Published:Updated:

“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”

“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”

“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”

‘‘என் ஃப்ரெண்ட்ஸுக்கு பொம்மைன்னா ரொம்பப் பிடிக்கும். எனக்கோ அந்தப் பொம்மையைச் செய்யப் பிடிக்கும்'' என்கிற இஷானா, படிப்பது நான்காம் வகுப்பு.

டெடி பியர், மிக்கி மவுஸ் என விதவிதமான சாஃப்ட் டாய்ஸ் செய்து, புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளைச் சந்தித்து பரிசாக அளிக்கிறார் இஷானா.

“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”

‘‘என் அம்மா பிசினஸ் வுமன். நான் செய்யும் சின்னச் சின்ன நல்ல விஷயங்களைப் பாராட்ட, டாய்ஸை கிஃப்டாகக் கொடுப்பாங்க. சாப்பாடு ஊட்டறது, ஸ்கூலுக்குக் கிளப்புறதுனு அம்மா எனக்குச் செய்ற வேலைகளை, நான் என் பொம்மைகளுக்குச் செய்வேன். எனக்கும் டாய்ஸ் செய்ய ஆசை வந்துச்சு. ஆன்லைனில் டாய் மேக்கிங் வீடியோ பார்த்து, சாக்லெட் பேப்பர், நூல், க்ளே வெச்சு ஒரு பொம்மையைச் செஞ்சேன். ரொம்ப சந்தோஷமாயிருச்சு. தினமும் ஒரு பொம்மையைச் செய்ய ஆரம்பிச்சேன். என் ஆர்வத்தைப் பார்த்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி, சாஃப்ட் டாய்ஸ் செய்ய கத்துக்கொடுத்தாங்க. முதன்முதலா செஞ்சதை, என் அம்மாவுக்கு கிஃப்ட் பண்ணினேன். ‘500 ரூபாய்க்குக் கடையில் வாங்கும் பொம்மையை, 200 ரூபாய்க்குள்ளேயே செஞ்சுடலாம்'னு ஆன்ட்டி சொன்னாங்க’’ என்ற இஷானா, வீடு முழுக்க வைத்திருக்கும் பொம்மைகளைக் காட்டுகிறார்.

மகளைக் கட்டியணைத்தபடி ஆரம்பிக்கிறார், அம்மா திவ்யா. ‘‘முன்னாடியெல்லாம் டிவியில் கார்ட்டூன் பார்த்துட்டிருந்தவள், இப்போ ‘ஸாரி, உங்களைப் பார்க்க டைம் இல்லை'னு டாய்ஸ் செஞ்சிட்டிருக்கா.
இந்த டாய் மேக்கிங் ஆக்டிவிட்டியால் இஷானாவின் கான்சன்ட்ரேஷன் பவரும் அதிகமாகியிருக்கு.  ஃப்ரெண்ட்ஸ் பிறந்தநாளுக்கு அவளே   செஞ்ச பொம்மைகளை கிஃப்ட் பண்ணுவா. ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்த பிசினஸ் ஃப்ரெண்ட், ‘இதை சேல்ஸ் பண்ணி, அந்தக் காசை சேமிக்கலாமே'னு சொன்னார். ஆனால், இஷானா வேற மாதிரி யோசிச்சா'' என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”
“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”

அது என்ன தெரியுமா?

‘‘ஒருமுறை அம்மாவின் ஃப்ரெண்ட் ஒருத்தரை ஹாஸ்பிட்டலில் பார்க்க  போனப்போ, ஒரு பொம்மையைச் செய்துட்டுப் போனேன். அதைப் பார்த்ததும், ரொம்ப ஹேப்பி ஆகிட்டாங்க. தன்கூட பெட்ல வெச்சுக்கிட்டாங்க. வீட்டுக்கு வந்ததும், ‘பொம்மையை சேல்ஸ் பண்ண வேண்டாம்மா. அதை ஒரு சர்வீஸா பண்ணுவோம். ஹாஸ்பிட்டல்ல இருக்கும் கிட்ஸுக்கு கிஃப்ட் பண்ணலாம்'னு சொன்னேன்.

“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”

மம்மியும் சந்தோஷத்தில் கட்டிப்பிடிச்சு கிஸ் கொடுத்தாங்க. ஒரே வாரத்தில் நிறைய பொம்மைகள் செஞ்சேன். அந்த வீக் எண்ட்ல அடையாறு கேன்சர் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கே இருந்த குழந்தைகளுக்குப் பொம்மைகளைக் கொடுத்தேன். அவங்க எல்லோரும் ரொம்ப ஹேப்பி.

ஓர் அண்ணா, ‘எனக்குத் தினமும் கரன்ட் ஷாக் வைக்கிறாங்க, பயங்கரமா வலிக்கும். இனி வலிக்கும்போது இந்த பொம்மையைக் கட்டிப்பிடிச்சுப்பேன்'னு சொன்னாங்க. அதைக் கேட்டு எனக்கு அழுகை வந்துருச்சு.
டைம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு ஹாஸ்பிட்டலுக்குப் போய் டாய்ஸ் கிஃப்ட் பண்றேன். இதோ, இந்த டாய்ஸை எக்மோரில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில், கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கப்போறேன்.  நீங்களும் எங்ககூட வர்றீங்களா?’’ என்றார்.

“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”

சுமார் 70 பொம்மைகளுடன் அரசு மருத்துவமனையின் கேன்சர் பிரிவுக்குச் சென்றோம். பொம்மைகளைப் பார்த்த அவர்கள் கண்களில் அத்தனை ஆனந்தம். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த பொம்மையை எடுத்துகொண்டபோது, முகத்தில் பெரிய புன்னகை.

“பொம்மைகள் கொடுத்து அன்பை வாங்கறேன்!”

இஷானா அவர்களுக்குக் கைகுலுக்கி, ‘சீக்கிரமே உங்களுக்குக் குணமாகிடும். அப்புறம் எனக்கு போன் பண்ணுங்க. நான் உங்களுக்கும் இதேமாதிரி டாய்ஸ் செய்யக் கத்துக்கொடுக்கறேன்' என்றார்.
வெளியே வந்ததும், ‘‘ஒரு ஹோம் குழந்தைகளுக்கும் இதேமாதிரி பொம்மைகள் செஞ்சு கொடுக்கணும். நிறைய வேலை இருக்கு. பை'' எனப் புன்னகைத்தார் குட்டித் தேவதை இஷானா.

- சு.சூர்யா கோமதி, படங்கள்: ப.பிரியங்கா