சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

செரீனா வில்லியம்ஸ்

செரீனா வில்லியம்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
செரீனா வில்லியம்ஸ்

செரீனா வில்லியம்ஸ்

* 26-9-1981: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ரிச்சர்டு வில்லியம்ஸ் - ஓரசீன் பிரைஸ் தம்பதிக்குப் பிறந்தார், செரீனா. தன் தந்தையைப் பார்த்து 3 வயதிலேயே டென்னிஸ் ஆடத் தொடங்கினார்.

செரீனா வில்லியம்ஸ்
செரீனா வில்லியம்ஸ்

* செரீனாவுக்கு 9 வயது. தன் மகள்களைச் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளாக மாற்ற, 4,300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஃப்ளோரிடாவுக்கு இடம் மாறினார் ரிச்சர்டு.

செரீனா வில்லியம்ஸ்

* வில்லியம்ஸ் சகோதரிகளின் திறமையைக் கண்டு வியந்தார், பயிற்சியாளரான ரிக் மேக்கி. மற்ற சிறுமிகளைவிட இவர்களுக்குக் கூடுதல் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.

செரீனா வில்லியம்ஸ்

* மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், செரீனாவை நிற அடிப்படையில் கேலி செய்தனர். அதனால்,  மகள்களைப் பயிற்சியிலிருந்து விடுவித்து அழைத்துச் சென்றார் அப்பா.

செரீனா வில்லியம்ஸ்

* அவரே பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். அதனால், ஜூனியர் போட்டிகளில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை.

செரீனா வில்லியம்ஸ்
செரீனா வில்லியம்ஸ்

* தந்தையையும் மீறி  WTA தொடரில் தன் பெயரைப் பதிவுசெய்தார் செரீனா. ஆனால், வயது காரணமாக நிராகரிக்கப்பட்டார்.

செரீனா வில்லியம்ஸ்

* அப்போதும் கமிட்டியை எதிர்த்து நீதிமன்றம்  சென்றார் 14 வயது செரீனா. அந்த இளம் பெண்ணின் தைரியம் வியக்கவைத்தது.

செரீனா வில்லியம்ஸ்

* ஆனால், பெற்றோரின் நிர்பந்தத்தால் வழக்கைத் திரும்பப் பெற்றார் செரீனா. சில மாதங்களிலேயே கனடாவில் நடந்த பெல் சேலஞ்ச் தொடர் மூலம், தன் முதல் புரொபஷனல் போட்டியில் பங்கேற்றார்.

செரீனா வில்லியம்ஸ்

முதல் போட்டியில் தோல்வி. அடுத்த சில போட்டிகளிலும் தோல்வி. ஆனாலும் செரீனா அசரவில்லை. கடுமையாகப் போராடி வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார்.

செரீனா வில்லியம்ஸ்

* 1997... அமெரிக்கக் கோப்பை 304-வது ரேங்கில் இருந்த செரீனா, தரவரிசையில் 4-வது இடத்திலிருந்த மேரி பியர்ஸ் மற்றும் 7-வது இடத்திலிருந்த மோனிகா செலஸைத் தோற்கடித்து பிரமிக்கவைத்தார்.

செரீனா வில்லியம்ஸ்

* அன்று முதல் செரீனாவின் வெற்றிப் பயணம் தொடர்ந்துகொண்டே இருந்தது. மிகப்பெரிய வீராங்கனைகள் பலரும் செரீனாவிடம் தோற்றுப்போனார்கள்.

செரீனா வில்லியம்ஸ்

* 1998-ல், கலப்பு இரட்டையர் பிரிவில் மேக்ஸ் மிர்னியுடன் இணைந்து, விம்பிள்டன் பட்டம் வென்றார் செரீனா. முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி!

செரீனா வில்லியம்ஸ்

* அடுத்த ஆண்டு, ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் பட்டம் வென்று, தன் ராஜ்ஜியத்தைத் தொடர்ந்தார்.

செரீனா வில்லியம்ஸ்

* இரட்டையர் பிரிவில், வீனஸ் - செரீனா இணை வெற்றிகளைக் குவிக்க, பெண்கள் டென்னிஸ் வில்லியம்ஸ் சகோதரிகளால் ஆளப்பட்டது.

செரீனா வில்லியம்ஸ்

* வெற்றி, புகழ், பணம் எனக் குவிந்தாலும், அவர்மீதான இனவெறித் தாக்குதல் குறையவில்லை. வீரர்கள், ரசிகர்கள் பலரும் அவரது நிறத்தைக் கேலி செய்தனர்.

செரீனா வில்லியம்ஸ்

* கறுப்பினப் பெண் என்பதால், மீடியாவும் அவரைக் குறிவைத்தது. அவர்மீது ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

செரீனா வில்லியம்ஸ்

* இதற்கெல்லாம் செரீனா சளைக்கவில்லை. கடுமையாகப்  போராடினார். தான் யார் என்பதைக் களத்தில் காட்டினார். 2002-ம் ஆண்டு விம்பிள்டன் வென்று ‘நம்பர் 1’ வீராங்கனையாக மகுடம் சூடினார்.

செரீனா வில்லியம்ஸ்

* 2004 முதல் 2007 வரை தொடர் காயங்களால் அவதிப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் ஒரேயொரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் மட்டுமே வெல்ல முடிந்தது. செரீனா அவ்வளவுதான் என்று நினைத்தார்கள் ரசிகர்கள்.

செரீனா வில்லியம்ஸ்

* ஆனால், செரீனா புயல் ஓயவில்லை. மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பினார். முன்பைவிட வேகமாக, துல்லியமாக விளையாடினார். டென்னிஸ் உலகின் மகத்தான வீராங்கனையாக மாறினார்.

செரீனா வில்லியம்ஸ்

* செரீனாவின் ஈடு இணையில்லா ஆட்டம் தொடர்ந்தது. ஒற்றையரில் 23, இரட்டையரில் 14, கலப்பு இரட்டையரில் 2 என 39 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் குவித்தார்.

செரீனா வில்லியம்ஸ்

* செப்டம்பர் 1, 2017: செரீனா - ஒஹானியன் தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்தது. அம்மா ஆகிவிட்டதால், செரீனா இனி டென்னிஸ் ஆடமாட்டார் என்று உலகம் நினைத்தது.

செரீனா வில்லியம்ஸ்

* எதற்குமே, எப்போதுமே விட்டுக்கொடுக்காத செரீனா, மீண்டும் கம்பேக் கொடுத்தார். விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் தொடர்களின் இறுதிவரை முன்னேறி,  பிரமிக்கவைத்தார். செரீனா ‘டென்னிஸின் குயின்’ என்றன ஊடகங்கள்.

* காயங்கள், ஊடகச் சாடல்கள், இனவெறித் தாக்குதல்கள், குழந்தைப் பேறு எதுவுமே செரீனாவை, அவர் வெற்றியைத் தடுத்ததில்லை. தன் முன் இருந்த ஒவ்வொரு தடையையும் வென்று சரித்திரம் படைத்துள்ளார். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனை, செரீனா.

- மு.பிரதீப் கிருஷ்ணா