Published:Updated:

தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!
பிரீமியம் ஸ்டோரி
தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

Published:Updated:
தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!
பிரீமியம் ஸ்டோரி
தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

நிலாவுல பாட்டி வடை சுட்ட கதையையே  எத்தனை நாளுக்குத்தான் கேட்டுக்கிட்டு இருக்கிறது? புதுசா கலர் கலரா கதைகள், கலைகள் எனத் தெரிஞ்சுக்க வேணாமா?

“அதுக்கு நிலாவுக்குப் போக வேணாம்.காதுகளையும் கண்களையும் அகல விரிச்சுட்டு இங்கே வந்தாலே போதும்’’ என அழைத்தனர், ‘மதுரை சீடு’ அமைப்பினர்.

‘மார்கழி உற்சவம் 2018’ என்கிற பெயரில் மதுரை காந்தி மியூசியத்தில், 5 நாள்கள் உற்சாகத் திருவிழாவை நடத்தினர். கோமாளி நாடகம், நிழல் பொம்மலாட்டம், ஒரிகாமி, களிமண் பொம்மைகள் என ஒவ்வொரு நாளின் நிகழ்வும் குழந்தைகளின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்தது.

தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

ஆட்டம், பாட்டம், விழா வளாகத்தை சுட்டிகளின் கற்பனைத் திறமையிலே அலங்கரிப்பது என முதல் நாள் நிகழ்வின் தொடக்கமே அற்புதமாக அமைந்தது.

“தோசையம்மா தோசை... இது அம்மா சுட்ட தோசை... ராகி தோசை, அடை தோசை, நெய் தோசை” என கானா இசையில் தொடங்க,  சுட்டீஸ் குஷியாகி, சேர்ந்து பாட ஆரம்பித்தார்கள்.

நாடகக் கலைஞர் ஆழி.வெங்கடேசன் நிகழ்த்திய ‘சிந்துபாத் கடல் பயணம்’,  அனைவரையும் கடலுக்குள்ளே அழைத்துச் சென்றது. சாதி ஒழிப்புப் பற்றி சமூக விழிப்பு உணர்வு நாடகத்திலும் நடிச்சு அசத்திட்டாங்க.
“சமுதாயம் படும் பாட்டை சபைதனில் பாரீரோ!” என அழுதுக்கொண்டே நடித்த கீர்த்தனா என்ற சுட்டி ஒட்டுமொத்த அரங்கையும் ஆர்ப்பரிக்கச் செய்தார்.

பனையோலையில் கிரீடம் உட்பட பல்வேறு பொம்மைகளைச் செய்து மகிழ்ந்தனர். இதற்கான பயிற்சியை அளித்தார், திலகராஜன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

இதேபோல தொடர்ந்து ஐந்து நாள்களும்  கதை சொல்லல், ஒயிலாட்டம், கோமாளிக் கதைகள், பொம்மலாட்டம், காகிதத்திலேயே ஆடைகள் செய்து நாடகம் எனக் குழந்தைகள் திருவிழா களை கட்டியது.
பறையிசை, சிலம்பம் மற்றும் நடனம் என ஒவ்வொரு நிகழ்விலும் குழந்தைகள் போட்டி போட்டுக் கலக்கினார்கள்.

கொழுக்கட்டை, தேன்மிட்டாய், கடலைமிட்டாய், நெல்லிக்காய் என அங்கே கிடைத்த தின்பண்டங்களும் அந்த நிகழ்ச்சிகள் போலவே அத்தனை சுவையாக இருந்தன.

‘மதுரை சீடு’ அமைப்பின் இயக்குநரான கார்த்திக் பாரதி, “இது 20 வருடங்களாகக் குழந்தைகளுக்காக இயங்கிவரும் தன்னார்வ அமைப்பு. ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் குழந்தைகள் திருவிழாவை   நடத்தி,  அவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

அமைப்பின் அறங்காவலர் இளவரசி, “படிப்பு மட்டுமே பிள்ளைகளுக்கு வாழ்கையில்லை. இன்றைய பெற்றோர்களில் பலர் அதையே பிரதானமா நினைக்கிறாங்க. இதனால், குழந்தைகளின் கற்பனைத்திறன் வெளிப்படாமலே போகுது. அந்த நிலையை மாற்றணும்.

மதுரையின்  கரும்பாலை பகுதி, மிகவும் பின்தங்கிய பகுதி. இங்கே வாழும் மக்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள். இவர்களின் பிள்ளைகளுக்காக விளையாட்டு, டியூஷன், மியூசிக் கிளாஸ், உளவியல் ஆலோசனைகள் வழங்கி வருகிறோம்’’  என்றார் உற்சாகமாக.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த குழந்தைகள் ஆர்வலர் ராஜன், “நான் இந்த நிகழ்வுக்குத் தொடர்ந்து ஐந்து நாளும் வந்துட்டிருக்கேன். குழந்தைகளுடன் குழந்தையா சேர்ந்து பயணிக்கும்போது, நம்மையே புதுசா உணர்வோம். குழந்தை வளர்ப்பில், கதைகளின் பங்கு முக்கியமானது.  அதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியம். இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு குழந்தைகளை ஊக்கப்படுத்திக் கூட்டிட்டு வரணும்” என்றார்.

தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

எல்லாரும் பேசிட்டாங்க... நிகழ்ச்சியின் முக்கியமான வி.ஐ.பிகளே குழந்தைகள்தானே... அவர்களிடம் கேட்காவிட்டல் எப்படி?

துறுதுறு என ஓடிய மீனாட்சியைப் பிடிச்சு நிறுத்தினோம். “நான் சின்ன வயசிலிருந்தே  இந்த அமைப்பின் உதவியில்தான் படிக்கிறேன்.முன்னாடி நான் மத்தவங்களோடு பேசவே கூச்சப்படுவேன். இப்போ, எல்லாருக்கும் முன்னாடி கதை, பாட்டுன்னு தைரியமா கலந்துக்கிறேன்.

தேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு!

எங்களுக்கு ‘தேன் கூடு’ என்கிற பெயரில்  சேமிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டத்தையும் சொல்லிக் கொடுத்தாங்க. அதிலிருந்து, நாங்களே எங்க பள்ளிக்கூட கட்டணத்தை  கட்டிட்டிருக்கோம். இன்னிக்குத்தான் மார்கழி திருவிழாவின் லாஸ்ட் டே. ஆனா, இதே மாதிரி தினமும் இருந்தா நல்லா இருக்கும்” எனச் சிரித்தார்.

- பூ.பவித்ரா, புவனேஸ்வர்