Published:Updated:

சுட்டி டிடெக்டிவ் போட்டி - 3 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!

சுட்டி டிடெக்டிவ் போட்டி - 3 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி டிடெக்டிவ் போட்டி - 3 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!

சர்வஜித்

ங்க சூப்பர் மூளைக்கு ஒரு துப்பறியும் சவால் போட்டி. ஒவ்வோர் இதழிலும் ஒரு சிறிய கதையும் படங்களும் இடம்பெறும். அவற்றை உன்னிப்பாகப் படித்து, கடைசியில் கேட்கப்படும் கேள்விக்குச் சரியான பதிலை எழுத வேண்டும். கவனம்: விடைக்கான க்ளூ ஓவியத்திலும் ஒளிந்திருக்கலாம்.

இதோ, இந்த இதழுக்கான போட்டி. விடையைக் கண்டுபிடித்து, 42-ம் பக்கத்து கூப்பனில் எழுதி, விவரங்களைப் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், ‘உண்மை’ என்கிற தலைப்பில், நச் என ஒரு பொன்மொழியை இரண்டு வரியில் எழுதுங்கள். பரிசை வெல்லுங்கள்.

சுட்டி டிடெக்டிவ் போட்டி - 3 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓவியம்: ராமமூர்த்தி

குறும்பும் சேட்டையும் நிறைந்த பையன் ஆகாஷ். ஆனால், முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியாது. ரொம்ப அப்பிராணிபோல் வைத்திருப்பான். ’

ஸ்கூல் லீவு. வெளியில் சென்று விளையாட ஆசை. வெயிலோ  கொளுத்துகிறது. வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் பந்தை சுவர்களில் எறிந்து கேட்ச் பிடிக்க முடிவெடுத்தான் ஆகாஷ். 100 தடவை கேட்ச் பிடிக்கும் சவால்.

ஒன்று… இரண்டு… மூன்று… கிரிக்கெட் பந்து வேகமாக சுவருக்கும் ஆகாஷின் கைக்குமாக மாறி மாறிப் பறந்தது. எண்ணிக்கை 30, 40 எனத் தாண்ட, அவனது உற்சாகமும் எல்லை தாண்டியது. மிக வேகமாக வீச, பந்து சுவரில் மோதி, படு வேகமாகத் திரும்பி, ஆகாஷின் கைகளில் சிக்காமல் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு, வெளியே பாய்ந்தது.

பதறிப்போன ஆகாஷ் வெளியே ஓடி, கையில் கிடைத்த ஒரு சிறு கருங்கல்லுடன் மீண்டும் ஹாலுக்கு வந்தான். அடுத்த அறையிலிருந்து அப்பாவும் அம்மாவும் வந்துவிட்டார்கள். “என்னடா ஆச்சு?” என்று கேட்டார் அப்பா.

“தெருவுல போற யாரோ இந்தக் கல்லை விட்டெறிஞ்சு, கண்ணாடி ஜன்னலை உடைச்சுட்டாங்கப்பா. வெளியில ஓடிப்போய்ப் பார்த்தேன். யாரையும் காணோம்!” என்றான்.

“அப்படியா… வா, யாருன்னு  பார்ப்போம்” என்று அவனுடன் சென்று தெருவில் பார்த்தார். பின்பு, ஜன்னல் அருகில் வந்தார். “ஆகாஷ், நீ ஜன்னலை உடைச்சிருந்தாக்கூட தெரியாம பண்ணிட்டேனு மன்னிச்சுடலாம். ஆனா, பொய் சொல்லிட்டே. உண்மையைச் சொல்லு, நீதானே ஜன்னலை உடைச்சே?” என்றார்.

ஆகாஷ் தலைகுனிந்து உண்மையை ஒப்புக்கொண்டான்.

அப்பா எப்படிக் கண்டுபிடித்தார்?

கடைசி தேதி: 31.05.2019

சுட்டி டிடெக்டிவ் போட்டி - 3 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!