
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 21
ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, ‘இசை நாயகன் லிடியன்’ பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.
கடைசித் தேதி: 15.04.2019

இடமிருந்து வலம்
1. வலை பின்னும் பூச்சி (4)
7. சூரியன் உதிக்கும் -------- கிழக்கு (2)
8. பள்ளிகள் தொடங்கும் மாதம். (2)
9. ------- என்றால் ஸ்ரீனிவாச ராமானுஜன் (4)
12. ராவணனுக்கு பத்து----கள் (2)
13. புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரம். இவருடன் நாய்க்குட்டி கூடவே வரும். (4)
15. இமை இதைக் காக்கிறது. (2)
18. நோய் குணமாக இது அவசியம். (4)
24. வாசனை மிக்கது. ஆராதனையில் பயன்படுகிறது. (5)
வலமிருந்து இடம்
3. சிட்ரஸ் பழங்களில் ஒன்று. (5)
4. விழுதுகளை உடைய மரம் (2)
14. -------- என்றால் கொண்டாட்டம். (4)
19. சிறு---- பெருவெள்ளம் (2)
20. கட்டை (2)
23. நுங்கு இதிலிருந்து கிடைக்கிறது. (2)
26. இரும்பை ஈர்க்கும் (4)

மேலிருந்து கீழ்
2. துணிச்சலான செயல் (4)
3. ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானி. (4)
10. கேள்விக்கு இது அவசியம். (2)
11. ------- என்று சொல்வதைவிட; நாம் என்று சொல்வது சிறந்தது. (2)
20. -------- தலை காக்கும் (4)
21. பழங்கால உலக அதிசயங்களில் ------ தொங்கும் தோட்டமும் ஒன்று. (4)
22. ஆற்றலை நடந்து கடக்க அவசியம். (3)
கீழிருந்து மேல்
5. குரங்கு (3)
6. ஆடிக் காற்றில் -------யும் பறக்கும். (3)
7. கொடியில் காய்க்கும் பழம். (4)
9. ஜெல்லி வகை இனிப்புகள். இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. (5)
14. பறவைகள் பல ---- (3)
16. தழும்பு (2)
17. சிங்கம் -------- குடும்பத்தைச் சேர்ந்தது. (2)
18. தானியங்களைச் சேகரிக்கும் இடம். (3)
24. குளிருக்கு இதமான ஆடை. (4)
25. நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு பஞ்ச -------- (3)
26. உலகில் அதிக மக்களால் விளையாடப்படும் விளையாட்டு. (5)

இந்தப் போட்டிக்கான விடை மே 15, 2019 இதழில் இடம்பெறும்.
-சங்கீதா