கட்டுரைகள்
Published:Updated:

பல வகை போட்டோ ஃப்ரேம்!

பல வகை போட்டோ ஃப்ரேம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பல வகை போட்டோ ஃப்ரேம்!

பல வகை போட்டோ ஃப்ரேம்!

ஹாய் சுட்டீஸ்...

உங்களை அப்பாவும் அம்மாவும் விதவிதமாக போட்டோ எடுத்திருப்பாங்களே. அவற்றை வைக்க அழகான போட்டோ ஃப்ரேம் செய்யலாமா? சொல்லித் தருகிறார், ‘சாய் கிரியேஷன்' உரிமையாளர், ஷோபனா.

பல வகை போட்டோ ஃப்ரேம்!

தேவையானவை:

கார்டு போர்டு - 1, பர் கிளாத் - 1 ஷீட்

பொம்மையில் வைக்கும் கண் - 2, ஃபெவிக்கால்

கத்தரிக்கோல், பென்சில், போட்டோ

பல வகை போட்டோ ஃப்ரேம்!

செய்முறை:

ஸ்டெப் 1: கார்டு போர்டில் தவளையின் உருவத்தை பென்சிலால் வரைந்துகொள்ளவும்.

ஸ்டெப் 2: வரைந்த உருவத்தை கத்தரிக்கோல் பயன்படுத்தி தனியே வெட்டி எடுக்கவும்.

ஸ்டெப் 3: வெட்டி எடுத்த தவளையின் உருவத்தை பர் கிளாத் மீது வைத்து, அதே அளவுக்குத் தவளையின் உருவத்தை வரையவும்.

பல வகை போட்டோ ஃப்ரேம்!

ஸ்டெப் 4: பர் கிளாத்தில் வரைந்த உருவத்தை தனியே வெட்டி எடுக்கவும்.

ஸ்டெப் 5: போட்டோ ஃப்ரேமுக்கான  பேஸ் தயார்.

ஸ்டெப் 6: கார்டு போர்டில் ஃபெவிக்கால் தடவி, அதன் மீது பர் கிளாத்தை படத்தில் காட்டியபடி ஒட்டவும்.

ஸ்டெப் 7: கார்டு போர்டினை செவ்வகமாகக் கத்தரித்து, போட்டோ ஃப்ரேமின் பின்புறம் ஸ்டாண்டு போன்று ஒட்டவும்.

பல வகை போட்டோ ஃப்ரேம்!

ஸ்டெப் 8: பர் கிளாத்தின் மீது பொம்மையின் கண்களை படத்தில் காட்டியபடி ஒட்டவும்.

ஸ்டெப் 9: பர் கிளாத்தின் மீது படத்தில் காட்டியபடி புகைப்படத்தை ஒட்டவும்.

ஸ்டெப் 10: அழகிய போட்டோ ஃப்ரேம் ரெடி.

பூ, சூரியன், மினியான் என நீங்கள் விரும்பும் டிசைன்களில் போட்டோ ஃப்ரேம் செய்து, உங்கள் நண்பர்களுக்குப் பரிசளியுங்கள்!

-சு.சூர்யா கோமதி

படங்கள்: வீ.நாகமணி