ந்த உணவு வகைகள் விற்கப்படும். பீட்ஸா முதல் பர்கர்  ஸ்பெஷலாகத் தயாரிக்கப்படுகிறது.

கண்காட்சி!

உலகம் முழுக்க நவம்பர் மூன்றாவது வாரம், ‘மிக்கி மவுஸ் எக்ஸிபிஷன்’ வாரமாகக் கொண்டாடப்படும். 10 பகுதிகளாக நடக்கப்போகும் இந்த விழாவில், ஒவ்வொரு 10 ஆண்டிலும் மிக்கி மவுஸ் பெற்ற மாற்றங்கள், பரிணாமங்கள் எனப் பல அரிய தகவல்களைப் பார்வைக்கு வைக்கிறார்கள்.

சிறப்பு ஓவியம்!

அனிமேஷன் மேதை மார்க் ஹென் இந்த 90-வது பிறந்தநாளுக்காக ஒரு சிறப்பு மிக்கி மவுஸ் ஓவியத்தை வரைந்து, நவம்பர் 18 வெளியிடுகிறார். இந்த விழா, தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.
சிறப்புத் திரையிடல்!

கடந்த 90 ஆண்டுகளில் வந்த மிகச்சிறந்த மிக்கி மவுஸ் கார்ட்டூன்களை நவம்பர் 18-ம் தேதி, ஒளிபரப்புகிறது. 1928 முதல் இதுவரை வந்த அனைத்து கார்ட்டூன்களைப் பற்றிய ஆவணப்படமும் அன்று ஒளிபரப்பாகிறது.
சேட்டை கொஞ்சமும் குறையாத, இளமை கொஞ்சமும் மாறாத இந்த 90 வயது மிக்கி தாத்தாவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லி, கொண்டாட்டத்தில் பங்கேற்கலாம் வாங்க!

மிக்கி 90 - மெகா கொண்டாட்டம்

மிக்கியும் மற்றவர்களும்!

மின்னி மவுஸ்: மிக்கியின் தோழி. மிக்கி மவுஸின் முதல் திரைப்படத்தில் தோன்றிய இவரையே, மிக்கி திருமணம் செய்துகொண்டார்.

டொனால்டு டக்: மிகவும் கோபக்கார வாத்து. மிக்கியின் உயிர் தோழன். அதிர்ஷ்டத்துக்கும் டொனால்டுக்கும் ஏழரைப் பொருத்தம். இவருக்கு ஏற்படும் விபத்துக்கள் சிரிப்பு வெடிகள்.

கூஃபி: மந்த புத்திகொண்ட, ஆனால் நல்ல நாய். ஒரு செயலையும் சரியாகச் செய்யமுடியாமல் திணறும்.

ப்ளூட்டோ: 1930-ம் ஆண்டு, ஒன்பதாவது கிரகம் கண்டறியப்பட்டபோது உருவாக்கப்பட்டதால் ப்ளூட்டோ என்று பெயர். மிக்கியின் வளர்ப்பு நாய். புதிய நண்பர்கள் யாரையாவது மிக்கி கொஞ்சினால்,  கோபம் வந்துவிடும்.

பீட்: பீட்டர் என்ற இந்தப் பூனைதான் மிக்கியின் பிரதான எதிரி. மிக்கி எந்தச் சாகசம் செய்தாலும் அதற்குப் போட்டியாக வந்து நிற்கும். தன் புத்திசாலித்தனத்தால் மிக்கியையே கலங்கவைக்கும்  திறமைசாலி.

- கிங் விஸ்வா