பிரீமியம் ஸ்டோரி
சொலவடை வேணுமா?

மெதுவடை, பருப்பு வடை, கீரை வடை தெரியும்... அது என்ன சொலவடை?

பழமொழி போன்றதுதான் சொலவடை. ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. பழமொழி என்பது பெரும்பாலும் தூய்மையான தமிழில் இருக்கும். சொலவடை என்பது, கிராமத்து மக்களின் வட்டார வழக்குமொழி நடையில் இருக்கும். கேட்கவே வித்தியாசமாகவும் குறும்பாகவும் இருக்கும். அதேநேரம் ஏதோ ஒரு விஷயத்துக்காகச் சொல்லப்பட்ட அர்த்தமும் இருக்கும். இதோ இங்கே சில சொலவடைகள்...

சொலவடை வேணுமா?

*எலும்பில்லாத நாக்கு எங்கிட்டும் பேசும்!

*வெல்லந் தின்னது ஒரு ஆள்; விரல் சூப்புறது ஒரு ஆள்.

சொலவடை வேணுமா?

*ஆளேறும் வண்டின்னு அங்கிருந்து ஓடிவந்தேன்; இது தேளேறும் வண்டின்னு தெரியாமப் போச்சே!

*எருமைக்காரனோடு போனாலும் பெருமைக்காரனோடு  போகக்கூடாது.

*இருந்தது இளைச்சுப்  போச்சு; வந்தது வலுத்துப்போச்சு.

*காட்டுக்காரன் சும்மா இருந்தாலும் கணக்கு புள்ளே சும்மா இருக்க மாட்டான்.

*பட்டணம் எல்லாம் நம்ம பட்டணம்; பொட்டணம் வைக்க இடமில்லை.

*தாய் தவிட்டுக்கு அழுதாளாம்; மகள் இஞ்சிப் பச்சடி கேட்டாளாம்.

*நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும்; தோட்டத்துக்குப் புல்லுச்சுமை போகாது.

சொலவடை வேணுமா?

*வெங்கலப் பூட்டை ஒடைச்சு வெளக்குமாறு களவாண்டானாம்!

*மாடு மாங்கு மாங்குன்னு உழைச்சாலும், கிடைக்கிறது பிண்ணாக்குதான்.

*கஞ்சிக்கு லாட்டரி, கைக்கு பேட்டரி!

*புலியூருக்குப் பயந்துக்கிட்டு எலியூருக்குப் போனா, எலியூரும் புலியூராப் போச்சு!

*ஆனை வயிறு நிறைஞ்சாலும் ஆடு வயிறு நிறையாது.

எல்லாம் சரி, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு கேட்கறீங்களா? படிச்சு யோசிங்க.பெரியவங்ககிட்டேயும் கேளுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு