Published:Updated:

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

மரப்பாச்சி சொன்ன ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
News
மரப்பாச்சி சொன்ன ரகசியம்

யுவா

ஷாலு என்கிற ஷாலினி லீவுல அவங்க பாட்டி வீட்டுக்குப் போகிறாள். அங்கே பாட்டி ஒரு மரப்பாச்சி பொம்மையைக் கொடுக்கிறாங்க. ஊருக்குத் திரும்பினதும், அந்தப் பொம்மைக்கு உயிர்வந்து ஷாலினிகிட்ட பேசுது. தன்னைப் பற்றிச் சொல்லுது. ஷாலினிக்கு ரொம்ப குஷி. அந்த மரப்பாச்சி பொம்மையோடு நிறைய பேசுகிறாள்.

‘உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் கேளு'ன்னு சொல்லுது மரப்பாச்சி. ஷாலினிக்கு உதவி தேவைப்படலை. ஆனா, அவளின் தோழி பூஜாவுக்கு ஒரு முக்கியமான விஷயத்தில் வழிகாட்டியாக உதவி செய்யுது மரப்பாச்சி. அது என்ன உதவி?

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான விஷயம் அது. நாம அடிக்கடி செய்தித்தாளிலும், தொலைக்காட்சி செய்தியிலும் பார்க்கும், குழந்தைகள் சந்திக்கும் பிரச்னை அது. அந்தப் பிரச்னையைத் தீர்க்கும் விதமும், அதற்குக் காரணமானவங்களை எதிர்கொள்ளும் விதமும்தான் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்' கதையின் மையம்.

ஃபேன்டஸி, குறும்பு, சமூக அக்கறை எல்லாம் கலந்த அழகான நாவல். விகடனின் ‘சிறந்த சிறார் நாவல்' உட்பட சில விருதுகளையும் வாங்கியிருக்கிறது இதன் சிறப்பு. பரிசுப் பதிப்பாகவும் பெரிய சைஸில் டைரி மாதிரி வெளியிட்டிருக்காங்க.

சரி, அது என்ன மரப்பாச்சி? ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் பல சுவையான தகவல்களைக் கொடுத்திருக்காங்க. அதில், மரப்பாச்சி பற்றியும் இருக்கு, பார்த்துத் தெரிஞ்சுக்கங்க.

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

ஆசிரியர்: யெஸ்.பாலபாரதி

விலை: ரூ 120/-
வானம் பதிப்பகம்
M 22, 6-வது அவின்யூ
அழகாபுரி நகர், ராமாபுரம்
சென்னை - 600089

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz