அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, தோர் இப்படி ஆயிரம் சூப்பர்ஹீரோக்கள் வந்தாலும், சுட்டிகளுக்கு ஸ்பைடர்மேன்தான் என்றுமே ஃபேவரைட். அந்தச் சிலந்தி மனிதன் இந்த ஜூலையில் பட்டையைக் கிளப்ப வருகிறார்.

ஒரு சொடுக்கு மூலம் பல சூப்பர்ஹீரோக்களைக் காணாமல் போகச்செய்த தேனோஸ் (அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்) சதியில் சிக்கியவர்களில் நம்ம சிலந்தி மனிதனும் ஒருவர். மீண்டும் ஸ்பைடர்மேனைப் பார்ப்போமா என்று ஏங்கிய சுட்டிகளுக்கு, ‘ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்’ படத்தின் டிரெய்லர் ஆறுதல் அளித்திருந்தது.

எப்படித் திரும்பிவருகிறார் என்பதற்கு ஏப்ரல் மாதம் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ விடையளித்தது. அதில், காலத்துடன் போர் புரிந்து, தேனோஸின் திட்டத்தைத் தகர்த்தனர் அவெஞ்சர் சூப்பர்ஹீரோக்கள். இறுதிப் போரில் அயர்ன்மேன் இறந்துவிட, அவர் விட்டுச்செல்லும் இடத்தை ஸ்பைடர்மேன் நிரப்புவாரா என்ற கேள்விக்குப் பதில் அளிப்பதுதான், ‘ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்’.

தேனோஸினால் பாதிக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த உலகுக்குத் திரும்பும் பீட்டர் பார்க்கர், மீண்டும் பள்ளியில் சேருகிறார். அங்கே நண்பர்களுடன் சேர்ந்து ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி ஜாலியாகக் கிளம்பியவரை கடமை சும்மா விடுமா? உலகைக் காக்கும் பொறுப்பும் வந்துசேருகிறது. அவெஞ்சர்ஸை ஒருங்கிணைத்த நிக் ஃபியூரி, அந்தப் பொறுப்பை கொடுக்கிறார். வேறு ஒரு பிரபஞ்சத்திலிருந்து சூப்பர் பவருடன் வரும் மிஸ்டீரியோ என்கிறவனை ஸ்பைடர்மேனுக்கு அறிமுகப் படுத்துகிறார் நிக் ஃபியூரி. உண்மையில் யார் அவன்? பிரச்னைகளை ஸ்பைடர்மேன் எப்படித் தீர்க்கிறார்? அதிரடி, காமெடி கலந்து வருகிறது ‘ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்’.

ஸ்பைடர்மேனாக டாம் ஹாலந்து. மிஸ்டீரியோவாக பிரபல நடிகர், ஜேக் ஜிலேன்ஹால் நடிக்கிறார்கள். பீட்டர் பார்க்கரின் அத்தை மற்றும் நண்பர்கள் மீண்டும் இதில் அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள்.

இந்தப் படம்தான் அடுத்த மார்வெல் சூப்பர்ஹீரோ படங்கள் எதை நோக்கிச் செல்லப்போகிறது என்பதை நமக்குக் காட்டும். ‘ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்’ அமெரிக்காவில் மட்டுமே படமாக்கப்பட்டது. இதுவோ, லண்டன், இத்தாலி, பெர்லின், நெதர்லாந்து, மெக்ஸிகோ, ஆல்ப்ஸ் மலைத்தொடர் எனப் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது.

சிலந்தி மனிதனுடன் சேர்ந்து நாமும் உலகைச் சுற்றி வரலாமா?

- ம.காசி விஸ்வநாதன்