Published:Updated:

சேனைக்கிழங்கு மர்மம்

சேனைக்கிழங்கு மர்மம்
பிரீமியம் ஸ்டோரி
சேனைக்கிழங்கு மர்மம்

ஷெர்லக் ஷேமர், ஓவியங்கள்: அரஸ்

சேனைக்கிழங்கு மர்மம்

ஷெர்லக் ஷேமர், ஓவியங்கள்: அரஸ்

Published:Updated:
சேனைக்கிழங்கு மர்மம்
பிரீமியம் ஸ்டோரி
சேனைக்கிழங்கு மர்மம்

ன்ஸ்பெக்டர் ஜனகராஜின் முன்னால் அமர்ந்திருந்தார் சோமு. அவர் கண்கள் சிவந்திருந்தன. கோபம் ஒரு காரணம். இன்னொரு காரணம், தூக்கமின்மை.

சோமுவுக்கு நள்ளிரவு நேரங்களில் தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு மணி, 2 மணி, அதிகாலை 4 மணி என்றெல்லாம் வருகிறது. எடுத்துப் பேசினால், எதிர்முனையில் ரெக்கார்டட் வாய்ஸ்தான் ஒலிக்கிறது. அதுவும் சமையல் குறிப்பு.

இதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் ஜனகராஜ் யோசனையில் ஆழ்ந்தார். சிந்திக்கும் வேளையில் தன் மோவாயைச் சொறிந்துகொள்வது அவரது வழக்கம். “அது சரி, அப்படி நள்ளிரவு வரும் தொலைபேசிகளை நீங்கள் அலட்சியப்படுத்த வேண்டியதுதானே?”

சேனைக்கிழங்கு மர்மம்

“என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை. அவங்களைப் பார்க்க மனைவி ஊருக்குப் போயிருக்காங்க. அவங்க கூப்பிடுறதுக்காக மட்டுமே இந்த போனை யூஸ் பண்றேன். அதனாலதான் எடுத்துடுவேன்” என்றார் சோமு.

“சரி நீங்க போகலாம். இன்னிக்கு ராத்திரியும் கால் வராது. அப்படி வந்துச்சுன்னா நாளைக்கு வாங்க'' என்றார் இன்ஸ்பெக்டர்.

இரவு மணி 12. டெலிபோன் மணி ஒலிக்கவில்லை. படுக்கையில் புரண்டு படுத்தார் சோமு. ‘அது எப்படி, அந்த இன்ஸ்பெக்டர் இன்று அழைப்பு வராது என்று உறுதியாகச் சொன்னார்?’ என்று யோசித்தபடி தூக்கமும் விழிப்புமாகத் திண்டாடிக்கொண்டிருந்தார்.

சுவர்க் கடிகாரம் 2 மணி அடித்து ஓய்ந்ததுமே, தொலைபேசி வீறிட ஆரம்பித்தது.

‘ஆஹா… வந்துட்டான்யா… வந்துட்டான்யா…’ என்று போனை எடுத்தார் சோமு. இவர் ஹலோ சொல்வதற்கு முன்பாகவே, ‘சேனைக்கிழங்கு தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தும் என்பதால், சேனைக்கிழங்குத் துண்டுகளை புளித்தண்ணீரில் நன்கு ஊறவைக்கவும்…’ என்று குரல் வர, வெறுத்துப்போனார்.

அதிகாலை 4 மணிக்கு மறுபடி தொலைபேசி அழைத்தது. ‘பொன்னிறமாக வறுபட்டிருக்கும் சேனைக்கிழங்குத் துண்டுகளின் மேல் மிளகாய்த் தூளையும் தேவையான அளவு உப்பையும் தூவவும்’ என்கிற குரல் ஒலித்தது.

அவருக்குச் சின்ன வயசிலிருந்தே சேனைக்கிழங்கு பிடிக்காது. முன்பாவது சேனைக்கிழங்கைச் சாப்பிடத்தான் பிடிக்காது. இப்போதோ சேனைக்கிழங்கின் பெயரைக் கேட்டதுமே வெறுப்பாகிவிட்டது.

நண்பகல் 11 மணி. இன்ஸ்பெக்டர் முன் உட்கார்ந்திருந்தார் சோமு. நடந்ததைச்  சொன்னார்.

““ஸோ, மறுபடியும் உங்களுக்கு போன் வந்தது. அந்த நம்பருக்கு நீங்க மறுபடி போன் பண்ணிப் பார்த்தீங்களா?”

