சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

ராகுலின் செவ்வாய் பயணம்! - சிறுகதை

ராகுலின் செவ்வாய் பயணம்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
ராகுலின் செவ்வாய் பயணம்! - சிறுகதை

ஓவியம்: வேலு

ராகுல் ஒரு நாள் டீவியில் கார்ட்டூன் பார்த்துட்டிருந்தான். அவன் தாத்தா வந்து நியூஸ் வெச்சாரு.

தாத்தா இப்படித்தான் நியூஸ்... இல்லேன்னா பழைய பாட்டு. அவனுக்கோ தூக்கமா வர, மனசுக்குள்ளே புலம்பிட்டே பார்த்தான்.

டிவியில் செவ்வாய் கிரகம் பற்றிய செய்தி ஓடிட்டிருந்துச்சு. ‘சரி, மாடிக்குப்போய் விளையாடலாம்'னு போனான்.

அங்கே ஒரு பெரிய ராக்கெட் இருந்துச்சு. உள்ளே இருந்து கணிப்பொறி குரல்... ‘இன்னும் சில நொடிகளில் கிளம்பும்’னு வாய்ஸ்.

‘இது என்னடா ஆச்சர்யம்'னு உள்ளே நுழைஞ்சதும், கதவு ஆட்டோமேட்டிக்கா மூடிக்கிச்சு. உள்ளே யாருமே இல்லை. ‘சரி, இதை ஓட்டிப் பார்ப்போமே’னு  இயக்கினான்.

ராகுலின் செவ்வாய் பயணம்! - சிறுகதை

ராக்கெட் வேகமாக மேலே பறக்க ஆரம்பிச்சது. டிவியில் பார்த்த செய்தி ஞாபகத்துக்கு வந்துச்சு. ‘நாம ஏன் செவ்வாய் கிரகத்துக்குப் போகக்கூடாது?'னு முன்னாடி இருந்த மானிட்டரைப் பார்த்தான். அதில், ஒவ்வொரு கிரகத்துக்கும் எப்படிப் போறதுன்னு கூகுள் மேப் மாதிரி ரூட் இருந்துச்சு.

ராகுல், செவ்வாய் கிரகத்துக்கு செட் பண்ணினான். உடனே, செவ்வாய் கிரகம் நோக்கி ராக்கெட் பறக்க ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்தில் லேண்டிங் ஆச்சு.

‘ஆகா... செவ்வாய் கிரகத்தில் காலடி வைக்கும் முதல் மனுஷன் நான்தான். இது, இந்தியாவுக்குப் பெருமை' என்று குதித்தான்.

அந்த ராக்கெட்டில் இருந்த இந்திய தேசியக்கொடியை அங்கே நட்டுவைத்தான். ‘கொடியின் ஓரத்தில் நம்ம பெயரையும் எழுதலாமா?'னு தோணுச்சு.

‘ச்சீ... அது தப்பு. கொடியில் மட்டுமல்ல. நினைவுச் சின்னங்கள், பழைமைப் பொருள்கள் என எதையும் அதன் அடையாளம் மாறாமல் பார்த்துக்கணும்'னு நினைச்சான். கொடி பறக்க ஒரு சல்யூட் வெச்சான்.

‘கீய்ய்ய்ங்... கீய்ங்க' சத்தத்தோடு ஒரு ரோபோ வந்துச்சு. தனது கேமிரா கண்களால் அவனைப் புகைப்படம் எடுத்துச்சு.

ராகுலின் செவ்வாய் பயணம்! - சிறுகதை

அங்கே ஒரு பெரிய குளம் இருந்துச்சு. தயக்கத்தோடு தண்ணீரைக் குடிச்சுப் பார்த்தான். ‘ஆஹா, என்னா டேஸ்டு. காற்றும் சுத்தமா இருக்கு. நம்ம பூமியில் பல நகரங்களில் நச்சுக்காற்றுதான். மனுஷங்க இங்கே வந்தா, சீக்கிரமே இதையும் பூமி மாதிரி மாத்திடுவாங்க'னு நினைச்சு கவலைப்பட்டான்.

அப்போ, ராக்கெட்டிலிருந்து ‘நேரம் கடந்துடுச்சு. பூமிக்குத் திரும்பணும்'னு வாய்ஸ். வேகவேகமாகப் போய் ஏறிக்கிட்டான் ராகுல். ராக்கெட் பறக்க ஆரம்பிச்சது.

வீட்டு மொட்டை மாடியில் வந்து இறங்கினான். கீழே வந்து பார்த்தால், தாத்தா இன்னும் டிவியைப் பார்த்துட்டிருந்தார். அதில், பிரேக்கிங் நியூஸ்... சற்றுமுன்பு செவ்வாய் கிரகத்தில் ஒரு ராக்கெட் இறங்கிய தடம் பதிவாகியிருக்கிறது. இந்திய தேசியக்கொடியின் புகைப்படமும் இருக்கிறது’ எனச் செய்தி ஓடிட்டிருந்துச்சு.

‘அங்கே போனது நான்தான் தாத்தா'னு குஷியா கத்தினான்.

திடீர்னு ராகுல் முதுகை யாரோ தட்டினாங்க. ‘‘டேய் நாற்காலியில் ஏடாகூடமா இருக்கே பாரு. போய் கட்டிலில் படுடா’’னு சொன்னார் தாத்தா.

கண் விழிச்ச ராகுல், ‘‘சே... எல்லாக் கதையிலும் வர்ற மாதிரி இதுவும் கனவுதானா? எப்போதான் கனவு இல்லாத முடிவோடு ஒரு அட்வென்சர் கதை வருமோ'னு புலம்பிட்டே எழுந்து நடந்தான்.

ராகுலின் செவ்வாய் பயணம்! - சிறுகதை