சுட்டி ஸ்டார் நியூஸ்!
விளையாட்டு
Published:Updated:

“மியூசிக் டைரக்டர் ஆகப்போகிறேன்!” - ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2’ சஹானா

“மியூசிக் டைரக்டர் ஆகப்போகிறேன்!” - ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2’ சஹானா
பிரீமியம் ஸ்டோரி
News
“மியூசிக் டைரக்டர் ஆகப்போகிறேன்!” - ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2’ சஹானா

“மியூசிக் டைரக்டர் ஆகப்போகிறேன்!” - ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2’ சஹானா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குட்டீஸ்களின் ஃபேவரைட், ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்’. இதன் சீசன் 2 நிகழ்ச்சியில், தன் இனிமையான குரல் மற்றும் பியானோ வாசிப்பால் கவர்ந்தவர், சஹானா. பார்வை இல்லாதது குறையல்ல எனத் தன்னம்பிக்கையுடன் வலம்வந்து, இரண்டாவது ரன்னர்அப்பாக தேர்வான இந்தக் குட்டித் தேவதையைச் சந்திப்போமா...

‘‘ஹாய் அக்கா... நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். என் தம்பி பெயர் ஆதிக். நான் நாலு வயசிலிருந்தே மியூசிக் கத்துக்கிறேன். திவ்யலட்சுமி மிஸ்தான் எனக்குப் பாட்டு சொல்லிக்கொடுக்கறாங்க. தினேஷ் மாஸ்டர்கிட்ட கீ-போர்டு கத்துக்கிறேன். சரிகமப லிட்டில் சாம்ப்ஸில் மூன்றாவது பரிசு வாங்கியிருக்கேன். என் அம்மா ஸ்ரீலோகினிக்கு பூர்வீகம், ஸ்ரீலங்கா. அப்பாவுக்குத் தமிழ்நாடு. பிறக்கும்போதே என் கண்கள் மூடித்தான் இருந்துச்சாம். விஷயம் தெரிஞ்சு அம்மா ரொம்ப அழுதாங்களாம். அப்பாதான் ஆறுதல் சொல்லியிருக்கார். கண் தெரியாத குறையே எனக்கு வரக்கூடாதுன்னு பார்த்து பார்த்து வளர்த்தாங்க. ஐ லவ் மம்மி... ஐ லவ் டாடி’’ எனப் புன்னகைக்கிறார் சஹானா.

‘‘சஹானாவுக்கு சின்ன வயசுல விளையாட பொம்மை வாங்கிக்கொடுக்கிற மாதிரிதான் கீ-போர்டும் வாங்கிக்கொடுத்தேன். சவுண்டுகளை ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சுடுவா. அதனால், கீ-போர்டு கத்துக்கொடுக்க அனுப்பினோம்.

“மியூசிக் டைரக்டர் ஆகப்போகிறேன்!” - ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2’ சஹானா

பலரும் இந்தக் குழந்தைக்குக் கத்துக்கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. தினேஷ் மாஸ்டர்தான் சம்மதிச்சார். அவர்கிட்ட நாலு வயசிலிருந்து கத்துக்கிறா. பாட்டு கிளாஸுக்கும் போக ஆரம்பிச்சா. அவளுடைய பொழுதுபோக்கு இசை மட்டுமே’’ என்கிறார் சஹானாவின் தந்தை நரேன்.

‘‘ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2-வுக்கு செலக்ட் ஆனதும், சஹானாவின் லைஃப்பே மாறிடுச்சு. இதுக்கு முன்னாடி சஹானாவை வெளியே எங்கேயும் கூட்டிட்டுப் போனதில்லை. எல்லோரும் வித்தியாசமா பார்க்கிறதால் தவிர்த்தோம். இப்போ, பலர் வீட்டுக்குள்ளேயும் அவங்க மனசுக்குள்ளேயும் சஹானா நுழைஞ்சுட்டா.

சரிகமப லிட்டில் சாம்ப்ஸில், சஹானாவின் வாய்ஸ் டிரெயினர், நிர்மலா மேடம். அவங்க எக்ஸ்ட்ரா கேர் எடுத்து டிரெயின் பண்ணாங்க. அந்த செட்டுல எல்லோருமே சஹானாவுக்கு ஃப்ரெண்ட்ஸ். நடுவர்கள் எல்லோரும் சேர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கையால் சஹானாவுக்கு கீ-போர்டு பிரெசன்ட் பண்ணாங்க’’ என நெகிழ்கிறார் அம்மா, ஸ்ரீலோகினி.

“மியூசிக் டைரக்டர் ஆகப்போகிறேன்!” - ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2’ சஹானா

அந்தப் படப்பிடிப்பு தளத்திலேயே, ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு’ மற்றும் ‘ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு’  சாதனைகளையும் சஹானா பெற்றுள்ளார்.

‘‘இப்படி ஒரு சாதனைக்கு ஊக்குவிச்சு பண்ணவெச்ச ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்’ டைரக்டர் விஜயகுமார் சாருக்கு தேங்க்ஸ். இப்போ அந்த புரோகிராம் முடிஞ்சிருச்சு. இவ்வளவு நாளா அடிக்கடி ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டேன். இனிமே கரெக்ட்டா போய் படிக்கணும். நான் சூப்பராவும் படிப்பேன். எனக்குப் பாட்டும் பிடிக்கும், பாடமும் பிடிக்கும். வருங்காலத்தில் பெரிய மியூசிக் டைரக்டரா ஆகணும். உங்களுக்காக ஒரு பாட்டு வாசிக்கிறேன்’’ எனச் சொல்லிவிட்டு, கீ-போர்டு வாசித்தவாறு பாடினார் சஹானா.

‘இது ஒரு பொன்மாலைப் பொழுது..!’

- வெ.வித்யா காயத்ரி, படங்கள்: பா.காளிமுத்து