
பா.ரா.நவஸ்ரீ

எமோஜி ஸ்கூலில் Parents - Teachers Meeting. எல்லா வாண்டு குட்டி எமோஜிக்களின் அம்மாக்களும் வந்திருந்தாங்க. எல்லா அம்ளுளும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கதானே? டீச்சர் எமோஜியின் புகாருக்கு அவங்க பதிலை வாங்க பார்க்கலாம்...

டீச்சர் எமோஜி: உங்க பசங்க சரியான அரட்டை. எதுவும் ஏற மாட்டேங்குது. 4 சப்ஜட்டுல ஃபெயில் ஆகிட்டாங்க . வீட்ல நீங்க என்னதான் செய்யறீங்க?

இந்த மாதிரி நெகட்டிவா குழந்தைகள் முன்னாடி பேசாதீங்க டீச்சர். என்ன இப்போ, போன தடவை 5 சப்ஜெக்ட் ஃபெயில். இந்தத் தடவை 4 சப்ஜெக்ட்ன்னா பாராட்டணும்!

என்னது 4 சப்ஜெட்ல ஃபெயிலா? இவன் இன்னிக்கு வீட்டுக்கு வரட்டும். சும்மா வெளுத்துடறேன் வெளுத்து!

உங்க ஸ்கூல் மேலேயும் நிறைய மிஸ்டேக் இருக்கு. ஃபேன் ஒர்க் ஆகறதில்லே, லைட் சரியில்லே. ஒழுங்கா தண்ணீர்கூட வைக்கறதில்லே. இப்படி இருந்தா எப்படி படிப்புல கவனம் வரும்?

டீச்சர்... நான் என்னதான் பண்ணுவேன். இவனை வெச்சுக்கிட்டு முடியலை. நான் சரியா சாப்பிடறதுகூட இல்லே. இவனுக்குச் சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்து என் உயிரே போகுது!

இதுக்கு வாய்ப்பே இல்லை டீச்சர். என் பையன் 16 மணி நேரம் படிக்கிறான். நீங்க சரியா கரெக்ஷன் பண்ணிருக்க மாட்டீங்க.
இதுல உங்க அம்மா எமோஜி எதுனு நீங்க சொல்லுங்க!