
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 20
ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, ‘கிராண்ட் மாஸ்டர் கில்லிகள்’ பற்றி `நச்’ விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.
கடைசித் தேதி: 31.03.2019

இடமிருந்து வலம்
1. இதைச் சுவைக்க விரும்பாதவர் உண்டோ? திடப்பொருளாக இருக்கும் இது, திரவமாகவும் மாறிவிடும். (5)
6. பாபரின் பேரன் (4)
7. சில உயிரினங்கள் உணவு கிடைக்காத காலத்தில் ஆற்றலைச் சேமிக்க, நீண்ட -------- கொள்ளும். (3)
11. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் (5)
14. மிகப்பெரிய நதி ------- இது. ஜீலம், சட்லெஜ் போன்றவை இதன் கிளை நதிகள். (3)
18. மடை திறந்தால் ------ வரும். (4)
வலமிருந்து இடம்
3. கோபப்படுவதற்கு நியாயமான ------- வேண்டும். (4)
4. நகைச்சுவை கதைகளுக்குப் புகழ்பெற்றவர், .......... நசுருதீன் (3)
5. தமிழ் மாதங்களில் ஒன்று. கடைசிக்கு முந்தின மாதம். (2)
10. இசை (5)
15. எஃப்.எம் ரேடியோ தமிழில். (4)
16. முட்டையின் நடுவில் இருக்கும் மஞ்சள் ------ (2)
17. சகுனி ------- உருட்டுவதில் வல்லவர். (3)
20. சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம் போன்ற நூல்களை எழுதியவர். (5)

மேலிருந்து கீழ்
1. குறைவான மக்கள் வசிக்கும் இரண்டாவது சிறிய நாடு. (5)
2. கிங்ஃபிஷர்... தமிழில் (5)
3. கோடை காலத்தில் ஸ்ரீநகர், குளிர்காலத்தில் ஜம்மு தலைநகராக உள்ள மாநிலம். (4)
9. பத்து ....... ராவணன் (2)
13. தேருக்குப் புகழ்பெற்ற ஊர் (5)
15. காற்றின் விசையால் பறப்பது ...... (4)
கீழிருந்து மேல்
6. தேவலோக பானம் (4)
8. வால்மீகி எழுதிய இதிகாசம் (5)
12. 100 லட்சம் (2)
18. இதனுடன் பாக்கும் சுண்ணாம்பும் சேர்ந்தால் வாய் சிவக்கும். (4)
19. கல்லணை என்றவுடன் இந்த அரசர் நினைவுக்கு வருவார். (5)
20. கிறிஸ்டியானேவும் ரொனால்டோவும் ----------- வீரர்கள். (5)

இந்தப் போட்டிக்கான விடை ஏப்ரல் 15, 2019 இதழில் இடம்பெறும்.
-சங்கீதா

