கட்டுரைகள்
Published:Updated:

கலக்கலான பேப்பர் பொம்மை!

கலக்கலான பேப்பர் பொம்மை!
பிரீமியம் ஸ்டோரி
News
கலக்கலான பேப்பர் பொம்மை!

கலக்கலான பேப்பர் பொம்மை!

‘‘ஹாய் சுட்டீஸ்... உங்கள் வீட்டு அலமாரியை அலங்கரிக்க, நீங்களே எளிதாகச் செய்து அசத்தலாம் பேப்பர் பொம்மை’’ என்கிறார், ‘சாய் க்ரியேஷன்’ உரிமையாளர், ஷோபனா.

கலக்கலான பேப்பர் பொம்மை!

தேவையானவை:

நியூஸ் பேப்பர் - 1, பெயின்ட் - மஞ்சள், சிவப்பு, கறுப்பு நிறங்களில், பிரஷ், டிஷ்யூ பேப்பர், ஸ்டோன் செயின், வெள்ளை நிற பாசிகள், ஃபெவிக்கால், கத்தரிக்கோல்

ஸ்டெப் 1

முழு நீளச் செய்தித்தாளைப் படத்தில் காட்டியபடி நீளவாக்கில் மூன்றாக மடிக்கவும்.

ஸ்டெப் 2

மடித்த பகுதியைக் கத்தரித்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 3

கத்தரித்த பேப்பரின் கீழ்முனையிலிருந்து படத்தில் காட்டியபடி மெல்லியதாக உருட்டவும்.

ஸ்டெப் 4

உருட்டி முடித்ததும், பேப்பரின் மற்றொரு முனையை உருட்டிய பகுதியுடன் ஃபெவிக்கால் மூலம் ஒட்டவும். பேப்பர் உருளை தயார்.

கலக்கலான பேப்பர் பொம்மை!

ஸ்டெப் 5

இதுபோல 10 உருளைகள் செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 6

பேப்பர் உருளைகளை இரண்டாக கட் செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 7

கட் செய்தவற்றில் 7 உருளைகளை எடுத்து, படத்தில் காட்டியபடி, அவற்றின் மீது ஒரு பேப்பரைச் சுற்றி, முனைகளை ஃபெவிக்கால் தடவி ஒட்டவும். பொம்மைக்கான பேஸ் ரெடி.

ஸ்டெப் 8

பொம்மையின் பேஸ் மீது முழுவதுமாக ஃபெவிக்கால் தடவிக்கொள்ளவும். 

ஸ்டெப் 9

ஃபெவிக்கால் தடவிய இடத்தில், பேப்பர் உருளைகளைப் படத்தில் காட்டியபடி வரிசையாக ஒட்டினால், பொம்மைக்கான அடிப்பகுதி தயார்.

ஸ்டெப் 10

மீதமுள்ள பேப்பர் உருளைகளில்,  பொம்மையின் மேற்புற ஆடை, கை போன்றவற்றைச் செய்து ஒட்டவும்.

ஸ்டெப் 11

பொம்மையின் மேற்புறத்தில் பேப்பர் உருளையின் நீளம் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு இருப்பின், அதைச் சமமாக வைத்து கத்தரிக்கோல் பயன்படுத்தி கட் செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 12

பொம்மையின் மேற்புறத்தில் டிஷ்யூ பேப்பரை  ஒட்டி, முகம் தயார்செய்யவும்.

கலக்கலான பேப்பர் பொம்மை!

ஸ்டெப் 13

முகத்தின் மேல் பகுதியில், பேப்பர் உருளையால் தலைப்பாகை செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 14

பிறகு, நியூஸ் பேப்பரை உருட்டி, பொம்மையின் தலையில் வைக்கும் கூடை செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 15

கூடையைப் பொம்மையின் தலையில்  ஒட்டவும். பொம்மையின் முழு உருவம் தயார்.

ஸ்டெப் 16

உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வண்ணம் அடித்து, ஸ்டோன் செயின், பாசிகளால் அலங்கரிக்கவும்.

அழகான பொம்மை தயார்!

மாடல்: ம.ரூபிகா

- சு.சூர்யா கோமதி

படங்கள்: தே. அசோக் குமார்