
ஸ்மார்ட் என்ஜாய்!

இன்றைய டிஜிட்டல் உலகின் ஸ்மார்ட் சுட்டிகளை மேலும் ஸ்மார்ட்டாக மாற்றவந்திருக்கிறது, ஸ்மார்ட் வாட்ச். சுட்டிகள் பயன்படுத்தும் வகையிலான ஸ்மார்ட் வாட்சை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது ஓஜாய் நிறுவனம். சமீபத்தில், தமிழகத்தில் வெளியிடப்பட்டது.


Ojoy A1 என்ற இந்த வாட்ச், ஆண்ட்ராய்டு OS மூலமாக இயங்குகிறது. அனிமேட்டட் வகையில் இதில் உள்ள Kido OS வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் நவீன 4G LTE தொழில்நுட்பத்தில் இயங்கும். அதன்மூலம், மிகத் துல்லியமான வாய்ஸ் காலிங் வசதியைப் பெறலாம். ஒரு சிம் கார்டை இந்த வாட்ச்சில் பயன்படுத்தலாம். GPS வசதி மூலம், சிறுவர்கள் இருக்கும் இடத்தை ட்ராக் செய்ய முடியும்.


போட்டோ எடுக்கும் கேமராவும் உள்ளது. வாட்டர் ஃப்ரூப் வசதியும் உண்டு. அதனால், இந்த வாட்சைக் கட்டிக்கொண்டு நீச்சல் அடித்தாலும் பாதிப்பு இல்லை. ஸ்மார்ட்போனைவிட 10 மடங்குக் குறைவான அளவே கதிர்வீச்சை வெளியிடும் என்கிறது ஓஜாய் நிறுவனம்.

இந்த வாட்ச் தேவைப்படுபவர்கள், ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் வாங்கலாம். விலை 12,999 ரூபாய்.
-மு.ராஜேஷ்
படங்கள்: வீ.நாகமணி