Published:Updated:

புதிர் ஆட்டம்!

புதிர் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிர் ஆட்டம்!

சர்வஜித்

புதிர் ஆட்டம்!

சர்வஜித்

Published:Updated:
புதிர் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
புதிர் ஆட்டம்!
புதிர் ஆட்டம்!

புதிர் முடிச்சை அவிழ்க்க முடிகிறதா?

ஃபைல்களைக் கட்டும் நாடாக்கள் (Tags) சில இங்கே சுருண்டு விழுந்திருக்கின்றன. இவற்றின் இரு முனைகளையும் பிடித்து இழுத்தால், சிலவற்றில் முடிச்சு விழும்; சிலவற்றில் முடிச்சு விழாது. எந்தெந்த நாடாக்களில் முடிச்சு விழும், எவற்றில் விழாது என்று கண்டுபிடிக்க முடிகிறதா?

விடை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிர் ஆட்டம்!

நான்காவது, ஐந்தாவது நாடாக்களில் மட்டும் முடிச்சு விழும்; மற்றவற்றில் விழாது.

புதிர் ஆட்டம்!

எத்தனை புள்ளிகள்... எத்தனை கட்டைகள்?

புதிர் ஆட்டம்!

சிறு சிறு கன சதுரக் கட்டைகளாக 27 கட்டைகள், படத்தில் காட்டியபடி 3 x 3 x 3 என்னும் விதத்தில் ஒட்டப்பட்டு, ஒரு பெரிய கன சதுரக் கட்டையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பக்கம் மொத்தத்திலும் (இந்தக் கன சதுரத்தின் 6 பக்கங்களிலும்) ஒவ்வொரு சிறு சதுரத்துக்கும் ஒரு புள்ளி  வைக்கப்பட்டுள்ளது. அதாவது,  ஒரு பக்கத்துக்கு 9 புள்ளிகள் வீதம் 6 பக்கங்களில் 54 புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்தக் கன சதுரம் பிரிக்கப்பட்டு, பழையபடியே 27 சிறு சதுரக் கட்டைகளாக உதிர்க்கப்பட்டுவிட்டன. இப்போது சொல்லுங்கள்... இந்தச் சிறு கட்டைகளில் 3 புள்ளிகள்கொண்ட கட்டைகள் எத்தனை? 2 புள்ளிகள் கொண்ட கட்டைகள் எத்தனை? ஒரே ஒரு புள்ளி கொண்ட கட்டைகள் எத்தனை?

விடை:

புதிர் ஆட்டம்!
புதிர் ஆட்டம்!

மூன்று புள்ளிகள் வைக்கப்பட்ட சிறு கட்டைகள்: 8 (ஒவ்வொரு மூலையிலும் உள்ள கட்டைகள்)

இரண்டு புள்ளிகள் வைக்கப்பட்ட சிறு கட்டைகள்: 12 (ஒவ்வொரு பக்கவாட்டிலும் நடுவில் உள்ள கட்டைகள்)

ஒரு புள்ளி வைக்கப்பட்ட சிறு கட்டைகள்: 6 (ஆறு பக்கங்களிலும் மையத்தில் உள்ள கட்டைகள்)

இந்தக் கனசதுரத்தின் நடுவில் மாட்டிக்கொண்ட ஒரே ஒரு கட்டையில் மட்டும் புள்ளியே வைக்கப்பட்டிருக்காது.

ஆக, மொத்தம் 27 சிறு கட்டைகள்.

புதிர் ஆட்டம்!

*ஹங்கேரியாவைச் சேர்ந்த ஏர்னோ ரூபிக் என்பவரால் 1974-ல், ரூபிக்ஸ் கியூப் கண்டுபிடிக்கப்பட்டது.