உங்க சூப்பர் மூளைக்கு ஒரு துப்பறியும் சவால் போட்டி. ஒவ்வோர் இதழிலும் ஒரு கதையும் படங்களும் இடம்பெறும். அவற்றை உன்னிப்பாகப் படித்து, கடைசியில் கேட்கப்படும் கேள்விக்குச் சரியான பதிலை எழுத வேண்டும். கவனம்: விடைக்கான க்ளூ ஓவியத்திலும் ஒளிந்திருக்கலாம்.

இதோ, இந்த இதழுக்கான போட்டி. விடையைக் கண்டுபிடித்து, 46ஆம் பக்கத்து கூப்பனில் எழுதி, விவரங்களைப் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், ‘பரிசு’ என்கிற தலைப்பில், நான்கு வரியில் கவிதை எழுதுங்கள். பரிசை வெல்லுங்கள்.

சிக்கிய தாய் மாமன்

சரண்ராஜ் கில்லாடிப் பேர்வழி. டிப்டாப்பாக டிரஸ் பண்ணிக்கொள்வான். எங்கேயாவது செல்வந்தர் வீட்டுத் திருமண நிகழ்வுகள் நடப்பது தெரிந்தால், அங்கே இயல்பாகப் புகுந்துவிடுவான். மறக்காமல், அந்த நிகழ்வுக்கான ஆடம்பரமான இன்விடேஷனில் ஒன்றையும் எப்படியோ கைப்பற்றி, தன் பெயர் எழுதி வைத்துக்கொள்வான். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, கையில் ஒரு பெரிய பரிசுப் பெட்டியையும் ரெடி செய்து எடுத்துச்செல்வான். உள்ளே பரிசுப் பொருள் எதுவும் இருக்காது. இரண்டு செங்கற்களும் காகிதக் குப்பைகளும்தான் இருக்கும்.

கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து, பெண்களின் நகைகள், ஆண்களின் பர்ஸுகள் எனக் கிடைப்பதை எல்லாம் தேட்டை போட்டுவிட்டு, எஸ்கேப் ஆகிவிடுவான்.

அப்படித்தான் ஒருநாள், அந்த வி.ஐ.பி. வீட்டு விசேஷத்துக்கும் சென்றான். அவன் போதாத நேரமோ என்னவோ, வெளியே காவலில் இருந்த ஒரு போலீஸ்காரர் அவனை மடக்கிவிட்டார்.

“சார், இன்விடேஷன் இருக்கா?”

“இருக்கு சார்” என்று எடுத்துக் காண்பித்தான். பளபள திருமண உறையின்மீது, ‘திரு.சரண்ராஜ் அண்டு ஃபேமிலி’ என்று கோல்டு கலர் ஸ்கெட்சால் எழுதப்பட்டிருந்தது.

“நீங்கதான் சரண்ராஜா?” என்று கேட்டார் போலீஸ்காரர்.

“யெஸ்” என்றான் மிடுக்காக.

“ஆதார் அட்டை இருக்கா?”

எடுத்துக் காண்பித்தான் சரண்ராஜ்.

“நீங்க மாப்பிளை வீடா, பெண் வீடா?”

“எதுக்கு இப்படியெல்லாம் குறுக்கு விசாரணை பண்ணி, கெஸ்ட்டை இன்சல்ட் பண்றீங்க?” என்று கேட்டான் சரண்ராஜ், கோபமான குரலில்.

“சார், அது எங்க டியூட்டி. கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க’’ என்ற போலீஸ்காரர் குரலிலும் கண்டிப்பு இருந்தது.

“சரி, இப்ப உங்களுக்கு என்ன தெரியணும்… நான் பிள்ளை வீடா, பொண் வீடான்னுதானே? பிள்ளை வீடுதான்.”

“ஓகே! இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போங்க. மாப்பிள்ளை பேரு என்ன?”

அவரை ஏற இறங்கப் பார்த்த சரண்ராஜ், “விசு என்கிற விஸ்வநாதன். பி.டெக். மாப்பிள்ளை வேற யாருமில்ல, சார்… என் அக்கா மகன்தான். நான் அவனுக்குச் சொந்தத் தாய் மாமா. எங்கிட்டயேவா..? உள்ளே விடுங்க. இப்படி வாசல்லயே நிறுத்தி, விசாரணைங்கிற பேர்ல டார்ச்சர் பண்ணாதீங்க. விசுவுக்குத் தெரிஞ்சுதுன்னா உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவான்” – மிடுக்காகச் சொல்லிவிட்டு, உள்ளே நுழைய முயன்றான் சரண்ராஜ்.

லத்தியால் தடுத்து நிறுத்தினார் போலீஸ்காரர்.

“மிஸ்டர் ஃப்ராடு, கொஞ்சம் எங்க கேபினுக்கு வாங்க. உங்க மேல கேஸ் ஃபைல் பண்ண வேண்டியிருக்கு” என்று அவனைத் தள்ளிக்கொண்டு போனார் போலீஸ்காரர்.

எதனால் அவருக்கு சரண்ராஜ் மீது அப்படியோர் அழுத்தமான சந்தேகம் வந்தது என்று சொல்ல முடியுமா?

கண்டுபிடித்து சொல்லுங்கள்... பரிசை வெல்லுங்கள்!

கடைசி தேதி: 30.06.2019