“பண்ணினேனே… ரெக்கார்டட் வாய்ஸ்ல சமையல் குறிப்புதான் வருது. அதுவும் அந்த டேஷ் டேஷ் ரோஸ்ட் பத்தித்தான் சொல்லுது'' என்று பரிதாபமாகச் சொன்னார் சோமு.

“டேஷ்டேஷ்னு சொல்ற அளவுக்கு சேனைக்கிழங்கு மேல வெறுப்பா? ஓகே. மனைவியோட பேசுறதுக்காக இந்தப் புது நம்பர் போனை எப்போ வாங்கினீங்க?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேனைக்கிழங்கு மர்மம்

“ஏழு நாளைக்கு முன்னாடி''

“இந்த சே.கி. விஷயமும் நீங்க புது போன் வாங்கின விஷயமும் உங்க ஆபீஸில் வேற யாருக்காவது தெரியுமா? நேத்து நீங்க குடுத்துட்டுப்போன நம்பரை விசாரிச்சேன். அந்த சிம் கார்டு உங்க ஆஃபீஸ்ல இருக்குற ஒரு லேண்ட்லைன் போன்ல பொருத்தப்பட்டிருக்கு.''

“ரெண்டு மூணு ஃப்ரெண்ட்ஸுக்கு என் உணவு விஷயம் தெரியும். பல வருஷங்களுக்கு முன்னாடி சொன்னது” என்றார் சோமு.

“ஷிஃப்ட்ல வேலை பார்க்கிற உங்க நண்பர்களில் யாரோதான் விளையாடறாங்க. அடுத்த என்கொயரி உங்க ஆபீஸ்லதான்” என்றபடி தொப்பியைப் பொருத்திக்கொண்டார் இன்ஸ்பெக்டர்.

சோமுவின் அலுவலகத்தில் பலரையும் விசாரித்ததில் மூன்று பேரின் ஸ்டேட்மென்ட்டுகள் முக்கியமாகப்பட்டது இன்ஸ்பெக்டருக்கு.

பீட்டர்: சோமு சார் சமீபத்துல போன் நம்பர் வாங்கினது எனக்குத் தெரியும். ஆனா, எங்களுக்குள்ள ரொம்பப் பழக்கம் இல்லை. என்னது சேனைக்கிழங்கு பிடிக்காதா? அப்படிச் சொன்னதா ஞாபகம் இல்லை. நைட் டியூட்டி பார்க்கும்போது எனக்கு வேலையில மட்டும் கான்சன்ட்ரேஷன். போன் இருக்கிற இடத்துக்குப் போக மாட்டேன்.

ரவி: எனக்கு ஜோக் பண்ணி விளையாடுறதுன்னா பிடிக்கும்தான். அதுக்காக எல்லா இடத்துலேயும் அப்படி நடந்துக்க மாட்டேன். சேனைக்கிழங்கைப் பத்தி அவர் எப்பவோ சொன்னது ஞாபகம் இருக்கு. ஆனா, என்ன சொன்னார்னு சரியா ஞாபகமில்லை. விளையாடற வயசா எங்களுக்கு?

சலீம்: இல்லை. எனக்கு போன் பேசுறதுன்னாலே பிடிக்காது. சோமு உங்ககிட்டே என்ன சொன்னார்? அவர் சொன்னதை எல்லாம் ஏத்துக்க முடியாது. அதெல்லாம் அவரோட கற்பனை. யூடியூப்ல சமையல் குறிப்பு சொல்வாங்க தெரியும். 24 மணி நேரமும் போன்ல சொல்வாங்களா என்ன?

இந்த மூன்று பேரின் ஸ்டேட்மென்ட்டுகளையும் வைத்து யார் அந்த சேனைக்கிழங்குக் குற்றவாளி என்று இன்ஸ்பெக்டர் ஒரு முடிவுக்கு வந்தார்.

நீங்களும் கில்லாடி ஆச்சே... உங்கள் முடிவு என்ன?

விடை:

சேனைக்கிழங்கு மர்மம்

ரவிதான் அது. குரலை ஒலிப்பதிவு செய்து ஓடவிட்டது என்கிற உண்மையைக் கவனிக்கவும். ரவிக்கு மட்டுமே தொலைபேசி பிராங்க் ஜோக்குகளைப் பற்றித் தெரிந்திருக்கிறது. சேனைக்கிழங்கு விஷயமும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. விஷயத்துக்கு மேலாக, விளையாடும் வயசு தாண்டிவிட்டது என்று அவர் சொல்வதையும் ஒரு குறிப்பாக வைத்துக்கொள்ளலாம். 

சேனைக்கிழங்கு மர்மம்

* பண்டைய கிரேக்க சொல்லான politeia என்ற வார்த்தையிலிருந்து உருவானதே Police