
க்யூட் பேப்பர் பேக்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, துணி மற்றும் காகித பைகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்யவேண்டிய கடமை. நீங்களே ஒரு பேப்பர் பேக் செஞ்சு, கடைக்கு எடுத்துட்டுப் போகலாம். சொல்லித்தருகிறார்கள், கிராஃப்ட் டீச்சர் ஷோபனா மற்றும் விரித்திகா.

தேவையானவை:
*சார்ட் பேப்பர்கள் - விரும்பும் நிறங்களில்
*சணல் கயிறு - ஒரு மீட்டர்,
*பென்சில், ஃபெவிக்கால், கத்தரிக்கோல்.

செய்முறை:
ஸ்டெப் 1: ஒரு முழு சார்ட் பேப்பரை எடுத்து, அகலவாக்கில் இரண்டாக மடித்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 2: மடித்த பகுதியில் ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.
ஸ்டெப் 3: ஒட்டிய சார்ட் பேப்பரின் அடிப்பகுதில், நீளவாக்கில் படத்தில் காட்டியபடி இரண்டு இன்ச்கள் மேற்புறமாக மடித்து, ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.
ஸ்டெப் 4: மேலிருந்து கீழாக சார்ட்டை மடித்து, ஏற்கெனவே மடித்து ஒட்டியுள்ள இடத்துக்கு மேலாக ஒட்டவும்.
ஸ்டெப் 5: பையின் அடிப்புறம் செய்ய, சார்ட்டின் அடிப்பகுதியை, முக்கோணமாக மடித்து ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.

ஸ்டெப் 6: பையின் வாய்ப்பகுதி உள்ள இடத்தில், சணல் கயிற்றை இரண்டுபுறமும் ஒட்டி, கைப்பிடி உருவாக்கவும்.

ஸ்டெப் 7: வேறு நிற சார்ட்களில் விருப்பமான உருவங்களை வரையவும்.
ஸ்டெப் 8: அந்த உருவங்களை வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டெப் 9: உங்கள் கற்பனைத்திறனுக்கு ஏற்ப, பேப்பர் பையில் ஒட்டி அலங்கரிக்கவும்.
ஸ்டெப் 10: இயற்கையைப் பாதுகாக்க க்யூட் பேப்பர் பேக் ரெடி! எடை அதிகமற்ற பொருள்களை வாங்கிவரப் பயன்படுத்தலாம்.
- சு.சூர்யா கோமதி
தி.குமரகுருபரன்