சுட்டி ஸ்டார் நியூஸ்!
கட்டுரைகள்
Published:Updated:

ரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்!

ரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்!

ரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்!

குழந்தைகள் உலகில் பொம்மைகளுக்கு எப்போதும் மவுசு குறைவதில்லை. இந்த மவுசு குறையாதத் துறையின் தற்போதைய ட்ரெண்டிங் சூப்பர் ஸ்டார், ரியான்.

அமெரிக்காவில், புதிதாக எந்த பொம்மை வந்தாலும், எவ்வளவு பெரிய நிறுவனம் தயாரித்திருந்தாலும், அதை ரியான் வாங்கி, ‘Ryan Toys Review’ யூடியூப் சானலில் ரிவ்யூ செய்தால் அது சூப்பர் ஹிட் அடிக்கும். அந்த பொம்மையுடன் ரியான் கொடுக்கும் ஒவ்வொரு ரியாக் ஷன்,  கமென்ட்டுக்கு மார்க்கெட்டில் மவுசு ஏறிக்கொண்டே இருக்கும். இந்த சூப்பர் ஸ்டார் ரியான் வயதோ 7 மட்டுமே.

ரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்!

இந்த வருடம் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ‘யூடியூபில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 நபர்களின் பட்டியலில்’ ரியானுக்குத்தான் முதல் இடம். ரியானின் ஆண்டு வருமானம் சுமார் 22 மில்லியன் டாலர்கள்.

3 வயது வரைக்கும் எல்லா சுட்டிகளையும் போல ரியானுக்கும் பொம்மைகள் மீது தீராத  ஆசை. அதுகுறித்து யூடியூபில் பார்ப்பதும் இவனின் பொழுது போக்கு. இதைக் கவனித்த ரியானின் அம்மாவுக்கு திடீரென, ‘ரியானும் இதேபோல பொம்மைகளை ரிவ்யூ செய்தால் நல்லா இருக்குமே’ எனத் தோன்றியது. ரியானும் மழலை மொழியில் ரிவ்யூ செய்ய ஆரம்பித்துவிட்டான். உருவானது ‘ரியான் டாய்ஸ் ரிவ்யூ’ சானல். அமெரிக்கக் குழந்தைகள் மத்தியில் பிரபலமானது சானல். 2016-ல் ரியான் வெளியிட்ட வீடியோதான் ‘HUGE EGGS Surprise Toys Challenge with Inflatable water slide’. இதுவரை இந்த வீடியோவைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 160 கோடி.

இதன்பின்பு வெளிவந்த அனைத்து வீடியோக்களும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் 40 மில்லியன்களை குறையாமல் தொட்டன. ரியான் வீடியோக்களில் வந்த பொம்மைகள் கடைகளில் விற்பனைப் பட்டியலில் முன்னணியில் இருந்தன. வேதியியல் ஆசிரியரான ரியானின் அம்மா, வேலையை விட்டுவிட்டு, ரியானின்  ஆல் இன் ஆல் செக்ரட்டரி போலவே ஆகிவிட்டார்.

 ‘சூப்பர் ஸ்டாராகத் திறமையும் உழைப்புமே தேவை. வயது முக்கியமல்ல’ என்பதற்கு உதாரணம் ரியான்!

- ஞா.சுதாகர்