
சர்வஜித்

புள்ளி வைங்க!
இங்குள்ள ஒன்பது சிறு கட்டங்களில் ஆறு புள்ளிகள் வைக்க வேண்டும். நிபந்தனை: குறுக்கு, நெடுக்கு, மூலைவிட்டம் என எந்த வகையிலும் ஒரே வரிசையில் மூன்று புள்ளிகள் அமையக் கூடாது.

ஒன்று… இரண்டு… மூன்று!
கீழே மூன்று இலக்க எண்கள் மூன்று கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1 முதல் 9 வரையிலான இலக்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு முறையே பயன்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமன்று… முதல் எண்ணைப் போல் அடுத்த எண் இரு மடங்கும், மூன்றாவது எண் மூன்று மடங்கும் இருப்பதைக் கவனியுங்கள். இதே போன்று வேறு மூன்று எண்களை உங்களால் எழுத முடியுமா?

நாலு பேர், எட்டுப் பந்துகள்!
சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் என நான்கு நிறங்களில் மொத்தம் எட்டுப் பந்துகள் தலா இரண்டிரண்டு வீதம் அருண், வருண், தருண், சரண் ஆகிய நாலு சிறுவர்களிடம் இருக்கின்றன. ஆனால், யாரிடமும் ஒரே நிறமுள்ள பந்துகள் இல்லை.
நால்வரில் ஒரே ஒரு சிறுவனிடம் மஞ்சள் பந்தும் நீலப் பந்தும் உள்ளன; இன்னொரு சிறுவனிடம் பச்சைப் பந்தும் நீலப் பந்தும் உள்ளன.
அருணிடம் மஞ்சள் பந்து இல்லை. ஆனால், தருணிடம் மஞ்சள் பந்து இருக்கிறது. வருணிடம் சிவப்புப் பந்து இல்லை; ஆனால், பச்சைப் பந்து உள்ளது. சரணிடம் பச்சைப் பந்து இல்லை; ஆனால், நீலப் பந்து உள்ளது.
சரி, இப்போது சொல்லுங்கள், யார் யாரிடம் என்னென்ன நிறப் பந்துகள் உள்ளன?
விடைகள்:
