கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

ஸ்மார்ட் போலோ

ஸ்மார்ட் போலோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்மார்ட் போலோ

ரா.திருச்செல்வன்

ஸ்மார்ட் போலோ

பிரிக்க முடியாதது ஸ்மார்ட்போன்களும் நாமும் என்றாகிவிட்டது. குழந்தைகளும்கூட ஸ்மார்ட்போன் கொடுத்தால்தான் சாப்பிடுவேன் என்கிறது. எனவே, எப்படிப் பயனுள்ள வகையில் இதை மாற்றிக்கொள்ளலாம் என யோசிப்பதுதான் புத்திசாலித்தனம். இதற்கு வழிகாட்டுகிறது கூகுள் நிறுவனம்.

ஸ்மார்ட் போலோ

கூகுள் அறிமுகம் செய்திருக்கும் போலோ (Bolo) என்ற செயலி, ஸ்மார்ட்போன்களில் மூழ்கும் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இது, குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் கூகுள் அசிஸ்டன்ட் என்றே அழைக்கப்படுகிறது. வார்த்தை உச்சரிப்பை சொல்லிக்கொடுப்பது, உச்சரிப்பில் தவறு செய்யும்போது சரிசெய்வது என அசத்துகிறது. முதற்கட்டமாக 40 ஆங்கிலக் கதைகளும் 50 இந்திக் கதைகளைப் போலோ செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது.

குழந்தைகளில் வாசிக்கும் திறனுக்கு ஏற்ப கதைகள் மாறுபடும். சுவாரஸ்யமான வார்த்தை விளையாட்டுகள் மூலம் இன்ஆப் ரிவார்டு மற்றும் பேட்ஜ்களை வெல்லும் வசதியும் உள்ளது. பல்வேறு குழந்தைகள் ஒன்றிணைந்து ஒரே செயலில் பங்கேற்று, அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மொழிகளில் இயங்கும்படி இந்தச் செயலி உருவாக்கப்படும் என்கிறது கூகுள் போலோ.