Published:Updated:

சுட்டி டிடெக்டிவ் போட்டி - 4 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுட்டி டிடெக்டிவ் போட்டி - 4 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!
சுட்டி டிடெக்டிவ் போட்டி - 4 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!

சர்வஜித் ஓவியம்: ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
சுட்டி டிடெக்டிவ் போட்டி - 4 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!

ங்க சூப்பர் மூளைக்கு ஒரு துப்பறியும் சவால் போட்டி. ஒவ்வோர் இதழிலும் ஒரு கதையும் படங்களும் இடம்பெறும். அவற்றை உன்னிப்பாகப் படித்து, கடைசியில் கேட்கப்படும் கேள்விக்குச் சரியான பதிலை எழுத வேண்டும். கவனம்: விடைக்கான க்ளூ ஓவியத்திலும் ஒளிந்திருக்கலாம்.

இதோ, இந்த இதழுக்கான போட்டி. விடையைக் கண்டுபிடித்து, 50ஆம் பக்கத்து கூப்பனில் எழுதி, விவரங்களைப் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், ‘அகிம்சை’ என்கிற தலைப்பில், நச் என ஒரு பொன்மொழியை இரண்டு வரியில் எழுதுங்கள். பரிசை வெல்லுங்கள்.

சுட்டி டிடெக்டிவ் போட்டி - 4 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!

ஓவியம்: ராமமூர்த்தி

அறைக்குள் ஒரு குழு

ன்று இரவு சுமார் 8 மணி... இன்ஸ்பெக்டர் ராஜசேகரின் மொபைலுக்கு ஒரு போன்கால் வந்தது.

“சார், ‘டாமரிண்டு ட்ரீ’ ஹோட்டல்ல, எண்பத்தாறாம் நம்பர் ரூம்ல தங்கியிருக்கிறவங்களோட நடவடிக்கை சரியில்லை. தீவிரவாதக் குழு போலத் தெரியுது. நாளைக்கு சிட்டியில நாலஞ்சு இடத்துல பாம் செட் பண்ற பிளானோட இருக்காங்கன்னு தோணுது” என்றான் எதிர் முனையில் பேசிய இளைஞன்.

“உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“நான் அவங்களுக்கு எதிர் ரூம்ல தங்கியிருந்தேன். சாயந்திரம் 6 மணிக்கு ரூமை வெக்கேட் பண்ணிட்டேன். சந்தேகப்படும்படியான நடமாட்டம் இருந்தா தகவல் தெரிவிக்கும்படி பேப்பர்ல அறிவிப்பு பார்த்ததாலச் சொல்றேன்” என்றபடி லைனை கட் செய்தான் அந்த இளைஞன்.

அரை மணி நேரத்தில், போலீஸ் படையுடன் ஹோட்டலை அடைந்த ராஜசேகர், ரிசப்ஷனில் “இன்னிக்குச் சாயந்திரம் ரூமை வெக்கேட் பண்ணினவங்க லிஸ்ட் கொடுங்க” என்றார்.

அவர்கள் ரெஜிஸ்டரைப் புரட்டி, “ரூம் நம்பர் 65, 72, 87, 97 ரூம்கள் சாயந்திரம் வெக்கேட் ஆகியிருக்கு. என்ன சார் விஷயம்?” என்றார்கள்.

“86-ஆம் நம்பர் ரூமை உடனடியா செக் பண்ணணும்’’ என்று அவர்களுடன் லிஃப்டில் எட்டாவது மாடியை அடைந்தார் ராஜசேகர்.

“சார், அங்கே ஒரு ஃபேமிலிதான் இருக்காங்க. டூருக்கு வந்தவங்க சார்!”

“பார்த்துருவோம் எப்படிப்பட்ட ஃபேமிலி அவங்கன்னு...” என்றபடியே, எட்டாவது தளத்தில் வெளியேறி, வேகமாக நடந்து, 86-ஆம் அறையை நெருங்கி, காலிங் பெல்லை அழுத்தினார் ராஜசேகர்.

சற்று நேரத்தில், வேட்டியும் பனியனுமாக ஓர் இளைஞன் கதவைத் திறந்தான். பின்னால், அவன் மனைவி. கூடவே ஏழு வயது, நாலு வயதுகளில் ஒரு பையனும் பெண்ணும். ஒன்றாக அமர்ந்து டிபன் பொட்டலங்களைப் பிரித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்து, ஓர் இண்டு இடுக்கு விடாமல் தேடியது போலீஸ் படை. சந்தேகப்படும்படியாக எதுவும் அகப்படவில்லை.

“ஸாரி சார்’’ என்றபடி வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர்.

விஷயம் அறிந்து, ஓடிவந்த ஹோட்டல் மேனேஜர், ‘‘உங்களுக்கு யாரோ தப்பா இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்காங்க’’ என்றார்.

“நோ! அவன் குரல்ல பொய் இல்ல. உண்மையைத்தான் சொல்லியிருக்கான். பட்...” என்று நெற்றியைத் தேய்த்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர் ராஜசேகர்.

“சார், எண்பத்தாறுன்னு சொன்னானா, அம்பத்தாறுன்னு சொன்னானா?” என்று கேட்டார் ஒரு கான்ஸ்டபிள்.

“எண்பத்தாறுன்னு தெளிவா சொன்னானே” என்ற இன்ஸ்பெக்டர், பூட்டியிருந்த எதிர் ரூமை யோசனையோடு பார்த்தார். 87-ம் நம்பர் அறை அது.

சட்டென்று மனதில் ஒரு ஃப்ளாஷ் அடித்தது. “வாங்க, ஒன்பதாவது ஃப்ளோருக்குப் போவோம். க்விக்!” என்றபடி  படிகளில் தடதடத்து ஏறினார்.

ஒன்பதாவது தளத்தில், வரிசையாக இருந்த அறைகளின் மூடிய கதவுகளைப் பார்த்துக்கொண்டே சென்ற ராஜசேகர், ஓர் அறையின் முன் நின்றார்.

அவரின் உடம்பில் விறைப்பு ஏறியது. “கான்ஸ்டபிள்ஸ்... பி அலர்ட்! இங்கதான் அந்தக் கும்பல் இருக்கு. உங்க பிஸ்டல்களைத் தயாரா வெச்சுக்கோங்க. ஃபயரிங் பண்ண வேண்டி வரலாம்” என்று எச்சரித்துவிட்டு, காலிங்பெல்லை அழுத்தினார்.
கதவு திறந்த விநாடியில், தள்ளிக்கொண்டு அதிரடியாக உள்ளே நுழைந்தது போலீஸ் படை. அங்கிருந்த ஐந்து பேரையும் கொத்தாகச் சுற்றிவளைத்து மடக்கியது.

ஆம்... ராஜசேகருக்கு வந்த இன்ஃபர்மேஷன் உண்மைதான். அவர்கள் தீவிரவாதிகள்தான்.

அது சரி, தீவிரவாதிகள் இருந்த அறை எண் என்ன? ரூம் நம்பர் 86-ல் அவர்கள் இருப்பதாக அந்த இளைஞன் தெளிவாகச் சொல்லியும், அவர்கள் இந்த அறையில் இருக்கிறார்கள் என்பதை இன்ஸ்பெக்டர் ராஜசேகர் எப்படி யூகித்தார்?

கடைசி தேதி: 15.06.2019

சுட்டி டிடெக்டிவ் போட்டி - 4 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு