அம்மாவும் அப்பாவும் சமையல் அறையில் மும்முரமாக இருந்தார்கள். விடுமுறைக்கு உறவினர்களும் குழந்தைகளும் வந்திருந்தனர். அனைவரும் முகாம் இட்டிருந்தது, தேனி வீட்டில். தேனியைச் சுற்றி, சுற்றுலாத் தலங்களுக்குப் பஞ்சமே இல்லை.

பெரியகுளம் பக்கமாகப் போனால், கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணைக்கட்டு, வத்தலக்குண்டுக்குப் போகும் வழியில் அரசு பழப்பண்ணை. இன்னும் கொஞ்சம் எட்டிப் போட்டால் மலைகளின் இளவரசி கொடைக்கானலே வந்துவிடுவாள்.

ஆண்டிபட்டி திசையில் புகழ்பெற்ற வைகை அணை. சின்னமனூரிலிருந்து பிரிந்தால் மேகமலை. கம்பம் பக்கமாக சுருளித்தீர்த்தம் அருவி, குமுளி, வாகமண் என்று ஏகப்பட்ட இடங்கள். கொஞ்சம் திசை திரும்பினால், போடி மெட்டு, ராஜாக்காடு, மூணாறு ரோடு என்று குளுகுளு மலைப்பகுதி.

அனைத்துமே காலையில் கிளம்பினால், சுற்றிப் பார்த்துவிட்டு இரவே திரும்பிவிடலாம். அப்படியான தயாரிப்புகளில்தான் அந்தக் குடும்பம் இருந்தது. ஹோட்டல்களில் சாப்பிட்டு வயிற்றையும் காசையும் கெடுத்துக்கொள்ளாமல், சப்பாத்தி, புளியோதரை போன்றவற்றை கட்டுச்சாதமாகக் கட்டிக்கொள்ளும் திட்டம்.

இது வழக்கமாகப் போகும்போது நடப்பது. இப்போது உறவினர்கள் வந்திருக்கிறார்களே… விதவிதமான பலகாரங்களையும் செய்வதில் அம்மா மும்முரம் காட்டினார். அம்மாவும் அப்பாவும் ஓய்வு நேரத்தில் உள்ளூர் சமையல் வகுப்பில் சேர்ந்திருந்ததும் கூடுதல் காரணம்.

இப்போதும் நொறுக்குத் தீனி தயாரிப்பதில்தான் இருவரும் பிஸியாக இருந்தார்கள். சென்னையிலிருந்து வந்திருந்த அக்ஷதா, புதிதாக ஒரு பண்டம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அதன் பெயர், காஜு கத்லி. ஏதோ ஹோட்டலில் சாப்பிட்டாளாம். நன்றாக இருந்ததாம். மிக்சர், மைசூர்பா வகையறாவோடு அதையும் செய்ய களத்தில் இறங்கிவிட்டார்கள்.

கொடைக்கானல் பயணம் தொடங்கியது. சரோஜா பங்களா என்ற தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அது மெயின் கொடைக்கானலில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவு உள்ளே போனால், காட்டுப் பகுதிக்குள் இருக்கும். அடர்ந்த மரங்களுக்கு ஊடாக குளிர், குருத்தெலும்பைத் துளைக்கும். வீட்டுக்கு உள்ளேயே ஒவ்வோர் அறையிலும் ‘ஃபயர் ப்ளேஸ்’ இருக்கும். அதில், கணகண என்று நெருப்பு எரியும். ஹாலிவுட் ஹாரர் படத்தின் பங்களா மாதிரின்னு வெச்சுக்கங்களேன்.

வண்டி அந்த இடத்தை நெருங்கியபோது, ‘‘அக்ஷதா, டவர் வராத போனை நோண்டியது போதும். வெளியே இயற்கைக் காட்சிகளைப் பாரு’’ என்றார் அக்ஷ்தாவின் அம்மா.

பங்களாவுக்கு வந்து கொஞ்ச நேர அதிரிபுதிரி, ஓய்வுக்குப் பிறகு, நடுக்கூடத்தில் அந்தாக்ஷரி களை கட்டியது. ஆளாளுக்கு கர்ண கடூரமான குரலில் பாட ஆரம்பித்தனர்.

பாட்டை நிறுத்தி அம்மா, “நான் போய் ஸ்நாக்ஸ் கொண்டாறேன்” என்றார்.

போனவர், ஸ்நாக்ஸோடு வரவில்லை. அதற்குப் பதிலாக குரல்தான் வந்தது. “என்னங்க… கொஞ்சம் வந்துட்டுப் போங்க…”

என்னங்க என்று அம்மா சொன்னால் அது அப்பாவைத்தான் குறிக்கும். அவர் எழுந்து வேக வேகமாகப் போனார்.

சிறிது நேரம் அமைதி. தொடர்ந்து அம்மாவும் அப்பாவும் கூடத்துக்கு வந்தார்கள். “பிள்ளைகளா… எல்லாரும் கவனிங்க” என்று ஆரம்பித்தார் அம்மா. “ஒரு சின்ன தப்பு நடந்திருக்கு. கொலைக் குத்தம் இல்லை. ஆனால், குட்டித் திருட்டு’’ என்றார்.

உடனே அப்பா, “அதுவும் பெரிய விஷயம் இல்லை. வழக்கமாகப் பாட்டுப் பாடியே பொழுதைப் போக்காம ஒரு துப்பறியலாம் வேலையில் இறங்கலாம்’’ என்றார் அப்பா.

“அப்பா, முன்னுரையே சொல்லிட்டிருக்கீங்க. விஷயம் என்னன்னு சொல்லுங்க” என்றான் அபராஜித்.

“பொறுடா சொல்றேன். நாம கொண்டுவந்த காஜு கத்லி ஸ்வீட் பாக்ஸ் காணோம். அந்த ரூம் பக்கம் போயிட்டு வந்தவங்க கையைத் தூக்குங்க” என்றார்.

பசங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஓரிரு கைகள் உயர்ந்தன. மற்ற பிள்ளைகள் கமுக்கமாக இருந்தனர். “சுரேஷ், நீ ரூமுக்குப் போனதை பார்த்தேனே...’’ என்றார் அப்பா.

“சாரி அங்கிள், மறந்துட்டேன்’’ என்றபடியே கையைத் தூக்கினான். அவனைப் பார்த்து, அக்ஷதாவும் கையைத் தூக்கினாள்.

“அந்த ரூமுக்குள்ளே போனவங்க... அபராஜித், அக்ஷதா, சுரேஷ், விஷ்வா, ஜனனி. சொல்லுங்க… உங்களில் யார் அந்த பாக்ஸை எடுத்தது? அல்லது எடுத்ததை வேற யாராவது பார்த்தீங்களா?” என்று கேட்டார் அம்மா.

ஒவ்வொருவராகப் பதில் சொல்லத் தொடங்கினர்.

“அந்த ரூமுக்குள்ள ஃபயர் ப்ளேஸ்ல நெருப்பு அணைஞ்சிருந்துச்சு. குளிரா இருந்ததால உடனே திரும்பிட்டேன்” என்றான் அபராஜித்.

“நான் போனப்போ, தீனிப் பண்டாரம் ஜனனியும் உள்ள வந்தா. ஆனா, என் மொபைல்ல ஃபேஸ்புக் நோடிஃபிகேஷன் வந்ததால, ஜனனி என்ன பண்ணினான்னு நான் பாக்கலை” என்றாள் அக்ஷதா.

“ஸ்நாக்ஸ் பாக்ஸ் இருந்த இடத்துக்குப் பக்கத்திலேயே நான் போகலை” என்று அவசரமாகச் சொன்னாள் ஜனனி.

சுரேஷ், “நானும் விஷ்வாவும் ஹைடு அண்டு சீக்ல ஒளிஞ்சுக்கிறதுக்காக உள்ளே போனோம். ஜனனி இருந்ததால உடனே வெளியே வந்துட்டோம்” என்றான்.

அப்பா சிரித்தார். “அக்ஷதா, நீதான் காஜு கத்லி பாக்ஸை எடுத்திருக்கே. அது தப்பில்லை. ஆனா, தின்னுட்டு, அந்த பாக்ஸை என்ன பண்ணினே? அதை மட்டும் சொல்லு” என்றார்.

வெட்கத்தோடு சிரித்தபடியே, “பாக்ஸை பால்கனி பக்கமா எடுத்துட்டுப் போய்த் திறக்கலாம்னு நினைச்சேன். குளிர்ல கை நடுங்கி வெளியே விழுந்திடுச்சு” என்று தலையைக் குனிந்துகொண்டாள்.

பிறகு, மரங்கள் அடர்ந்த அந்தப் பகுதிக்கு அப்பா சென்று பாக்ஸை மீட்டு வந்தார். எல்லோரும் சேர்ந்து ருசித்து சாப்பிட்டார்கள்.

அது சரி, சரியான ஆளை அப்பா எப்படிக் கண்டுபிடித்தார்? உங்களால் சொல்ல முடியுமா?

விடை:

மலையின் காட்டுப் பகுதிக்குள் செல்போன் டவரோ, நெட்வொர்க் சிக்னலோ இல்லை. அப்படி இருக்க, ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் வந்ததாக அக்ஷயா பொய் சொன்னாள். அதை வைத்துத்தான் கண்டுபிடித்தார்.