உங்க சூப்பர் மூளைக்கு ஒரு துப்பறியும் சவால் போட்டி. ஒவ்வோர் இதழிலும் ஒரு கதையும் படங்களும் இடம்பெறும். அவற்றை உன்னிப்பாகப் படித்து, கடைசியில் கேட்கப்படும் கேள்விக்குச் சரியான பதிலை எழுத வேண்டும். கவனம்: விடைக்கான க்ளூ ஓவியத்திலும் ஒளிந்திருக்கலாம்.

இதோ, இந்த இதழுக்கான போட்டி. விடையைக் கண்டுபிடித்து, 26ஆம் பக்கத்து கூப்பனில் எழுதி, விவரங்களைப் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், ‘வகுப்பறை’ என்கிற தலைப்பில், நான்கு வரியில் கவிதை எழுதுங்கள். பரிசை வெல்லுங்கள்.

கறை கரம்... யார் கரம்?

அந்த வகுப்பில் உள்ள மாணவர்களில் தினேஷ் மட்டும் ரொம்ப சேட்டைக்காரப் பையன்.

ரப்பர் பல்லியை சக மாணவர்கள் மேல் திடீரெனத் தூக்கிப் போட்டு, அவர்களை அலறவைப்பான். யாராவது புதுசாக நோட்டுப் புத்தகம் வாங்கி வந்திருப்பது தெரிந்தால் போச்சு.

அதை எடுத்துப் பிரித்து, கைக்கு வந்த பக்கங்களில் பேனாவால் கன்னா பின்னாவென்று கிறுக்கி வைத்துவிட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவான்.

கோடை விடுமுறை முடிந்து அன்றைக்குதான் பள்ளிக்கூடம் திறந்தது. இடைப்பட்ட லீவு நாள்களில், அந்தப் பள்ளிக்குப் புது டிஸ்டெம்பர் அடித்து, வண்ணமயமாக ஆக்கியிருந்தது பள்ளி நிர்வாகம். வகுப்பறைகள் எல்லாம் புது வண்ணத்தில் ஜொலித்தன.

முதல் நாளில், அந்த வகுப்பறைக்குள் தினேஷ்தான் முதலாவதாக வந்தான். சுவர்கள் அப்பழுக்கு இல்லாமல் புத்தம்புதுசாக டிஸ்டெம்பர் அடித்திருப்பதைக் கண்டதும், ஏதாவது கிறுக்குத்தனம் செய்ய வேண்டுமென்று மனசு பரபரத்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். அவனைத் தவிர, அங்கு வேறு யாருமில்லை.

தன் பையிலிருந்து பேனாவை எடுத்தான். மூடியைத் திறந்து, பேனாவின் கழுத்தைத் திருகினான். கறுப்பு இங்க்கைக் கொஞ்சம் உள்ளங்கையில் கொட்டிக்கொண்டான்.

பின்பு, தன் கையை அழுத்தமாக மூடித் திறந்து, பிசைந்து, உள்ளங்கைப் பகுதி முழுவதிலும் இங்க் பரவிப் படியுமாறு செய்துகொண்டான்.

பின்னர், இளம் மஞ்சள் டிஸ்டெம்பர் பூசியிருந்த சுவர் அருகே போனான். அதில், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தன் கைத் தடத்தை இரண்டு இடங்களில் பதித்தான். கறுப்பு மசியில் அவன் கை அச்சாக சுவரில் பதிந்தது.

இப்போது, நீங்கள் இந்தப் பள்ளிக்குப் புதிதாக வந்திருகும் மாணவர். புதிய மாணவர் மட்டுமா? சுட்டி துப்பறிவாளரும் ஆயிற்றே. உங்கள் அறிவுத்திறன் பற்றி தெரிந்த ஆசிரியர், அந்த வகுப்பின் ஆறு மாணவர்களை சுவர் அருகில் நிறுத்தி இருக்கிறார்.

இதோ… அந்த ஆறு மாணவர்கள். அவர்கள் நின்றிருக்கும் விதத்தை உற்றுப் பாருங்கள். உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்.

1... 2... 3... 4... 5... 6... இவர்களில் யார் தினேஷ் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

விடையைக் கண்டுபிடித்து அந்த எண்ணை விடைக்கான கூப்பனில் எழுதி அனுப்புங்கள்... பரிசை வெல்லுங்கள்!

ஓவியம்: ராமமூர்த்தி

கடைசி தேதி: 15.07.2019